தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபேசியர் 3:7

தேவனுடைய பலத்த சத்துவத்தால் எனக்கு அளிக்கப்பட்ட வரமாகிய அவருடைய கிருபையினாலே இந்தச் சுவிசேஷத்துக்கு ஊழியக்காரனானேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் கிருபையில் பிரவேசிக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் சபைகூடி கர்த்தருக்கு ஆராதனை செய்ய வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால், முந்தின நாளிலிலுள்ள வேத வசனத்தின் கருத்துக்களை நாம் தியானிப்போமாகில் 

1 நாளாகமம் 16:8-18 

கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.

அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.

அவருடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.

கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.

அவருடைய தாசனாகிய இஸ்ரவேலின் சந்ததியே! அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் புத்திரரே!

அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள்.

அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர்; அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும்.

ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும், ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும்,

அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருங்கள்.

அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி:

உங்கள் சுதந்தரபாகமாக கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.

மேற்கூறப்பட்டிருக்கிறவைகள்; நாம் சபைகூடி வரும் போது, கட்டாயமாக சங்கீதத்தின் பாட்டுகளோடும், கைத்தாளங்கள், பூரிகைகளாகிய தேவ வார்த்தைகளோடும் கர்த்தரை துதித்து மகிமைப்படுத்த வேண்டும். கர்த்தரை துதித்து,அவர் நாமத்தை பிரஸ்தபப்படுத்தி,அவரை கீர்த்தனம் செய்து, அவர் அதியங்களை குறித்து பேசுவதும், அவர் பரிசுத்த நாமத்தை மட்டும் மேன்மை பாராட்டுவதும், இவ்விதமாக கர்த்தரை தேடுவோர்களின் இருதயம் மகிழ்ச்சியடையும்.  பின்பு அவர் வல்லமையை நாடி, அவரை நித்தமும் தேட வேண்டும்.  மேலும் இஸ்ரவேலராகிய நாம் அவர் அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளும் பூமியெங்கும் விளங்கும் என்பதும், அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர் என்பதும், ஆயிரம் தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும், ஆபிராகாமோடே அவர் பண்ணிண உடன்படிக்கையையும், அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும், என்றன்றைக்கும் நாம் நினைக்கும்படியும், அதனை யாக்கோபுக்கு பிரமாணமும், இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி உங்கள் சுதந்தரமான கானான் தேசத்தை உனக்கு தருவேன் என்றார்.  

பிரியமானவர்களே மேற்கூறப்பட்டவைகளின் கருத்துக்கள் மணவாட்டி சபையாகிய கிறிஸ்து(கானான் தேசம்) நம் உள்ளத்திற்குள் வெளிப்பட வேண்டுமானால் , மேற்கூறப்பட்ட கர்த்தரின் வார்த்தைகளை நம் உள்ளத்தில் உறுதிப்படுத்திக்கொண்டு, கர்த்தருக்கு ஆராதனை செய்கிறவர்களாக இருப்போமானால் கிறிஸ்துவின் கிருபை நம்மேல் வரும் என்பதனை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  இப்படியாக கிறிஸ்துவின் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை பெற்றுக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.