தேவனுக்கே மகிமையுண்டாவதாக

பிலிப்பியர் 4:9

நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவினிடத்தில் சமாதானத்துக்குரியவைகளை நாட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளி்ல் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவினால் யோர்தானை கடக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 நாளாகமம் 12:16-18

பின்னும் பென்யமீன் புத்திரரிலும் யூதாபுத்திரரிலும் சிலர் அரணான ஸ்தலத்தில் இருக்கிற தாவீதினிடத்தில் வந்தார்கள்.

தாவீது புறப்பட்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களுக்கு உத்தரவுகொடுத்து: நீங்கள் எனக்கு உதவிசெய்ய சமாதானமாய் என்னிடத்தில் வந்தீர்களானால், என் இருதயம் உங்களோடு இசைந்திருக்கும்; என் கைகளில் கொடுமை இல்லாதிருக்க, என்னை என் சத்துருக்களுக்குக் காட்டிக்கொடுக்க வந்தீர்களேயாகில், நம்முடைய பிதாக்களின் தேவன் அதைப் பார்த்துக் கண்டிப்பாராக என்றான்.

அப்பொழுது அதிபதிகளுக்குத் தலைவனான அமாசாயின்மேல் ஆவி இறங்கினதினால், அவன்: தாவீதே, நாங்கள் உம்முடையவர்கள்; ஈசாயின் குமாரனே, உமது பட்சமாயிருப்போம்; உமக்குச் சமாதானம், சமாதானம்; உமக்கு உதவி செய்கிறவர்களுக்கும் சமாதானம்; உம்முடைய தேவன் உமக்குத் துணை நிற்கிறார் என்றான்; அப்பொழுது தாவீது அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களைத் தண்டுக்குத் தலைவராக்கினான்.

மேற்கூறிய வசனங்களில், தாவீதினிடத்தில் சேர்ந்தவர்களில் காத் புத்திரர் போக, பென்யமீன் புத்திரரிலும், யூத புத்திரரிலும் சிலர் அரணான ஸ்தலத்திலிருககிற தாவீதினிடத்தில் வந்தார்கள்.  தாவீது புறப்பட்டு அவர்களிடத்திற்கு எதிர்கொண்டு போய், அவர்களுக்கு உத்தரவுக் கொடுத்து: நீங்கள் எனக்கு உதவி செய்ய சமாதானமாய் என்னிடத்தில் வந்தீர்களானால், என் இருதயம் உங்களோடு இசைந்திருக்கும்; என் கைகளில் கொடுமை இல்லாதிருக்க என் சத்துருக்களுக்கு காட்டிக்கொடுக்க வந்தீர்களேயாகில்; நம்முடைய பிதாக்களின் தேவன் அதை பார்த்துக் கண்டிப்பாராக என்றான்.  அப்போது அதிபதிகளுக்கு  தலைவனான அபிசாயின் மேல் ஆவி இறங்கினதினால் அவன் தாவீதை நோக்கி; நாங்கள் உம்முடையவர்கள், ஈசாயின் குமரனே,உமது பட்சமாயிருப்போம் என்று சொல்லி, உமக்கு சமாதானம், சமாதானம், உமக்கு  உதவி செய்கிறவர்களுக்கு சமாதானம்; உம்முடைய தேவன் உமக்கு துணை நிற்கிறார் என்றான்; அப்பொழுது தாவீது அவர்களை சேர்த்துக்கொண்டு, அவர்களை தண்டுக்கு தலைவராக்கினான்.  

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்கள், கர்த்தராகிய கிறிஸ்துவுக்கு தேவன் தாவீதை திருஷ்டாந்தப்படுத்தி, எல்லா கோத்திரமும் தாவீதினிடத்தில் வந்து சேருகிறார்கள்.  ஆனால் பகைவனுக்கு தம்மை காட்டிக்கொடுக்கிறவர்களை கர்த்தர் கண்டிப்பார் என்று சொல்கிறதைப் பார்க்கிறோம்.  ஆனால் தாவீதினிடத்தில் சேருகிறவர்களை அவன் எதிர்கொண்டு போய் ஏற்றுக்கொள்கிறான்; மற்றும் சமாதானத்திற்காக என்னிடத்திற்கு வந்தீர்களானால் என் இருதயம் உங்களோடிருக்கும் என்கிறான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் அவரோடு சேருகிறவர்களாகிய நாம் சமாதானத்திற்குரிய காரியங்களை செய்கிறவர்களாகயிருந்தால் அவர் இருதயம் எப்போதும் நம்மோடிருந்து நம்மை காக்கிறவராயிருப்பார்.  எப்போதும் நமக்கு அடைக்கலமும், பெலனும் ,ஆபத்து காலத்தில் அனுகூலமான துணையுமாயிருப்பார். மேலும் ஒவ்வொரு நாளிலும் நம்மை உயர்த்துகிறவராயிருக்கிறார்.  இப்படியாக நாம் கிறிஸ்துவினிடத்தில் சேருகிறவர்களாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.