இரட்சிப்பின் வழி:-

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Jul 02, 2020
தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஏசாயா 45:17
இஸ்ரவேலோ,கர்த்தராலே நித்திய இரட்சிப்பினால் இரட்சிக்கப்படுவான்;  நீங்கள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் வெட்கப்படாமலும் கலங்காமலும் இருப்பீர்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக.ஆமென். 
அல்லேலூயா.

இரட்சிப்பின் வழி:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நாம் கழிந்த நாளில் மாற்று வஸ்திரத்தை குறித்து தியானித்தோம். நம்முடைய பழைய வாழ்க்கையை களைந்து போட்டு புதிய வாழ்வாகிய கிறிஸ்துவை தரிக்க வேண்டும். நாம் எல்லோரும் இரட்சிப்பின் வஸ்திரத்தை தரித்து கொண்டால் மாத்திரமே நிர்வாணிகளாக காணப்படமாட்டோம் என்பதை நமக்கு தேவன் நம்முடைய கோத்திர பிதாக்களை வைத்து திருஷ்டாந்தப்படுத்துகிறதை நாம் பார்க்கிறோம்.
மேலும் யோசுவா சொல்கிறான் உங்களில் கோத்திரத்துக்கு மும்மூன்று மனிதர்களை தெரிந்து கொண்டு அவர்கள் தேசத்திலே சுற்றித்திரிந்து அதை தாங்கள் சுதந்திரத்திற்கென்று எழுதி கொண்டு வரும்படி சொல்கிறான். அவர்கள் எழுந்து போனார்கள்,தேசத்தைச் சுற்றிப்பார்த்து விவரம் எழுதிக் கொடுக்கும் படியாக,
பிரியமானவர்களே நாம் ஒன்று சிந்திக்கவேண்டும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள் ளுகிறவர்கள்,முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு பலத்தோடும் அவரிடத்தில் அன்பு கூருகிறவர்களாக இருக்கவேண்டும். அதை தான் ஆவி, ஆத்துமா, சரீரம் இவைகள் சிதறி போகாதபடி ஒன்றோடொன்று ஒன்று போல் சேர்ந்து கர்த்தரை மகிமைப்படுத்த வேண்டும். அப்போது தான் நம் ஆத்மா எழுந்திருக்கும்.கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ள முடியும். அதனால் தான்,
எபேசியர் 5:14-17
ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்.
ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து,
நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.
இவற்றிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, கர்த்தரின் சித்தம் செய்யாவிட்டால் கர்த்தர் நம்மை ,சவுலை தள்ளிவிட்டது போல், நம் ராஜரீக அபிஷேகம் நம்மை விட்டு மாற்றி போடுவார்.மேலும் கர்த்தருக்கு சித்தமில்லாத உலக கிரியைகள், உலக வழிபாடுகள் ,மனிதனுடைய கற்பனை மேலும் அந்நிய நுகத்தோடு இணைக்கப்பட்டிருப்போமானால் கர்த்தர் நம்மை விட்டு தூரம் போய் விடுவார். அவர் முகத்தை நமக்கு மறைத்து விடுவார். மற்றும் சாலோமோனுக்கு ராஜ்யபாரம் செய்யும்படியாக மிகுந்த ஞானத்தை கொடுத்திருந்தார். அவனோ கர்த்தரை விட்டு தூரம் போய் தன் கண்களின் இச்சையும், மாம்ச இச்சைகளுக்கு விழுந்து விட்டதினால் கர்த்தர் அவன் ராஜ்யபாரத்தை அவனிடத்தில் இருந்து பிடுங்கி போட்டார்.
அதெப்படியெனில்,
1 இராஜாக்கள் 11:11-13
ஆகையால் கர்த்தர் சாலொமோனை நோக்கி: நான் உனக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையையும் என் கட்டளைகளையும் நீ கைக்கொள்ளாமற்போய் இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், ராஜ்யபாரத்தை உன்னிடத்திலிருந்து பிடுங்கி, அதை உன் ஊழியக்காரனுக்குக் கொடுப்பேன்.
