தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 118: 29

கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் அனுதினம் கர்த்தருக்கு துதி ஸ்தோத்திர ஆராதனை செய்ய வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், கர்த்தரை புகழ்ந்து பாடி அவருடைய வல்லமையையும், மகிமையையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 நாளாகமம் 16:35-43 

எங்கள் ரட்சிப்பின் தேவனே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி, உம்மைத் துதிக்கிறதினால் மேன்மைபாராட்டும்படிக்கு, எங்களை ரட்சித்து, எங்களைச் சேர்த்துக்கொண்டு, ஜாதிகளுக்கு எங்களை நீங்கலாக்கியருளும் என்று சொல்லுங்கள்.

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு சதாகாலங்களிலும் ஸ்தோத்திரம் உண்டாவதாக, அதற்கு ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லிக் கர்த்தரைத் துதித்தார்கள்.

பின்பு பெட்டிக்கு முன்பாக நித்தம் அன்றாடக முறையாய்ச் சேவிக்கும்படி, அவன் அங்கே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக ஆசாப்பையும், அவன் சகோதரரையும், ஓபேத்ஏதோமையும், அவர்களுடைய சகோதரராகிய அறுபத்தெட்டுப்பேரையும் வைத்து,

எதித்தூனின் குமாரனாகிய இந்த ஓபேத்ஏதோமையும் ஓசாவையும் வாசல்காக்கிறவர்களாக வைத்தான்.

கிபியோனிலுள்ள மேட்டின்மேலிருக்கிற கர்த்தருடைய வாசஸ்தலத்திற்கு முன்பாக இருக்கிற சர்வாங்கதகன பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனங்களை நித்தமும், அந்திசந்தியில் கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியெல்லாம் கர்த்தருக்குச் செலுத்துவதற்காக,

அங்கே அவன் ஆசாரியனாகிய சாதோக்கையும், அவன் சகோதரராகிய ஆசாரியரையும் வைத்து,

இவர்களோடுங்கூட ஏமானையும், எதித்தூனையும், பேர்பேராகக் குறித்துத் தெரிந்துகொள்ளப்பட்ட மற்றச் சிலரையும்: கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதிக்கவும்,

பூரிகைகளையும் கைத்தாளங்களையும் தேவனைப் பாடுகிறதற்குரிய கீதவாத்தியங்களையும் தொனிக்கச்செய்யவும் அவர்களுடன் ஏமானையும் எதித்தூனையும் வைத்து, எதித்தூனின் குமாரரை வாசல்காக்கிறவர்களாகக் கட்டளையிட்டான்.

பின்பு ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போனார்கள்; தாவீதும் தன் வீட்டாரை ஆசீர்வதிக்கத்திரும்பினான்.

மேற்கூறப்பட்ட வார்த்தைகளினால் கர்த்தரை மேன்மைப்பாராட்டி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக என்று சொல்லும் போது ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லி கர்த்தரை துதித்தார்கள் என்பது நமக்கு தேவன் திருஷ்டாந்தப்படுத்தியது என்னவென்றால் நம் உள்ளத்திலிருந்து ஸ்தோத்திரமும், துதியும் புறப்பட்டு வரவேண்டும்; அதனைக்குறித்து தான்

சங்கீதம் 147:11, 12 

தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.

எருசலேமே, கர்த்தரை ஸ்தோத்திரி; சீயோனே, உன் தேவனைத் துதி.

வசனங்கள் நமக்கு விளக்குகிறது.  பின்பு கர்த்தரின் வசனத்தின் படி நாம் அனுதினம் கர்த்தரை சேவிக்கவும்; ஆனால் நம் இதயமாகிய வாசலில் அந்நிய ஆவியாகிய உலகத்தின் ஆவி நுழையாதபடி இருதயத்திற்கு வசனத்தால் காவல் வைக்க வேண்டும்.   அல்லாமலும் நாம் அனுதினம் கர்த்தருக்கு நம்மை முழுமையும் ஒப்புக்கொடுத்து அந்திசந்திகளிலெல்லாம் கர்த்தரை உயர்த்தும் துதியும், நியாயபிரமாணத்தில் எழுதியுள்ளபடியெல்லாம் கர்த்தருக்கு நாம் துதி ஸ்தோத்திர பலிகளை செலுத்த வேண்டும். அல்லாமலும் கர்த்தரின் கிருபை என்றுமுள்ளதென்று அவரை பாடி துதித்து, கர்த்தரின் வசனத்தாலும், கைத்தாளங்களினால் கர்த்தரை பாடி துதிக்கவும் நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்; அப்போது கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.  இவ்விதம் அனுதினம் கர்த்தரின் பாதம் பணியும்படி ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.