தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஆபகூக் 3:18
நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்குள் மகிழ்ச்சியடைய வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் சேனைகள் என்பதனைக் குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1 நாளாகமம் 12: 23-40
கர்த்தருடைய வாக்கின்படியே, சவுலின் ராஜ்யபாரத்தைத் தாவீதினிடமாய்த் திருப்ப, எப்ரோனிலிருக்கிற அவனிடத்துக்கு வந்த யுத்தசன்னத்தரான தலைவரின் இலக்கமாவன:
யூதாபுத்திரரில் பரிசையும் ஈட்டியும் பிடித்து, யுத்தசன்னத்தரானவர்கள் ஆறாயிரத்து எண்ணூறுபேர்.
சிமியோன் புத்திரரில் பராக்கிரமசாலிகளாகிய யுத்தவீரர் ஏழாயிரத்து நூறுபேர்.
லேவி புத்திரரில் நாலாயிரத்து அறுநூறுபேர்.
ஆரோன் சந்ததியாரின் அதிபதியாகிய யோயதாவும், அவனோடிருந்த மூவாயிரத்து எழுநூறுபேரும்,
பராக்கிரமசாலியான சாதோக் என்னும் வாலிபனும், அவன் தகப்பன் வம்சத்தாரான இருபத்திரண்டு தலைவருமே.
பென்யமீன் புத்திரரான சவுலின் சகோதரரில் மூவாயிரம்பேர்; அதுவரைக்கும் அவர்களில் மிச்சமானவர்கள் சவுலின் குடும்பத்தைக் காப்பாற்றப்பார்த்தார்கள்.
எப்பிராயீம் புத்திரரில் தங்கள் பிதாக்களின் வம்சத்தில் பேர்பெற்ற மனுஷரான பராக்கிரமசாலிகள் இருபதினாயிரத்து எண்ணூறுபேர்.
மனாசேயின் பாதிக்கோத்திரத்தில் தாவீதை ராஜாவாக்குகிறதற்கு வரும்படி, பேர்பேராகக் குறிக்கப்பட்டவர்கள் பதினெண்ணாயிரம்பேர்.
இசக்கார் புத்திரரில், இஸ்ரவேலர் செய்யவேண்டியது இன்னதென்று அறிந்து காலாகாலங்களுக்குத் தகுந்த யோசனை சொல்லத்தக்க தலைவர்கள் இருநூறுபேரும், இவர்கள் வாக்குக்குச் செவிகொடுத்த இவர்களுடைய எல்லாச் சகோதரருமே.
செபுலோன் புத்திரரில் சகலவித யுத்த ஆயுதங்களாலும் யுத்தம் செய்கிறதற்கும், தங்கள் அணியைக் காத்து நிற்கிறதற்கும் பழகி, வஞ்சனைசெய்யாமல் யுத்தத்திற்குப் போகத்தக்கவர்கள் ஐம்பதினாயிரம்பேர்.
நப்தலி புத்திரரில் ஆயிரம் தலைவர்கள் பரிசையும் ஈட்டியும் பிடித்த அவர்களோடேகூட இருந்தவர்கள் முப்பத்தேழாயிரம்பேர்.
தாண் புத்திரரில் யுத்தத்திற்குத் தேறினவர்கள் இருபத்து எண்ணாயிரத்து அறுநூறுபேர்.
ஆசேர் புத்திரரில் யுத்தத்திற்குத் தேறினவர்களாய் சேவகம்பண்ணப்போகத்தக்கவர்கள் நாற்பதினாயிரம்பேர்.
யோர்தானுக்கு அக்கரையான ரூபனியரிலும், காத்தியரிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரிலும், யுத்தம்பண்ண சகலவித ஆயுதங்களையும் தரித்தவர்கள் நூற்றிருபதினாயிரம்பேர்.
தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்குகிறதற்கு, இந்த யுத்தமனுஷர் எல்லாரும் அணி அணியாய் வைக்கப்பட்டவர்களாக, உத்தம இருதயத்தோடே எப்ரோனுக்கு வந்தார்கள்; இஸ்ரவேலில் மற்ற யாவரும் தாவீதை ராஜாவாக்குகிறதற்கு ஒருமனப்பட்டிருந்தார்கள்.
