தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 45:17
உமது நாமத்தை எல்லாத் தலைமுறைகளிலும் பிரஸ்தாபப்படுத்துவேன், இதினிமித்தம் ஜனங்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் துதிப்பார்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் கீர்த்தியை பிரசித்தப்படுத்த வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் சபைகள் பெருகும்படி கிறிஸ்துவினால் பாடுபட வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1 நாளாகமம் 14:12-17
அங்கே அவர்கள் தங்கள் தெய்வங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; தாவீது கற்பித்தபடி அவைகள் அக்கினியாலே சுட்டெரிக்கப்பட்டன.
பெலிஸ்தர் மறுபடியும் வந்து அந்தப் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள்.
அப்பொழுது தாவீது திரும்ப தேவனிடத்தில் விசாரித்ததற்கு, தேவன் நீ அவர்களுக்குப் பின்னாலே போகாமல், அவர்களுக்குப் பக்கமாய்ச் சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,
முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, யுத்தத்திற்குப் புறப்படு; பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க, தேவன் உனக்கு முன்னே புறப்பட்டிருப்பார் என்றார்.
தேவன் தனக்குக் கற்பித்தபடியே தாவீது செய்தபோது, பெலிஸ்தரின் இராணுவத்தைக் கிபியோன் துவக்கிக் காசேர்மட்டும் முறிய அடித்தார்கள்.
அப்படியே தாவீதின் கீர்த்தி சகல தேசங்களிலும் பிரசித்தமாகி, அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் கர்த்தர் சகல ஜாதிகளின்மேலும் வரப்பண்ணினார்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் தாவீது பெலிஸ்தியரை முறியடித்த போது அவர்கள் தங்கள் தெய்வங்களை விட்டு ஓடி போனார்கள்; தாவீது கற்ப்பித்தபடி அவைகள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டன. பெலிஸ்தர் மறுபடியும் வந்து அந்த பள்ளதாக்கிலே இறங்கினார்கள். பின்பு தாவீது தேவனிடத்தில் விசாரித்ததற்கு, தேவன் அவனுக்கு சொன்னது; நீ அவனுக்கு பின்னாலே போகாமல் முசுக்கொட்டை செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும் போது யுத்தத்திற்கு புறப்படு; பெலிஸ்தரின் பாளயத்தை முறியடிக்க, தேவன் உனக்கு முன்னே புறப்பட்டிருப்பார் என்றார். தேவன் கற்பித்தப்படியே தாவீது செய்த போது, பெலிஸ்தரின் இராணுவத்தைக் கிபியோன் துவக்கிக் காசேர் மட்டும் முறிய அடித்தார்கள். அப்படியே தாவீதின் கீர்த்தி சகல தேசங்களிலும் பிரசித்தமாகி, அவனுக்கு பயப்படுகிற பயத்தைக் கர்த்தர் சகல ஜாதிகளின் மேலும் வரபண்ணினார்.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்டிருக்கிற வசனங்களில் கர்த்தர் தாவீதை கொண்டு திருஷ்டாந்தப்படுத்தியது என்னவென்றால் பெலிஸ்த கிரியைகள் நம்மை விட்டு முற்றிலும் அகற்றப்பட்டாலும், அநேகம் உள்ளங்களில் மீண்டும் வந்து அவைகள் வந்து இடம் வகிக்கிறது. ஆதலால் கர்த்தரின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து அதனை முறியடிக்க வேண்டும்; அப்போது நம்மில் கர்த்தரின் கீர்த்தி பிரசித்தமாக்கப்படும். இப்படியாக நம்மை கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.