தேவனுக்கே மகிமையுண்டாவதாக

மாற்கு 11:9

முன்நடப்பாரும் பின்நடப்பாரும்: ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்;

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மில் சதாகாலமும் தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாக வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்மை விட்டு கர்த்தர் விலகவும் மாட்டார், கைவிடவும் மாட்டார் என்பதனைக்குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1நாளாகமம் 29:1 

பின்பு தாவீதுராஜா சபையார் எல்லாரையும் நோக்கி: தேவன் தெரிந்துகொண்ட என் குமாரனாகிய சாலொமோன் இன்னும் வாலிபனும் இளைஞனுமாயிருக்கிறான்; செய்யவேண்டிய வேலையோ பெரியது; அது ஒரு மனுஷனுக்கு அல்ல, தேவனாகிய கர்த்தருக்குக் கட்டும் அரமனை.

மேற்கூறப்பட்ட வசனத்தில் தாவீது தன் குமாரனாகிய சாலொமோனிடம் கர்த்தர் காண்பித்த ஆலயத்தின் மாதிரியை விளக்கி கூறிய பின்பு, சபையை பார்த்து சொன்னது; தேவன் தெரிந்துக்கொண்ட என் குமாரனாகிய சாலொமோன் இன்னும் இளைஞனும், வாலிபனுமாயிருக்கிறான்; செய்ய வேண்டிய வேலையோ பெரியது; அது ஒரு மனஷனுக்குரியது அல்ல, தேவனாகிய கர்த்தருக்கு கட்டும் அரமனை.  நான் என்னாலே இயன்றமட்டும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று பொன் வேலைக்கு பொன்னையும் மற்றும் 

1 நாளாகமம் 29: 2-4 

நான் என்னாலே இயன்றமட்டும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று பொன்வேலைக்குப் பொன்னையும், வெள்ளிவேலைக்கு வெள்ளியையும், வெண்கலவேலைக்கு வெண்கலத்தையும், இரும்புவேலைக்கு இரும்பையும், மரவேலைக்கு மரத்தையும், பதிக்கப்படத்தக்க காந்தியுள்ள கற்களையும், பலவருணக் கற்களையும், விலையேறப்பெற்ற சகலவித ரத்தினங்களையும், வெண்கற்பாளங்களையும், கோமேதக முதலிய கற்களையும் ஏராளமாகச் சவதரித்தேன்.

இன்னும் என் தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்திருக்கிற வாஞ்சையினால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சவதரித்த அனைத்தையும் தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன்.

அறைகளின் சுவர்களை மூடுவதற்காகவும், பொன்வேலைக்குப் பொன்னும், வெள்ளிவேலைக்கு வெள்ளியும் உண்டாயிருக்கிறதற்காகவும், கம்மாளர் செய்யும் வேலை அனைத்திற்காகவும, ஓப்பீரின் தங்கமாகிய மூவாயிரம் தாலந்து தங்கத்தையும், சுத்த வெள்ளியாகிய ஏழாயிரம் தாலந்து வெள்ளியையும் கொடுக்கிறேன்.

மேற்கூறப்பட்டவைகள் தாவீது பரிசுத்த ஆலயததிற்காக சவதரித்த பொருட்களையும், சொந்தமான பொன்னையும், வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்திற்கென்றுக் கொடுக்கிறதை வாசிக்க முடிகிறது.  பின்னும் சபையாரிடம் அவன் கேட்பது இப்போதும் உங்களிடம் இன்றைய தினம் கர்த்தருக்கு தன் கைக்காணிக்கைகளைச் செலுத்த மனப்பூர்வமானவர்கள் யார் என்றான்.  அப்பொழுது வம்சங்களின் பிரபுக்களும், இஸ்ரவேல் கோத்திரங்களின் பிரபுக்களும், ஆயிரம் பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளும், ராஜாவின் வேலைக்காரராகிய பிரபுக்களும் மனபூர்வமாய், தேவனுடைய ஆலயத்து வேலைக்கு ஐயாயிரம் தாலந்து பொன்னையும், பதினாயிரம் தங்க காசையும், பதினாயிரம் தாலந்து வெள்ளியையும், பதினெண்ணாயிரம் தாலந்து வெண்கலத்தையும், லட்சம் தாலந்து இரும்பையும் கொடுத்தார்கள்.  யார் கையில் இரத்தினங்கள் இருந்ததோ, அவர்கள் அவைகளையும் கர்த்தருடைய ஆலயத்துப் பொக்கிஷத்திற்கென்று கெர்சோனியனான யெகியேலின் கையிலே கொடுத்தான்.  இப்படி மனப்பூர்வமாக கொடுத்ததற்காக ஜனங்கள் சந்தோஷப்பட்டார்கள்; உத்தம இருதயத்தோடே உற்சாகமாய்க் கர்த்தருக்குக் கொடுத்தார்கள்; தாவீது ராஜாவும் மிகவும் சந்தோஷப்பட்டான்.  ஆகையால் தாவீது சபையனைத்தின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்திச் சொன்னது: எங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, சதாகாலங்களிலும் தேவரீருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. 

பிரியமானவர்களே, முந்தின சில நாட்களாக நாம் தியானிக்கிற கருத்துக்கள் என்னவென்றால்; கர்த்தரின் ஆலயம் கட்டுதல், திருஷ்டாந்தத்திற்கென்று கர்த்தர் சாலொமோனை வைத்து கட்டுகிறார்.  என்னவென்றால் நம் உள்ளத்தில் கிறிஸ்து ஆலயமாக எழும்புகிறார் என்பதனை தெளிவுப்படுத்துகிறரர்.  அதோடுகூட தாவீது சபையாரிடத்தில் பொருள் சேர்க்கிறான் மற்றும் அதிகமான பொருட்களை சவதரித்து வைக்கிறான்.  மேலும் தன் சொந்த பொருட்களையும்கொடுக்கிறான்.  இவ்விதமாக சாலொமோனிடம் கர்த்தர் ஒரு பெரிய காரியத்தை செய்ய சொன்னதால், தாவீது எல்லாவற்றையும்  முன்பாகவே கருதிவிட்டு தேவசபையாரை அறிவித்து, சபையாரும் அதற்காக மனபூர்வமாக ஒத்துழைக்கிறார்கள்.  ஆதலால் தாவீது சந்தோஷமடைந்து கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறான். இவைகள் நம்மில் கிறிஸ்து ஆலயமாக எழும்புவார் என்பதனை, நம் தேவன் நம்மை குறித்து முன்பாகவே கருதிகொண்டார்; அதனால் தான் கலங்காதே, திகையாதே நான் உன்னோடு இருக்கிறேன் என்கிறார்.  ஆலயபணி முடியும் வரையிலும் அவர் நம்மை விட்டு விலகவுமாட்டார், நம்மை கைவிடவுமாட்டார்.  நாமோ அவருக்கு எப்போதும் கீழ்படிகிறவர்களாக இருக்க வேண்டும்.  அதுவுமட்டுமல்லாமல் அவருக்காக உண்மையும் நேர்மையுமாய் இருந்து மனபூர்வமாக நம்மை முழுமையாக கர்த்தர் தந்திருக்கிற சகல ஆசீர்வாதங்களோடு ஒப்படைக்கவேண்டும்.  அப்போது கர்த்தர் நம்மிலிருந்து  சந்தோஷ்படுகிறதினால், அவர் மூலம் நாம் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறோம். மேலும், நம் வாழ்வில் கர்த்தருக்கு சதாகாலமும் ஸ்தோத்திரம் உண்டாகும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.