தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ரோமர் 8:14
மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்மை தேவனுடைய புத்திரராக்குகிறார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கு பரிசுத்தமான காணிக்கையாக நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1 நாளாகமம் 18: 7-17
ஆதாரேசரின் சேவகருக்கு இருந்த பொன் பரிசைகளைத் தாவீது எடுத்து, அவைகளை எருசலேமுக்குக் கொண்டுவந்தான்.
ஆதாரேசரின் பட்டணங்களாகிய திப்காத்திலும் கூனிலுமிருந்து தாவீது வெகு திரளான வெண்கலத்தையும் எடுத்துக்கொண்டுவந்தான்; அதினாலே சாலொமோன் வெண்கலக் கடல்தொட்டியையும் தூண்களையும் வெண்கலத் தட்டுமுட்டுகளையும் உண்டாக்கினான்.
தாவீது சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசரின் இராணுவத்தையெல்லாம் முறிய அடித்த செய்தியை ஆமாத்தின் ராஜாவாகிய தோயூ கேட்டபோது,
அவன் தாவீது ராஜாவின் சுகசெய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாரேசரோடு யுத்தம்பண்ணி, அவனை முறிய அடித்ததற்காக அவனுக்கு வினவுதல் சொல்லவும், தன் குமாரனாகிய அதோராமையும், பொன்னும் வெள்ளியும் வெண்கலமுமான சகலவிதத் தட்டுமுட்டுகளையும், அவனிடத்துக்கு அனுப்பினான்; ஆதாரேசர் தோயூவின்மேல் யுத்தம்பண்ணுகிறவனாயிருந்தான்.
அந்தத் தட்டுமுட்டுகளையும், தான் ஏதோமியர், மோவாபியர், அம்மோன் புத்திரர், பெலிஸ்தர், அமலேக்கியர் என்னும் சகல ஜாதிகளின் கையிலும் வாங்கின வெள்ளியையும், பொன்னையும்கூடத் தாவீதுராஜா கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டான்.
செருயாவின் குமாரன் அபிசாயி உப்புப் பள்ளத்தாக்கிலே பதினெண்ணாயிரம் ஏதோமியரை முறிய அடித்தான்.
ஆகையால் தாவீது ஏதோமிலே தாணையம் போட்டான்; ஏதோமியர் எல்லாரும் அவனைச் சேவிக்கிறவர்களானார்கள்; தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.
தாவீது இஸ்ரவேலையெல்லாம் ஆண்டு, தன்னுடைய ஜனத்திற்கெல்லாம் நியாயமும் நீதியும் செய்தான்.
செருயாவின் குமாரன் யோவாப் இராணுவத்தலைவனாயிருந்தான்; ஆகிலூதின் குமாரனாகிய யோசபாத் மந்திரியாயிருந்தான்.
அகிதூபின் குமாரன் சாதோக்கும், அபியத்தாரின் குமாரன் அபிமெலேக்கும் ஆசாரியராயிருந்தார்கள்; சவிஷா சம்பிரதியாயிருந்தான்.
