தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபேசியர் 6:11 

நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய இரட்சிப்பாகிய வஸ்திரம் பாதுகாக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்மை தேவனுடைய புத்திரராக்குகிறார் என்பதனை குறித்து தியானித்தோம். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 நாளாகமம் 19:1-7 

அதன்பின்பு, அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ் மரித்து, அவன் குமாரன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

அப்பொழுது தாவீது: ஆனூனின் தகப்பனாகிய நாகாஸ் எனக்குத் தயவுசெய்ததுபோல, நானும் அவன் குமாரனாகிய இவனுக்குத் தயவுசெய்வேன் என்று சொல்லி, அவன் தகப்பனுக்காக அவனுக்கு ஆறுதல்சொல்ல ஸ்தானாபதிகளை அனுப்பினான்; தாவீதின் ஊழியக்காரர் ஆனூனுக்கு ஆறுதல் சொல்ல அம்மோன் புத்திரரின் தேசத்திலே வந்தபோது,

அம்மோன் புத்திரரின் பிரபுக்கள் ஆனூனைப் பார்த்து: தாவீது ஆறுதல் சொல்லுகிறவர்களை உம்மிடத்தில் அனுப்பினது, உம்முடைய தகப்பனைக் கனம்பண்ணுகிறதாய் உமக்குத் தோன்றுகிறதோ? தேசத்தை ஆராயவும், அதைக் கவிழ்த்துப்போடவும், உளவுபார்க்கவும் அல்லவோ, அவன் ஊழியக்காரர் உம்மிடத்தில் வந்தார்கள் என்று சொன்னார்கள்.

அப்பொழுது ஆனூன்: தாவீதின் ஊழியக்காரரைப் பிடித்து, அவர்கள் தாடியைச் சிரைத்து, அவர்களுடைய வஸ்திரங்களை இருப்பிடமட்டும் வைத்துவிட்டு, மற்றப் பாதியைக் கத்தரித்துப்போட்டு, அவர்களை அனுப்பிவிட்டான்.

அந்த மனுஷர் வருகையில், அவர்கள் செய்தி தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது அந்த மனுஷர் மிகவும் வெட்கப்பட்டபடியினால், அவர்களுக்கு எதிராக ராஜா ஆட்களை அனுப்பி: உங்கள் தாடி வளருமட்டும் நீங்கள் எரிகோவிலிருந்து, பிற்பாடு வாருங்கள் என்று சொல்லச்சொன்னான்.

அம்மோன் புத்திரர் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதைக் கண்டபோது, ஆனூனும் அம்மோன் புத்திரரும் மெசொப்பொத்தாமியாவிலும் மாக்கா சோபா என்னும் சீரியரின் தேசத்திலுமிருந்து தங்களுக்கு இரதங்களும் குதிரைவீரரும் கூலிக்கு வரும்படி ஆயிரம்தாலந்து வெள்ளி அனுப்பி,

முப்பத்தீராயிரம் இரதங்களையும், மாக்காவின் ராஜாவையும், அவன் ஜனத்தையும் கூலிப்படையாக அழைப்பித்தான்; இவர்கள் வந்து, மேதேபாவுக்கு முன்புறத்திலே பாளயமிறங்கினார்கள்; அம்மோன் புத்திரரும் தங்கள் பட்டணங்களிலிருந்து கூடிக்கொண்டு யுத்தம்பண்ண வந்தார்கள்.

