தேவனுக்கே மகிமையுண்டாவதாக

லேவியராகமம் 20:26 

கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்தேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் வேலைக்காக நம்மை பரிசுத்தப்படுத்திக்கொண்டு தகுதியாக்கிக் கொள்வோம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் கீர்த்தியை பிரசித்தப்படுத்த வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 நாளாகமம் 15:1-3

அவன் தனக்குத் தாவீதின் நகரத்தில் வீடுகளை உண்டாக்கி, தேவனுடைய பெட்டிக்கு ஒரு ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தி, அதற்கு ஒரு கூடாரத்தைப் போட்டான்.

பிற்பாடு தாவீது: லேவியர் ஒழிய வேறொருவரும் தேவனுடைய பெட்டியை எடுக்கலாகாது; தேவனுடைய பெட்டியை எடுக்கவும், என்றைக்கும் அவருக்குப் பணிவிடைசெய்யவும், அவர்களை கர்த்தர் தெரிந்துகொண்டார் என்றான்.

அப்படியே கர்த்தருடைய பெட்டிக்குத் தான் ஆயத்தப்படுத்தின அதின் ஸ்தலத்திற்கு அதைக் கொண்டுவரும்படி தாவீது இஸ்ரவேலையெல்லாம் எருசலேமிலே கூடிவரச்செய்தான்.

 மேற்கூறிய வசனங்களில்  தாவீது தனக்கு தாவீதின் நகரத்தில் வீடுகளை உண்டாக்கி, தேவனுடையபெட்டிக்கு ஒரு ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தி, அதற்கு ஒரு கூடாரத்தைப் போட்டான்.  பிற்பாடு தாவீது சொன்னது லேவியர் ஒழிய வேறொருவரும் தேவனுடைய பெட்டியை எடுக்கலாகாது; தேவனுடைய பெட்டியை எடுக்கவும், என்றைக்கும் அவருக்கு பணிவிடை செய்யவும், அவர்களையே கர்த்தர் தெரிந்துக்கொண்டார என்றான்.  அந்தபடியே தான் ஆயத்தப்படுத்தின ஸ்தலத்திற்கு கர்த்தருடைய பெட்டியை கொண்டு வரும் படி தாவீது இஸ்ரவேலையெல்லாம் எருசலேமிலேகூடிவர செய்து  

1 நாளாகமம் 15: 4-14 

ஆரோனின் புத்திரரையும்,

லேவியராகிய கோகாத் புத்திரரில் பிரபுவாகிய ஊரியேலையும், அவன் சகோதரராகிய நூற்றிருபதுபேரையும்,

மெராரியின் புத்திரரில் பிரபுவாகிய அசாயாவையும், அவன் சகோதரராகிய இருநூற்றிருபதுபேரையும்,

கெர்சோன் புத்திரரில் பிரபுவாகிய யோவேலையும், அவன் சகோதரராகிய நூற்றுமுப்பதுபேரையும்,

எலிசாப்பான் புத்திரரில் பிரபுவாகிய செமாயாவையும், அவன் சகோதரராகிய இருநூறுபேரையும்,

எப்ரோன் புத்திரரில் பிரபுவாகிய எலியேலையும், அவன் சகோதரராகிய எண்பதுபேரையும்,

ஊசியேல் புத்திரரில் பிரபுவாகிய அம்மினதாபையும், அவன் சகோதரராகிய நூற்றுப்பன்னிரண்டுபேரையும் தாவீது கூடிவரப்பண்ணினான்.

பின்பு தாவீது ஆசாரியராகிய சாதோக்கையும், அபியத்தாரையும், லேவியராகிய ஊரியேல், அசாயா, யோவேல், செமாயா, எலியேல், அம்மினதாப் என்பவர்களையும் அழைத்து,

அவர்களை நோக்கி: லேவியரில் நீங்கள் பிதாக்களுடைய சந்ததிகளின் தலைவர், நீங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் பெட்டியை அதற்கு நான் ஆயத்தம்பண்ணின ஸ்தலத்திற்குக் கொண்டுவரும்படி, உங்களையும் உங்கள் சகோதரரையும் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்.

