தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 34:8
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரை புகழ்ந்து பாடி அவருடைய வல்லமையும், மகிமையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் உயிர்தெழுந்த கிறிஸ்துவை குறித்து சுவிசேஷமாய் அறிவிக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1 நாளாகமம் 16:24-34
ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள்.
கர்த்தர் பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.
சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர்.
மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது; வல்லமையும் மகிழ்ச்சியும் அவர் ஸ்தலத்தில் இருக்கிறது.
ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.
கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய சந்நிதியில் பிரவேசியுங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.
பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்; அவர் பூச்சக்கரத்தை அசையாதபடிக்கு உறுதிப்படுத்துகிறவர்.
வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பதாக; கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவதாக.
சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்கி, நாடும் அதிலுள்ள யாவும் களிகூருவதாக.
அப்பொழுது கர்த்தருக்கு முன்பாகக் காட்டுவிருட்சங்களும் கெம்பீரிக்கும்; அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்.
கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
மேற்கூறப்பட்ட வசனங்களில் சவிசேஷத்தைக் குறித்து கர்த்தர் சொல்கிறது என்னவெனில், ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள். எப்படியெனில் கர்த்தர் பெரியவரும், மிகவும் துதிக்கப்படதக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்பட தக்கவர் அவரே. சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர். மகிமையும் கனமும் அவர் சமூகத்தில் இருக்கிறது; வல்லமையும் மகிழ்ச்சியும் அவர் ஸ்தலத்தில் இருக்கிறது. நாம் கர்ததருக்கு மகிமையும், வல்லமையையும் செலுத்த வேண்டும். கர்த்தருக்கு அவர் நாமத்துக்குரிய மகிமையை செலுத்தி காணிக்கைகளைக் கொண்டு வந்து , அவருடைய சந்நிதியில் பிரவேசிக்க வேண்டும்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரை தொழுதுக்கொள்ள வேண்டும் என்றும்; பூலோகத்தார் யாவரும் கர்த்தருடைய வசனத்திற்கு முன்பாக நடுங்க வேண்டும் என்றும்; அப்படியானால் நாம் பூமியில் வாழ்கிற வாழ்வாகிய சக்கரம் (விசுவாச ஜீவிதம்) அசையாமல் உறுதிப்பட்டிருக்கும். அப்போது நம் ஆவி ஆத்துமா சரீரம் இவைகள் மகிழ்ந்து பூரிப்பாகும் போது கர்த்தர் ராஜரீகம் பண்ணுகிறார் என்று ஜாதிகளுக்குள் சொல்லப்படும். பின்பு சமுத்திரமாகிய நம்முடைய துன்மார்க்க சிந்தைகள் முழங்கும் போது, நம் ஆத்துமாவும், அவைகளிலுள்ள எல்லாம் செயல்களும் களிகூரும். ஏனென்றால் துன்மார்க்கமாகிய சமுத்திரத்திலிருந்து தப்பி கரைசேர்ந்ததினால் மகிழ்ச்சியும், களிப்பும் உண்டாகும். அப்போது கர்த்தருக்கு முன்பாக காட்டு விருட்சங்களாகிய பாரம்பரிய பாவங்களும், உலக வழிபாடுகளில் வாழ்ந்து, மாம்ச இச்சைகளில் சிக்குண்டு வாழ்ந்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் வந்த புது மாற்றங்களால் கெம்பீரித்து பாடுவார்கள். அப்போது கர்த்தர் நம் நினைவுகளை நியாயந்தீர்த்து நமக்கு ஏற்ற பலனை தருகிறார்; அப்போது நாம் இரட்சிக்கபடுகிறோம் என்பதனை திருஷ்டாந்தப்படுத்துகிறார். அப்போது தான் கர்த்தரை துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது என்று தொனிக்கிற சத்தம் நம் உள்ளத்தில் எழும்பும். இப்படியாக நாம் கர்த்தர் நல்லவர் என்பதனை தெரிந்து கொண்டு நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.