ஆகிலும் உன் தகப்பனாகிய தாவீதினிமித்தம், நான் அதை உன் நாட்களிலே செய்வதில்லை; உன் குமாரனுடைய கையினின்று அதைப் பிடுங்குவேன்.
ஆனாலும் ராஜ்யம் முழுவதையும் நான் பிடுங்காமல், என் தாசனாகிய தாவீதினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட எருசலேமினிமித்தமும், ஒரு கோத்திரத்தை நான் உன் குமாரனுக்குக் கொடுப்பேன் என்றார்.
அப்படியே நம் தேவனாகிய கர்த்தர் செய்ததை பார்க்கிறோம். 
அதனால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சொல்கிறது என்னவென்றால்,
வெளிப்படுத்துதல் 16:15
இதோ, திருடனைப்போல் வருகிறேன், தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக் கொள்ளுகிறவன் பாக்கியவான்.
தேவன் நமக்குத் தந்த புது வஸ்திரம் கிறிஸ்து .பழையவைகளை பாரம்பரிய வாழ்க்கையை முழுமையும் நாம் விட்டுவிட்டால் மாத்திரமே புதிய வஸ்திரம் காக்க முடியும்.
1 கொரிந்தியர் 5:6-7
நீங்கள் மேன்மை பாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?
ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.
ஆதலால் நம் பாரம்பரிய ஜென்ம பாவங்கள் எல்லாம் மாற்றபட்டு, துப்புரவு, உண்மையோடு நம் தேவனை மகிமைப்படுத்த கடவோம். அதனால் நம் தேவனாகிய கர்த்தர்,
சங்கீதம் 2:6
நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன் மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார்.
இவ்வித உண்மையுள்ளவர்களாய் இருப்போமானால், நிர்வாணிகளாய் காணப்படமாட்டோம்.
மேலும் யோசேப்பின் சகோதரனாகிய பென்யமீனுடைய சாக்கிலே முந்நூறு வெள்ளிபணம் வைக்கப்பட்டிருக்கிறது. அது கானான் தேசத்தில் வந்த பஞ்சத்தின் காரணமாக வைத்து அனுப்புகிறான். குறிப்பாக பஞ்சத்தை தீர்த்து கானானை சுதந்தரிக்கும் படியாக திருஷ்டாந்தப்படுத்தி கொடுத்து அனுப்புகிறான். மீண்டும் அவர்கள் எகிப்திற்கு அடிமையாவார்கள் என்பதை முன்குறித்த தேவன் இவ்விதம் யோசிப்பு மூலம் செய்கிறார்.
இந்த முந்நூறு வெள்ளிகாசு நாம் எப்படி கிறிஸ்துவை சொந்தமாக்க வேண்டும் என்று திருஷ்டாந்தபடுத்தவே இப்படி சொல்கிறார். அது இளையவனாகிய பென்யமீன் சாக்கிலே வைக்கப்படுகிறது. பணத்தில் கிறிஸ்துவை விலைக்கு வாங்க முடியாது. கிறிஸ்துவை எப்படி சொந்தமாக்க வேண்டும் என்பதை‌ விளக்கிக் காட்டும் படியாகவே ,இது திருஷ்டாந்தப்படுத்தபடுகிறது. 
இதனை எடுத்துக் காட்டுவது என்றால் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இராவிருந்து பண்ணும் படியாக பெத்தானியாவுக்கு வந்தார். அங்கு மார்த்தாள் பணிவிடை செய்கிறாள். லாசரு பந்தியிருந்தவர்களில் ஒருவனாயிருக்கிறான்.
யோவான் 12:3
அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது.
அப்பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரை காட்டிக் கொடுக்கப் போகிறவனுமாகிய, சீமோனுடைய குமாரனாகிய, யூதாஸ்காரியோத்து,
இந்த தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்கு கொடாமல் போனதென்ன என்றான்.