யோய்தாவின் குமாரன் பெனாயா கிரேத்தியருக்கும் பிலேத்தியருக்கும் தலைவனாயிருந்தான்; தாவீதின் புத்திரர் ராஜாவினிடத்தில் பிரதானிகளாயிருந்தார்கள்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசரின் சேவகருக்கு இருந்த பொன் பரிசைகளைத் தாவீது எடுத்து, அவைகளை எருசலேமுக்குக் கொண்டு வந்தான். பொன் பரிசை என்பது நித்திய ஜீவனாகிய புத்திர சுவிகாரத்தின் ஆவி (கிறிஸ்துவின் வசனத்தால் சுத்திகரித்து புத்திர சுவிகாரம் பெற்றக்கொள்ளுதல்). ஆதாரேசரின் பட்டணங்களாகிய திப்காத்திலும் கூனிலுமிருந்து தாவீது வெகு திரளான வெண்கலத்தையும் எடுத்துக்கொண்டு வந்தான்; அதினாலே சாலொமோன் வெண்கலக் கடல் தொட்டியையும், தூணுகளையும், வெண்கல தட்டுமுட்டுகளையும் உண்டாக்கினான். தாவீது சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசரின் இராணுவத்தையெல்லாம் முறிய அடித்த செய்தியை ஆமாத்சின் ராஜாவாகிய தோயூ கைட்டபோது, அவன் தாவீது ராஜாவின் சுக செய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாரேசரோடு யுத்தம்பண்ணி, அவனை முறிய அடித்ததற்காக அவனுக்கு வினவுதல் பண்ணவும், தன் குமாரனாகிய அதோராமையும், பொன்னும், வெள்ளியும், வெண்கலமுமாகிய சகல தட்டுமுட்டுகளையும், அவனுக்கு அனுப்பினான். ஆதாரேசர் தோயூவின் மேல் யுத்தம் பண்ணுகிறவனாயிருந்தான். அந்த தட்டுமுட்டுகளையும், தான் ஏதோமியர், மோவாபியர், அம்மோன் புத்திரர், பெலிஸ்தர் அமலேக்கியர் என்னும் சகல ஜாதிகளின் கையிலும் வாங்கின வெள்ளியையும், பொன்னையையும் கூட தாவீது ராஜா கர்த்தருக்கு பரிசுத்தம் என்று நேர்ந்துக்கொண்டான். செருயாவின் குமாரன் அபிசாய் உப்புப் பள்ளதாக்கிலே பதினெண்ணாயிரம் ஏதோமியரை முறிய அடித்தான். ஆதலால் தாவீது ஏதோமிலே தாணையம் போட்டான். ஏதோமியர் எல்லோரும் தாவீதை சேவிக்கிறவர்களானார்கள்; தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனை காப்பாற்றினார். தாவீது இஸ்ரவேலையெல்லாம் ஆண்டு, தன்னுடைய ஜனத்திற்கெல்லாம் நீதியும் நியாயமும் செய்தான். செருயாவின் குமாரன் யோவாப் இராணுவ தலைவனாயிருந்தான். ஆகீலூதின் குமாரன் மந்திரியாயிருந்தான். அகிதூபின் குமாரன் சாதோக்கும், அபியத்தாரின் குமாரன் அபிமேலேக்கும் ஆசாரியராயிருந்தார்கள்; சலிஷா சம்பிரதியாயிருந்தான். யோய்தாவின் குமாரன் பெனாயா கிரேத்தியருக்கும், பிலேத்தியருக்கும் தலைவனாயிருந்தான். தாவீதின் புத்திரர் ராஜாவினிடத்தில் பிரதானிகளாயிருந்தார்கள்.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது,கர்த்தர் எப்படி நம்மை தேவனுடைய புத்திரர் ஆக்குகிறார் நம்முடைய சாபங்களை முறிய அடிக்கிறார் என்பதனை திருஷ்டாந்தப்படுத்துகிறார்; என்னவென்றால் நம்முடைய முன்னோர்களின் பாரம்பரிய வழக்கமாகிய மாம்ச செயல்களை முறிய அடிக்கிறார். மேலும் நம் வாழ்வில் வெண்கல கடல் தொட்டியாக சத்திய ஆவியானவராகிய அவர் சத்திய வசனப்பிரகாரம் சத்தியத்திற்கு மாறான எல்லா துர் செயல்களையும் நம்மை விட்டு ஒழித்து, நம்மில் உண்டாயிருந்த அநீதியான சகல காரியங்களையும் மாற்றி, கிறிஸ்துவின் நீதியால் நிறைக்கிறார். அல்லாமலும் நம்மில் இருந்த சகல ஜாதிகளின் கிரியைகளாகிய பொன்னும், வெள்ளியும், வெண்கலமும் இவைகளை கர்த்தருக்கென்று பரிசுத்தபட சமர்ப்பிக்க வேண்டும் என்றும்; அவ்விதம் சமர்ப்பித்தால் கர்த்தர் நம் உள்ளத்தில் நீதியும், நியாயமும் செய்து, அவரே எல்லாவற்றிலும் மந்திரியாயும், ஆசாரியராகவும், பிரதானியாகவும் செயல்பட்டு, நமக்கு அவருடைய ஆவியை தந்து புத்திரராக்குகிறார். இப்படியாக நாம் தேவனுடைய புத்திரராகும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.