மேற்கூறிய வசனங்களின் பிரகாரம் நாம் தேவனுடைய  புத்திரராக எண்ணப்பட்டபின்பு அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ் மரித்து,  அவன் குமாரன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.  அப்பொழுது தாவீது ஆனூனின் தகப்பனாகிய நாகாஸ் எனக்கு தயவு செய்தது போல நானும் இவனுக்கு தயவு செய்வேன் என்று சொல்லி,  அவன் குமாரனுக்கு தயவு செய்வேன் என்று சொல்லி, அவன் தகப்பனுக்காக அவனுக்கு ஆறுதல் சொல்ல ஸ்தானாபதிகளை அனுப்பினான்; தாவீதின் ஊழியக்காரர் ஆனூனுக்கு ஆறுதல் சொல்ல அம்மோன் புத்திரரின் தேசத்தில் வந்த போது, அம்மோன் புத்திரரின் பிரபுக்கள் ஆனூனை பார்த்து சொன்னது: தாவீது ஆறுதல் சொல்லுகிறவர்களை உம்மிடத்தில் அனுப்பினது, உம்முடைய தகப்பனை கனம் பண்ணுகிறமாய் உமக்கு தோன்றுகிறதோ? தேசத்தை ஆராயவும், அதை கவிழ்த்துப்பொடவும், உளவுப் பார்க்கவும் அல்லவோ, அவன் ஊழியக்காரர் உம்மிடத்தில் வந்தார்கள் என்று சொன்னார்கள்.  அப்பொழுது ஆனூன் தாவீதின் ஊழியக்காரரை பிடித்து தாடியை சிரைத்து, அவர்களுடைய வஸ்திரங்களை இருப்பிடமட்டும் வைத்து விட்டு, மற்ற பாதியைக் கத்தரித்து போட்டு, அவர்களை அனுப்பி விட்டான். அந்த மனுஷர் வருகையில் அவர்கள் செய்தி தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது, அப்பொழுது அந்த மனுஷர் மிகவும் வெட்கப்பட்டபடியினால், அவர்களுக்கு எதிராக ராஜா ஆட்களை அனுப்பி; உங்கள் தாடி வளருமட்டும் எரிகோவிலிருந்து, பிற்பாடு புறப்பட்டு வாருங்கள் என்று சொல்ல சொன்னான். அம்மோன் புத்திரர் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதைக் கண்டபோது, ஆனூனும் அம்மோன் புத்திரரும் மெசொபொத்தாமியாவிலும், மாக்கா சோபா என்னும் சீரியரின் தேசத்திலுமிருந்து தங்களுக்கு இரதங்களும், குதிரை வீரரும் கூலிக்கு வரும்படி ஆயிரம் தாலந்து வெள்ளி அனுப்பி, முப்பத்தீராயிரம் இரதங்களையும், மாக்காவின் ராஜாவையும், அவன் ஜனத்தையும் கூலிப்படையாக அழைத்தான்; அவர்கள் வந்து மேதேபாவுக்கு முன்புறத்திலே பாளயமிறங்கினார்கள்; அம்மோன் புத்திரரும், தங்கள் பட்டணங்களிலிருந்து கூடிகொண்டு யுத்தம் பண்ண வைத்தார்கள்.அதை தாவீது கேட்ட போது 

1 நாளாகமம்  19:8-9 

அதைத் தாவீது கேட்டபோது, யோவாபையும் பலசாலிகளின் இராணுவம் முழுவதையும் அனுப்பினான்.

அம்மோன் புத்திரர் புறப்பட்டுவந்து, பட்டணத்து வாசலண்டையில் அணிவகுத்தார்கள்; வந்த ராஜாக்கள் தனித்து வெளியிலே போருக்கு ஆயத்தமாய் நின்றார்கள்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் தாவீது யோவாபையும் பலசாலிகளின் இராணுவம் முழுவதையும் அனுப்பினான். அம்மோன் புத்திரர் புறப்பட்டு வந்து, பட்டணத்து வாசலண்டையில் அணிவகுத்து நின்றார்கள்; வந்த ராஜாக்கள் தனித்து வெளியே போருக்கு ஆயத்தமாய் நின்றார்கள்.  

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்கள் நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறது என்னவென்றால் கர்த்தர் அவருடைய ஆவியை நமக்குள் அனுப்பி, நம்மை அவருடைய புத்திரராக்கினால் (இரட்சிக்கப்பட்டால்) நமக்குள்ளாக  இருந்து அன்றுவரையிலும் நம்மை வஞ்சித்து வந்த புறஜாதிகளுடைய கிரியையாகிய  அம்மோனிய ராஜா மரி்க்கிறான்.    அவன் மரித்தாலும் அவன் குமாரன் தலையெடுக்கிறான். ஆதலால் நம் கிறிஸ்து முழுமையும் நம்மிலுள்ள பொல்லாத ஆவியாகிய அம்மோனியனை அழிக்கும்படியாகவே சித்தம் கொள்ளும்போது, அம்மோனிய துர் எண்ணங்கள் நம்மை கிறிஸ்துவினோடு ஐக்கியப்படவிடாதபடி நம் விசுவாசயாத்திரையை தடைசெய்து நம்மை எரிகோவில் பிரவேசிக்கும்படி செய்கிறது.  ஏனென்றால் அம்மோனிய கிரியையாவது நம்முடைய இரட்சிப்பாகிய வஸ்திரம் உரிந்துவிடுகிறதினால் நாம் வெட்கத்துக்குள்ளாகிறோம். ஆதலால் நம் ஆவி ஆத்தும சரீரம் கறைதிரையில்லாதபடி பரிசுத்தமாய் வாழ்ந்து எப்போதும் அம்மோனிய புத்திரருக்கு உள்ளத்தில் இடம் கொடாதபடி சத்தியத்தை அணிந்துக்கொண்டு சர்வாயுத வர்க்கம்தரித்து சத்துருவோடு எதிர்க்க திராணியுள்ளவர்களாயிருக்கும்படி எப்போதும் ஆயத்தமுள்ளவர்களாக காணப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.