தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம்  50:5 

பலியினாலே என்னோடே உடன்படிக்கை பண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கு பரிசுத்தமான காணிக்கையாக நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா கர்த்தருடைய ஆசீர்வாதத்தை பெற்ற நித்திய வீடாயிருக்கும்படியாக தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 நாளாகமம் 18:1-6 

இதற்குப்பின்பு, தாவீது பெலிஸ்தரை முறிய அடித்து, அவர்களைக் கீழ்ப்படுத்தி, காத் பட்டணத்தையும் அதின் கிராமங்களையும் பெலிஸ்தரின் கையிலிருந்து பிடித்துக்கொண்டான்.

அவன் மோவாபியரையும் முறியடித்ததினால், மோவாபியர் தாவீதைச் சேவித்து அவனுக்குக் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்.

சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசர் ஐபிராத் நதியண்டையில் தன் இராணுவத்தை நிறுத்தப்போகிறபோது, தாவீது அவனையும் ஆமாத்தின் கிட்டே முறிய அடித்தான்.

அவனுக்கு இருந்த ஆயிரம் இரதங்களையும் ஏழாயிரம் குதிரைவீரரையும் இருபதினாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இரதங்களையும் வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் துண்டாடிப்போட்டான்.

சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசருக்கு உதவிசெய்யத் தமஸ்குபட்டணத்தாராகிய சீரியர் வந்தார்கள்; தாவீது சீரியரில் இருபத்தீராயிரம்பேரை வெட்டிப்போட்டு,

தமஸ்குவுக்கடுத்த சீரியாவிலே தாணையங்களை வைத்தான்; சீரியர் தாவீதைச் சேவித்து அவனுக்குக் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்; தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.

மேற்கூறிய வசனங்களில் தாவீது பெலிஸ்தரை முறியடித்து(விலையேறிய அலங்கார வஸ்துகள்), அவர்களை கீழ்படுத்தி, காத் பட்டணத்தையும், அதன் கிராமங்களையும் பெலிஸ்தரின் கையிலிருந்து பிடித்துக் கொண்டான். அவன் மோவாபியரையும் (பெருமைகாரரையும்) முறிய அடித்ததினால், மோவாபியர் தாவீதை சேவித்து அவனுக்கு காணிக்கைகளை செலுத்தினார்கள்.  சோபாவின் ராஜாவாகிய ஆதரேசர் ஐபிராத் நதியண்டையில் தன் இராணுவத்தை நிறுத்த போகிற போது, தாவீது ஆமாத்தின் கிட்டே முறிய அடித்தான்.  அவனுக்கு இருந்த ஆயிரம் இரதங்களையும் ஏழாயிரம் குதிரை வீரரையும் இருபதினாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இரதங்களை  வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் துண்டாடிப் போட்டான்.  சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசருக்கு உதவிச்செய்ய தமஸ்கு பட்டணத்தாராகிய சீரியர் வந்தார்கள்; தாவீது சீரியரில் இருபத்தீராயிரம் பேரை வெட்டிப் போட்டு தமஸ்குவுக்கு அடுத்த சீரியாவிலே தாணையங்களை வைத்தான்; சீரியர் தாவீதை சேவித்து அவனுக்கு காணிக்கைகளை செலுத்தினார்கள்; தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார். 

பிரியமானவர்களே,  மேற்கூறிய கர்த்தரின் வார்த்தைகளை தியானிக்கும் போது நம்முடைய வாழ்வில் கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறது என்னவென்றால் நம் உள்ளத்தில் எழும்புகிற தேவனுக்கு பிரியமில்லாத சத்துருவாகிய பெருமைகள், பொறாமையாகிய பொல்லாத எண்ணங்கள் எல்லாவற்றையும் நம்மை விட்டு முறிய அடித்து, நம்முடைய ஆவி ஆத்தும சரீரம் முழுமையும் கர்த்தருக்கு பரிசுத்த காணிக்கையாக ஒப்புக்கொடுப்போமானால்  கர்த்தர் நம்மை போகிற வருகிற இடத்திலெல்லாம் கர்த்தர் நம்மை காப்பாற்றுவார் .  இப்படி நம்மை முழுமையும் கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.