தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபேசியர் 1:3

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவாகிய தேவனுடைய வீடு கர்த்தரின் வசனத்தால் ஆசீர்வதிக்கப்படும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் சிதறி கிடக்கிற இஸ்ரவேலரை ஒன்று சேர்க்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். 

அடுத்தபடியாகநாம் தியானிப்பது என்னவென்றால் 

1 நாளாகமம் 13:5-14 

அப்படியே தேவனுடைய பெட்டியைக் கீரியாத்யாரீமிலிருந்து கொண்டுவரும்படி, தாவீது எகிப்தைச்சேர்ந்த சீகோர் நதிதுவக்கி ஆமாத்தின் எல்லைமட்டுமுள்ள இஸ்ரவேலையெல்லாங்கூட்டி,

கேருபீன்களின் நடுவே வாசம்பண்ணுகிற கர்த்தராகிய தேவனுடைய நாமம் தொழுதுகொள்ளப்படுகிற அவருடைய பெட்டியை யூதாவிலிருக்கிற கீரியாத்யாரீமுக்கடுத்த பாலாவிலிருந்து கொண்டுவரும்படிக்கு, அவனும் இஸ்ரவேலர் அனைவரும் அவ்விடத்திற்குப்போனார்கள்.

அவர்கள் தேவனுடைய பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து ஒரு புது ரதத்தின்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்; ஊசாவும் அகியோவும் ரதத்தை நடத்தினார்கள்.

தாவீதும் சகல இஸ்ரவேலரும் தங்கள் முழுப் பலத்தோடும் தேவனுக்கு முன்பாகச் சுரமண்டலங்களையும் தம்புருகளையும் மேளங்களையும் கைத்தாளங்களையும் பூரிகைகளையும் சேவித்து மகிழ்ச்சியாய் ஆடிப்பாடினார்கள்.

அவர்கள் கீதோனின் களமட்டும் வந்தபோது, மாடுகள் இடறினபடியினால், ஊசா பெட்டியைப் பிடிக்கத் தன் கையை நீட்டினான்.

அப்பொழுது கர்த்தர் ஊசாவின்மேல் கோபம் மூண்டவராகி, அவன் தன் கையை பெட்டியண்டைக்கு நீட்டினதினிமித்தம் அவனை அடித்தார்; அங்கே அவன் தேவசமுகத்தில் செத்தான்.

அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்ததினிமித்தம் தாவீது விசனப்பட்டு, அந்த ஸ்தலத்திற்கு இந்நாள்மட்டும் வழங்கிவருகிற பேரேஸ்ஊசா என்னும் பேரிட்டு,

அன்றையதினம் தேவனுக்குப் பயந்து: தேவனுடைய பெட்டியை நான் என்னிடத்துக்குக் கொண்டுவருவது எப்படியென்று சொல்லி,

பெட்டியைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்திலே கொண்டுவராமல், அதைக் கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே சேர்த்தான்.

