தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 51:17 

தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரை புகழ்ந்து பிரஸ்தாபப்படுத்துவோம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் மகிழ்ச்சியோடு கர்த்தருக்கு ஆராதனை செய்கிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 நாளாகமம் 16:1-5   

அவர்கள் தேவனுடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்தபோது, தாவீது அதற்குப் போட்ட கூடாரத்தின் நடுவே அவர்கள் அதை வைத்து, தேவனுடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினார்கள்.

தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தித் தீர்ந்தபின்பு, அவன் ஜனத்தைக் கர்த்தருடைய நாமத்திலே ஆசீர்வதித்து,

புருஷர் தொடங்கி ஸ்திரீகள்மட்டும், இஸ்ரவேலராகிய அனைவருக்கும் அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித் துண்டையும், ஒவ்வொருபடி திராட்சரசத்தையும் பங்கிட்டுக் கொடுத்தான்.

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப் பிரஸ்தாபம்பண்ணித் துதித்துப் புகழுகிறதற்கு கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகச் சேவிக்கத்தக்க லேவியரில் சிலரை நியமித்தான்.

அவர்களில் ஆசாப் தலைவனும், சகரியா அவனுக்கு இரண்டாவதுமாயிருந்தான்; ஏயெல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்பவர்கள் தம்புரு சுரமண்டலம் என்னும் கீதவாத்தியங்களை வாசிக்கவும், ஆசாப் கைத்தாளங்களைக் கொட்டவும்,

மேற்கூறிய வசனங்களில் இஸ்ரவேல் புத்திரர் தேவனுடைய பெட்டியை தாவீதின் நகரத்திற்குள்ளே  கொண்டு வந்த போது, தாவீது அதற்கு போட்ட கூடாரத்தின் நடுவே அவர்கள் அதை வைத்து, தேவனுடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும், சமாதானபலிகளையும் செலுத்தினார்கள்.  தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தி தீர்ந்த பின்பு, அவன் ஜனத்தை கர்த்தருடைய சந்நிதியிலே ஆசீர்வதித்து, இஸ்வேலராகிய புருஷர்கள், ஸ்திரீகள் மட்டும் இஸ்ரவேலராகிய  அனைவருக்கும் அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சி துண்டையும், ஒவ்வொருபடி திராட்சரசத்தையும் பங்கிட்டுக் கொடுத்தான்.  இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப் பிரஸ்தாபம் பண்ணித் துதித்துப் புகழுகிறதற்குக் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகச் சேவிக்கதக்க லேவியரில் சிலரை நியமித்தான். 

பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களில் கூறப்பட்டிருக்கிறபடி, நாம் கர்த்தரின் சந்நிதியில் பயபக்தியோடு தேவனுக்கு ஆராதனைச் கிறிஸ்து மூலம் செய்ய வேண்டும்.  அப்படி தேவனுக்கு ஆராதனை செய்யும் போது ஒவ்வொருவரும் தங்களை முழுமையும் (ஆவி ஆத்தும சரீரம் ) தாழ்த்தி (நம்முடைய பாவம், அக்கிரமம்,மீறுதல் இவைகளுக்காக உள்ளம் நொறுங்கி)கர்த்தரின் சந்நிதியில் ஒப்படைக்க  வேண்டும்.  அவ்விதமாக ஒப்புக்கொடுக்கிறவர்களை கர்த்தர் ஆசீர்வதித்து, அவர்கள் நித்திய ஜீவன் பெற்றுக்கொள்ளும்படியாக கர்த்தர் கிருபை செய்து, மென்மேலும் கர்த்தரை பிரஸ்தாபமாக்கும் படியாக நம்முடைய ஆத்துமாவை ஆயத்தப்படுத்துகிறார்.  இவ்விதமாக நாமும் கர்த்தரை குறித்து பிரஸ்தாபப்படுத்தும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.