முதலில் நீங்கள் அதைச் சுமக்காதபடியினாலும், நாம் நம்முடைய தேவனாகிய கர்த்தரை நியாயமானபடியே தேடாதேபோனபடியினாலும், அவர் நமக்குள்ளே அடிவிழப்பண்ணினார் என்றான்.

அப்படியே ஆசாரியரும் லேவியரும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் பெட்டியைக் கொண்டுவரத் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டார்கள்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் எழுதப்பட்டவர்கள் எல்லோரையும்  தாவீது கூடிவரப்பண்ணினான். பின்பு தாவீது ஆசாரியராகிய சாதோக்கையும், அபியத்தாரையும், லேவியராகிய ஊரியேல், அசாயா, யோவேல், செமாயா, எலியேல், அம்மினதாப் என்பவர்களை அழைத்து அவர்களை நோக்கி; நீங்கள் பிதாக்களி்ன் சந்ததிகளின் தலைவர், நீங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் பெட்டியை அதற்கு நான் ஆயத்தம்பண்ணின ஸ்தலத்திற்குக் கொண்டு வரும்படி, உங்களையும், உங்கள் சகோதரரையும் பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள்.  பின்பு அவன் சொன்னது நீங்கள் முதலில் அதை சுமக்காதபடியினாலும், கர்த்தரை நியாயமானபடி தேடாதே போனபடியினாலும், அவர் நமக்குள்ளே அடிவிழப்ண்ணினார்.  அப்படியே ஆசாரியரும், லேவியரும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் பெட்டியைக் கொண்டு வர தங்களை சுத்தம் பண்ணிக்கொண்டார்கள்.  

பிரியமானவர்களே, கர்த்தரின் பெட்டியை சுமந்துக்கொண்டு வந்து, அதற்கான ஸ்தலத்தில் வைக்கிற ஆசாரியர்கள் என்றால், கர்த்தரின் வசனத்தை நமக்கு கிறிஸ்துவினால் போதித்து நடத்துகிறவர்களுக்கு தேவன் முந்தின வார்த்தைகளை திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  கர்த்தரின் வார்த்தைகளை உபதேசிக்கிற கர்த்தரின் வேலைக்காரர்களும், கர்த்தருக்கு பலவிதத்தில் பணிவிடை செய்கிற யாவரும், தங்களை கர்த்தரின் வசனத்தால் பரிசுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.  ஏனென்றால் கர்த்தர்; லேவி கோத்திரத்தை இதற்காக தெரிந்துக் கொள்வது என்றால் அவர்கள் கர்த்தரின் சத்தத்திற்கு உடனே கீழ்படிந்து தாங்கள் எந்த உலக இச்சைகளுக்கும் தங்களை அடிமைப்படுத்திக்கொள்ளாமல், கர்ததரால் கொடுக்கப்பட்டதை  மட்டும் பற்றிக்கொண்டு கர்த்தரின் வேலையை செய்ய முன் வந்தார்கள். ஆதலால் கர்த்தர் லேவிக்கோத்திரத்தை தெரிந்துக்கொண்டார்.  இதனைப்போல் நாமும் கர்த்தர் நம் நடுவில் அவர் ஆலயம் விளங்குவதற்காக ஒரு இடம் ஆயத்தம் பண்ணியிருக்கிறார்.  ஆதலால் நாம் ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியானவர் தங்குகிற  ஆலயாகிய நம் உள்ளத்தை எப்பொழுதும் பரிசுத்தபடுத்திக் கொண்டவர்களாக; கர்த்தரின் சபையாகிய எருசலேமில் உபதேசிக்க தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.  மேலும் நாம் கர்த்தரின் வார்த்தைகளை சுமந்து செல்லாமலும், அவரை நியாயமானபடி தேடாமலும் இருந்தால் கர்த்தர் நம் ஒவ்வொருவருக்குள்ளும் பொல்லாப்பை விழப்பண்ணுவார்.ஆதலால் நாம் கர்த்தரின் சத்தத்திற்கு கீழ்படிந்து அவரை கருத்தோடும், நியாயமானபடி தேடுகிறவர்களாக மாற வேண்டும். இப்படியாக நம் ஒவ்வொருவரும் கர்த்தரின் வழியில் நடந்து, அவருக்கென்று நம்மை தகுதியாக்கிக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.