தேவனுக்கே மகிமையுண்டாவதாக
அப்போஸ்தலர் 2:47
தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் சேனைகள்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவினிடத்தில் சமாதானத்துக்குரியவைகளை நாட வேண்டும்.
அதுவுமல்லாமல் அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1 நாளாகமம் 12:19
சவுலின்மேல் யுத்தம்பண்ணப்போகிற பெலிஸ்தருடனேகூடத் தாவீது வருகிறபோது, மனாசேயிலும் சிலர் அவன் பட்சமாய்ச் சேர்ந்தார்கள்; பெலிஸ்தரின் பிரபுக்கள் யோசனைபண்ணி, அவன் நம்முடைய தலைகளுக்கு மோசமாய்த் தன் ஆண்டவனாகிய சவுலின் பட்சமாய்ப் போவான் என்று அவனை அனுப்பிவிட்டார்கள்; அதனால் அவர்கள் இவர்களுக்கு உதவிசெய்யவில்லை.
மேற்கூறப்பட்ட வசனங்களில் சவுலோடேக்கூட யுத்தம்பண்ணபோகிற பெலிஸ்தருடனேகூட தாவீது வருகிற போது மனாசேயிலும் சிலர் தாவீதோடேக்கூட பட்சமாய் சேர்ந்தார்கள்; பெலிஸ்தரின் பிரபுக்கள் யோசனைப்பண்ணி அவன் நம்முடைய தலைகளுக்கு மோசமாய் தன் ஆண்டவனாகிய சவுலுக்கு பட்சமாயு போவான் என்று அவனை அனுப்பி விட்டார்கள்; அதனால் அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யவில்லை. அப்படியே அவன் சிக்லாகுக்கு திரும்பிப் போகையில்
1 நாளாகமம் 12:20
அப்படியே அவன் சிக்லாகுக்குத் திரும்பிப்போகையில், மனாசேயில் அத்னாக், யோசபாத், எதியாவேல், மிகாயேல், யோசபாத், எலிகூ, சில்த்தாயி என்னும் மனாசே கோத்திரத்தாரின் ஆயிரத்துச் சேர்வைக்காரர் அவன் பட்சமாய் வந்தார்கள்.
மேற்கூறப்பட்ட மனாசே கோத்திரத்தாரின் சேர்வைக்காரர் அவன் பட்சமாய் வந்தார்கள். அந்த தண்டுக்கு விரோதமாய் இவர்கள் தாவீதுக்கு உதவி செய்தார்கள்; இவர்கள் எல்லாரும் பராக்கிரமசாலிகளும் இராணுவத்தில் சேர்வைக்காரருமாயிருந்தார்கள். அக்காலத்திலே நாளுக்கு நாள் தாவீதுக்கு உதவி செய்யும் மனுஷர் அவனிடத்தில் வந்து சேர்ந்தபடியால், அவர்கள் தேவ சேனையைப் போல மகா சேனையானார்கள்.
பிரியமானவர்களே, கர்த்தரின் சேனை மகா திரளாய் கூட்டப்படுகிறது என்பதற்கு மேற்கூறப்பட்ட வசனங்கள் திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது. கர்த்தரிடமாய் மனந்திரும்பி, இரட்சிப்பட்டவர்களை கர்த்தர் அனுதினம் தமது சபையில் சேர்த்துக்கொள்கிறார். கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களாகிய பராக்கிரமசாலிகள் கர்த்தருக்காக யுத்த சன்னதராகயிருப்பார்கள். அவர்கள் ஆவிக்குரிய யுத்தத்தால் மாம்ச சிந்தையை மேற்க்கொள்வார்கள். ஆதலால் யுத்தம் செய்வது நாமல்ல, நம்மில் வசிக்கிற கிறிஸ்து. அப்படியாக நாமும் கர்த்தருடைய ஜீவ வார்த்தையோடு ஐக்கியப்பட்டிருப்போமானால், அந்த ஐக்கியம் பிதாவோடும், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் உண்டாயிருக்கிறது. இப்படியாக நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.