அவர்கள் அங்கே தாவீதோடேகூட மூன்றுநாள் இருந்து, போஜனபானம்பண்ணினார்கள்; அவர்கள் சகோதரர் அவர்களுக்காகச் சகலத்தையும் ஆயத்தம்பண்ணியிருந்தார்கள்.
இசக்கார், செபுலோன், நப்தலியின் எல்லைமட்டும் அவர்களுக்குச் சமீபமாயிருந்தவர்களும், கழுதைகள்மேலும் ஒட்டகங்கள்மேலும் கோவேறு கழுதைகள்மேலும் மாடுகள்மேலும், தின்பண்டங்களாகிய மா, அத்திப்பழ அடைகள், வற்றலான திராட்சப்பழங்கள், திராட்சரசம், எண்ணெய் ஆடுமாடுகள் ஆகிய இவைகளை வேண்டிய மட்டும் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்; இஸ்ரவேலிலே மகிழ்ச்சியுண்டாயிற்று.
மேற்கூறபட்ட வார்த்தைகளின் படி கர்த்தருடைய வார்த்தையின்படி சவுலின் ராஜ்யபாரத்தை தாவீதினிடமாக திருப்ப, எப்ரோனிலிருக்கிற அவனிடமாக வந்த யுத்த சன்னதரானவர்களின் இலக்கமும் ஒவ்வொரு கோத்திரத்தாரின் பெயரில் எழுதப்பட்டுள்ளது. இவர்கள் எல்லாரும் யுத்த மனுஷர்களாய் அணிஅணியாய் வைக்கப்பட்டவர்களாக உத்தம இருதயத்தோடே எப்ரோனுக்கு வந்தார்கள். மேலும் இஸ்ரவேலில் வந்த மற்ற யாவரும் தாவீதை ராஜாவாக்குகிறதற்கு ஒருமனப்பட்டிருந்தார்கள். அவர்கள் அங்கே தாவீதோடே கூட மூன்று நாள் இருந்து போஜனம் பண்ணினார்கள்; அவர்கள் சகோதரர்கள் அவர்களுக்காக எல்லாம் ஆயத்தம் பண்ணினார்கள். இசக்கார், செபுலோன், நப்தலியின் எல்லை மட்டும், அவர்களுக்கு சமீபமாயிருந்தவர்களும்,கழுதைகள் மேலும், ஒட்டகங்கள் மேலும், கோவேறு கழுதைகள் மேலும், மாடுகள் மேலும், தின்பண்டங்களுமாகிய மா, அத்திபழ அடைகள், வற்றலான திராட்சபழங்கள், திராட்சரசம் எண்ணெய், ஆடுமாடுகள்ஆகிய இவைகளை வேண்டிய மட்டும் ஏற்றிக் கொண்டு வந்தார்கள்; இஸ்ரவேலிலே மகிழ்ச்சியுண்டாயிற்று.
பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களில் கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தபடுத்தியது என்னவென்றால் நம்முடைய ஆத்துமாவுக்கு மகிழ்ச்சியுண்டாக நாம் கர்த்தருடைய பாதத்தில் கிறிஸ்துவினோடு ஐக்கியப்பட்டிருந்து போஜனம் பண்ணுகிறவர்களாக இருக்க வேண்டும். அவ்விதமாக அவருடைய எண்ணெயினால் நாம் அபிஷேகம் பண்ணப்பட்டு, அவருடைய வசனத்தால் தேற்றப்பட்டு, அவருடைய ஆவியினால் சுத்திகரிக்கப்பட்டு, அவருடைய கிருபைகளால் நிறையப்பட்டு, அவருடைய மகிமையினால் அலங்கரிக்கபட்டு; இவ்விதமாக நாம் இரட்சிப்பை அடைந்து கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்போம். இவ்விதமாக நாம் ஆவிக்குரிய வளர்ச்சியில் வளர்சசியடைந்து சத்துருவினோடு எதிர்ப்போம். இப்படியாக கிறிஸ்து நம்மை அவருக்காக ஆயத்தப்படுத்தும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.