அவன் தரித்தரைக் குறித்து கவலைப்பட்டு இப்படி சொல்லாமல், அவன் திருடனான படியினாலும் பணப்பையை வைத்து கொண்டு அதிலே போடப்பட்டதை சுமக்கிறவனான படியினாலும் இப்படி சொன்னான். 
அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம் பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள்.
தரித்திரர் எப்பொழுதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள் நான் எப்பொழுதும் உங்களிடத்தில் இரேன் என்றார். 
இதனை வாசிக்கிற தேவஜனமே இந்த முந்நூறு வெள்ளிபணம், நாம் கிறிஸ்துவினோடு அடக்கம் பண்ணப்பட்டு, பழைய மனுஷனை களைந்துவிட்டு புதிய மனுஷனாகிய கிறிஸ்துவை தரிக்கும் படியாகவே தேவன் நம் முற்பிதாக்கள் மூலம் திருஷ்டாந்தபடுத்துகிறார். 
அதனால் தான் இளையவன் சாக்கிலே அது வைக்கப் படுகிறது நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து‌ நம் ஆத்துமாவுக்குள் வெளிப்பட்டு, அந்த ஆத்மா இரட்சிப்பினால் அங்கீகரிக்கப்படும் போது, நம்மளில் இருக்கிற கிறிஸ்து அநேக பேரை இரட்சிப்பார். அதைத்தான்,
ஏசாயா 60:20-22
உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.
உன் ஜனங்கள் யாவரும் நீதிமான்களும், என்றைக்கும் பூமியைச் சுதந்தரிக்குங் குடிகளும், நான் நட்ட கிளைகளும், நான் மகிமைப்படும்படி என் கரங்களின் கிரியைகளுமாயிருப்பார்கள்.
சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.
மேற்கூறிய வசனங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஒரு பெரிய பலத்த ஜாதியாக்குகிறார். அதற்கு அடையாளமாக, பரிமளதைலம் கிறிஸ்துவின் பாதத்தில் பூசி, அவளுடைய தலை மயிரினால் துடைக்கிறாள். அதன் விளக்கம் என்னவென்றால் நம் பாவத்துக்காக அவர் மரித்து அடக்கம் பண்ணப்பட்டு, கிறிஸ்துவின் ஆவியால் நம்மை அவரோடே கூட எழுப்பும் படியாக பிதாவாகிய தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்புகிறார். இவ்விதமாக உள்ளான மனுஷன் உயிர்ப்பிக்கபட்டு பரிசுத்தபடுவதற்கு அது ஏதுவாயிருக்கிறது.
ஆனால் யூதாசோ கிறிஸ்துவை முப்பது வெள்ளிகாசுக்காக காட்டிக் கொடுக்கிறான். இதன் காரணம் அவன் உள்ளம் கொடுமையால் நிறைந்திருந்தது. மேலும் உலகம், பண ஆசை இருந்ததே காரணம்.
ஆனால் இஸ்ரவேல் சபை அநேக நன்மைகளை தேவன் செய்தும் ,தேவனை பரீட்சை பார்த்தார்கள். ஆனால் பத்து முறை பரிச்சை பார்த்த யாரும் கானானை காணவில்லை என்று தெரியவருகிறது.
ஆகையால் பிரியமானவர்களே நாம் யாரும் தேவனை பரீட்சை பார்க்காதபடி உள்ளான மனுஷன் புதுப்பிக்கப்பட்டு புதிய கிருபையினால் தேவ நம்மை அபிஷேகிக்கும் படியாக நம் இருதயம் களங்கம் இல்லாத நளதத்தால் நிறையப்பட்டு, கிறிஸ்துவை சொந்தமாக்கி கொள்ள வேண்டும். அப்போது நாம் யாவரும் நீதிமான்களாக்கப்படுவோம். தேவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
ஜெபிப்போம்.                
-தொடர்ச்சி நாளை.