தேவனுடைய பெட்டி ஓபேத்ஏதோமின் வீட்டிலே அவனிடத்தில் மூன்றுமாதம் இருக்கையில், கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் தாவீது தேவனுடைய பெட்டியை கீரியாத்யாரீமிலிருந்து கொண்டு வரும்படி, தாவீது எகிப்தை சேர்ந்த சீகோர் நதி துவக்கி ஆமாத்தின் எல்லை மட்டுமுள்ள இஸ்ரவேலையெல்லாங் கூட்டி, கேரூபீன்களின் நடுவே வாசம்பண்ணுகிற கர்த்தராகிய தேவனுடைய நாமம் தொழுதுக்கொள்ளப்படுகிற அவருடைய பெட்டியை யூதாவிலிருக்கிற கிரீயாத்யாரீமுக்கடுத்த  பாலாவிலிருந்து  கொண்டுவரும்படிக்கு, அவனும், இஸ்ரவலர் எல்லாரும் அவ்விடத்திற்கு போனார்கள்.  அவர்கள் பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து புது ரதத்தின் மேல் ஏற்றிக்கொண்டு வந்தார்கள்; ஊசாவும் அகியோவும் ரதத்தை நடத்தினார்கள்.   தாவீதும் சகல இஸ்ரவேலரும் தங்கள் முழு பலத்தோடும் தேவனுக்கு முன்பாக சுரமண்டலங்களையும், தம்புருக்களையும், மேளங்களையும் கைத்தாளங்களையும் பூரிகைகளையும் சேவித்து மகிழ்ச்சியாய் ஆடிப்பாடினார்கள்.    அவர்கள் கீதோனின் களம் வரைக்கும் வந்த போது மாடுகள் இடறினபடியினால் ஊசா பெட்டியை பிடிக்கத் தன் கையை நீட்டினபடியால், கர்த்தர் ஊசாவை அடித்தார்; அதனால் அவன் தேவசமூகத்தில் செத்தான்.  கர்த்தர் ஊசாவை அடித்ததினிமித்தம், தாவீது விசனப்பட்டு, அந்த ஸ்தலத்திற்கு இந்நாள்மட்டும் வழங்கிவருகிற பேரேஸ்ஊசா என்னும் பேரிட்டு, அன்றையதினம் தேவனுக்கு பயந்து: தேவனுடைய பெட்டியை தன்னிடத்தில் கொண்டுவராமல், அதைக் கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே சேர்த்தான்.  தேவனுடைய பெட்டி ஓபேத் ஏதோமின் வீட்டில் அவனிடத்தில் மூன்று மாதம் இருக்கையில் கர்த்தர் ஓபேத் ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்.  

பிரியமானவர்களே, முந்தின வேத வசனங்களில் தேவனுடைய  பெட்டி என்பது வசனத்தால் நிறைந்தவராகிய கிறிஸ்துவை திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  என்னவெனில் அந்த பெட்டி நம்முடைய ஆசீர்வாதத்திற்குரியது; அது தான் கர்த்தரின் வசனம். இந்த வசனம் நாம் ஏற்றுக்கொள்ளும் போது நம் உள்ளமாகிய தேவனுனைய வீடு ஆசீர்வதிக்கப்படுகிறது.  அந்த வசனம்  மிகவும் பரிசுத்தமுள்ளது; இந்த வசனம் நாம் ஏற்றுக்கொண்டு, அந்த வசனத்தால் நாம் நடத்தப்பட வேண்டும்; அப்படி நடத்தப்படுவோமானால் நாம் பரிசுத்தமாக்கப்படுவோம்.  மேலும் பரிசுத்த வாழ்வு வாழ்கிறவர்கள் தான் அதனால் ஆசீர்வாதங்களை சுதந்தரிக்க முடியும்.  அசுத்தமும் அருவருப்புமானவர்கள் அதனை கையாண்டால் கர்த்தரின் கோபம் அவர்கள் மேல் மூளும்.  இதனால் பயந்த தாவீது தன் வீட்டிற்கு தேவனுடைய பெட்டியை எடுத்து செல்லாமல் ஓபேத்ஏதோமின் வீட்டில் வைக்கப்படுகிறது.  அங்கு மூன்று மாதம் இருக்கையில்  கர்த்தர் அந்த வீட்டையும், அவனுக்குண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்.  ஆதலால் பிரியமானவர்களே, கர்த்தராகிய   இயேசுவை ஏற்றுக்கொண்டவர்களாகிய நம்முடைய வாழ்வு எப்போதும் பரிசுத்தமாகவும், கரத்தருக்கு பயந்தும், நடுக்கத்தோடும் அவருடைய வசனத்தால் நாம் நடந்து, அவரை சேவிக்க வேண்டும். அப்படியானால் நம்முடைய ஆத்துமாவாகிய தேவனுடைய வீடு உன்னதங்களிலுள்ள சகல ஆசீர்வாதத்தினால் ஆசீர்வதிக்கப்படும்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.