தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எசேக்கியல் 34:15

என் ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் சிதறி கிடக்கிற ஜனங்களை ஒன்று சேர்க்கவேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்குள் மகிழ்ச்சியடைய வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 நாளாகமம் 13:1-4 

தாவீது ஆயிரம்பேருக்குத் தலைவரோடும் நூறுபேருக்குத் தலைவரோடும் சகல அதிபதிகளோடும் ஆலோசனைபண்ணி,

இஸ்ரவேல் சபையையெல்லாம் நோக்கி: உங்களுக்குச் சம்மதியும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சித்தமுமாயிருந்தால், இஸ்ரவேலின் தேசங்களிலெல்லாம் இருக்கிற நம்முடைய மற்றச் சகோதரரும், அவர்களோடே தங்கள் வெளிநிலங்களில் இருக்கிற ஆசாரியரும் லேவியரும் நம்மோடே கூடும்படிக்கு நாம் சீக்கிரமாய் அவர்களிடத்துக்கு ஆள் அனுப்பி,

நமது தேவனுடைய பெட்டியைத் திரும்ப நம்மிடத்துக்குக் கொண்டுவருவோமாக; சவுலின் நாட்களில் அதைத் தேடாதேபோனோம் என்றான்.

இந்தக் காரியம் சகல ஜனத்தின் பார்வைக்கும் செம்மையாயிருந்தபடியால், சபையார் எல்லாரும் அப்படியே செய்வோம் என்றார்கள்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் தாவீது ஆயிரம் பேருக்கு தலைவரோடும், நூறு பேருக்கு தலைவரோடும், சகல அதிபதிகளோடும் ஆலோசனைப்பண்ணி இஸ்ரவேல் சபையை எல்லாம் நோக்கி உங்களுக்கு சம்மதியும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு சித்தமுமாயிருந்தால், இஸ்ரவேலின் தேசங்களிலெல்லாம் இருக்கிற நம்முடைய மற்ற சகோதரரும், அவர்களோடே தங்கள் வெளி நிலங்களிலிருக்கிற ஆசாரியரும், லேவியரும் நம்மோடே கூடும்படிக்கு நாம் சீக்கிரமாய் அவர்களிடத்திற்கு ஆள் அனுப்பி நமது தேவனுடைய பெட்டியைத் திரும்ப நம்மிடத்திற்கு கொண்டு வருவோமாக; சவுலின் நாட்களில் தேடாதே போனோம் என்றான்.  இந்த காரியம் சகல ஜனத்தின் பார்வைக்கும் செம்மையாயிருந்தபடியால், சபையார் எல்லாரும் அப்படியே செய்வோம் என்றார்கள். 

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்களில் கர்ததரை ஏற்றுக்கொண்ட மக்களில், சபைகூடும்படிக்கு வராமல் வெளியில் இருக்கிற மக்கள் எல்லாரையும்  நாம் கூட்டும்படியும், அவர்களுக்கு உபதேசிக்கும்படி கர்த்தரின் பெட்டியாகிய தேவவசனம் நம்மில் உண்டாயிருக்க வேண்டும்.  இதுவரை அப்படி ஆத்துமாக்களை தேடாமல் இருந்தால், இனி மேலாவது கர்த்தரின் வார்த்தைகளுக்கு நம்மை தாழ்த்தி ஒப்புக்கொடுத்தவர்களாக அவர்களை நம்மோடு கூடும்படி வரவழைப்போம்.  அப்படியானால் இந்த காரியம் சபை ஜனத்தின் பார்வைக்கு செம்மையாக தோன்றும்.  ஆதலால் கர்த்தரின் பார்வைக்கும், சபையாரின் பார்வைக்கும் கர்த்தரின் சித்தம் செய்கிறவர்களாக ஒப்புக்கொடுப்போம். 

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.