தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 119:1
கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரோடு உத்தம இருதயம் உள்ளவர்களாக விளங்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் கரத்தால் பெற்றுக்கொண்டதை கர்த்தருக்கு கொடுத்து வளரவேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1 நாளாகமம் 29:17-30
என் தேவனே, நீர் இருதயத்தைச் சோதித்து, உத்தம குணத்தில் பிரியமாயிருக்கிறீர் என்பதை அறிவேன்; இவையெல்லாம் நான் உத்தம இருதயத்தோடே மனப்பூர்வமாய்க் கொடுத்தேன்; இப்பொழுது இங்கேயிருக்கிற உம்முடைய ஜனமும் உமக்கு மனப்பூர்வமாய்க் கொடுக்கிறதைக் கண்டு சந்தோஷித்தேன்.
ஆபிரகாம் ஈசாக்கு இஸ்ரவேல் என்னும் எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே, உமது ஜனத்தின் இருதயத்தில் உண்டான இந்தச் சிந்தையையும் நினைவையும் என்றைக்கும் காத்து, அவர்கள் இருதயத்தை உமக்கு நேராக்கியருளும்.
என் குமாரனாகிய சாலொமோன் உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய சாட்சிகளையும், உம்முடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்படிக்கும், இவைகள் எல்லாவற்றையும் செய்து, நான் ஆயத்தம்பண்ணின இந்த அரமனையைக் கட்டும்படிக்கும், அவனுக்கு உத்தம இருதயத்தைத் தந்தருளும் என்றான்.
அதின்பின்பு தாவீது சபை அனைத்தையும் நோக்கி: இப்போது உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்றான்; அப்பொழுது சபையார் எல்லாரும் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்து, தலை குனிந்து கர்த்தரையும் ராஜாவையும் பணிந்துகொண்டு,
கர்த்தருக்குப் பலியிட்டு, மறுநாளிலே சர்வாங்க தகனபலிகளாக ஆயிரம் காளைகளையும், ஆயிரம் ஆட்டுக்கடாக்களையும், ஆயிரம் ஆட்டுக்குட்டிகளையும், அவைகளுக்கடுத்த பானபலிகளையும் இஸ்ரவேல் அனைத்திற்காகவும் கர்த்தருக்குச் செலுத்தினார்கள்.
அவர்கள் அன்றையதினம் மிகுந்த சந்தோஷத்தோடே கர்த்தருக்கு முன்பாகப் போஜனபானம்பண்ணி, தாவீதின் குமாரனாகிய சாலொமோனை இரண்டாம்விசை ராஜாவாக்கி, கர்த்தருக்கு முன்பாக அவனை அதிபதியாகவும், சாதோக்கை ஆசாரியனாகவும் அபிஷேகம்பண்ணினார்கள்.
அப்படியே சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே, கர்த்தருடைய சிங்காசனத்தில் ராஜாவாய் வீற்றிருந்து பாக்கியசாலியாயிருந்தான்; இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்கள்.
சகல பிரபுக்களும் பராக்கிரமசாலிகளும் தாவீது ராஜாவினுடைய சகல குமாரருங்கூட ராஜாவாகிய சாலொமோனுக்கு அடங்கியிருந்தார்கள்.
இஸ்ரவேலர் எல்லாரும் காணக் கர்த்தர் சாலொமோனை மிகவும் பெரியவனாக்கி, அவனுக்கு முன்னே இஸ்ரவேலில் ராஜாவான ஒருவனுக்கும் இல்லாதிருந்த ராஜரிக மகத்துவத்தை அவனுக்குக் கட்டளையிட்டார்.
இவ்விதமாய் ஈசாயின் குமாரனாகிய தாவீது இஸ்ரவேல் அனைத்துக்கும் ராஜாவாயிருந்தான்.
அவன் இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் நாற்பதுவருஷம்; எப்ரோனிலே ஏழுவருஷமும், எருசலேமிலே முப்பத்துமூன்று வருஷமும் ராஜாவாயிருந்தான்.
அவன் தீர்க்காயுசும் ஐசுவரியமும் மகிமையுமுள்ளவனாய், நல்ல முதிர்வயதிலே மரணமடைந்தபின், அவன் குமாரனாகிய சாலொமோன் அவன் ஸ்தானத்திலே அரசாண்டான்.
தாவீது ராஜாவினுடைய ஆதியோடந்தமான நடபடிகளும், அவன் அரசாண்ட விபரமும், அவனுடைய வல்லமையும், அவனுக்கும் இஸ்ரவேலுக்கும், அந்தந்த தேசங்களின் ராஜ்யங்கள் அனைத்துக்கும் நடந்த காலசம்பவங்களும்,
ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலின் பிரபந்தத்திலும், தீர்க்கதரிசியாகிய நாத்தானின் பிரபந்தத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தின் பிரபந்தத்திலும் எழுதியிருக்கிறது.
மேற்கூறப்பட்ட வசனங்களில் ராஜாவாகிய தாவீது கர்த்தரிடத்தில் சொன்னதின் விளக்கம்; கர்த்தர் உத்தம குணத்தில் பிரியமாயிருக்கிறார் என்றும்; நாம் ஒவ்வொருவரும் நம்முடைய உத்தம குணத்தோடு கர்த்தருக்கு கொடுக்கிறதை மனப்பூர்வமாய்க் கொடுத்தால் கர்த்தர் நம்மில் சந்தோஷமடைவார் என்பதனை தேவனுடைய வார்த்தைகளால் அறிந்துக் கொள்கிறோம். மேலும் தாவீது; ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரவேல் என்னும் எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே, உமது ஜனத்தின் இருதயத்தில் உண்டான சிந்தயையும், நினைவையும் என்றன்றைக்கும் காத்து அவர்கள் இருதயத்தை உமக்கு நேராக்கும் என்றும்; என் குமாரனாகிய சாலொமோன் உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய சாட்சிகளையும். கட்டளைகளையும் கைக்கொள்ளும்படிக்கும், இவைகள் எல்லாவற்றையும் செய்து, நான் ஆயத்தம்பண்ணின இந்த அரமனையைக் கட்டும்படிக்கும், அவனுக்கு உத்தம இருதயத்தை தந்தருளும் என்றான்.
இதன் திருஷ்டாந்தம் என்னவென்றால் நாமும் கர்த்தருடைய கற்பனைகளையும், சாட்சிகளையும், கட்டளைகளையும் கைக்கொள்ளும்படியாகவும் கர்த்தராகிய கிறிஸ்து வசிக்கும்படியாக நம்மில் ஆயத்தம்பண்ணின அரண்மனையாகிய மாளிகையை கட்டும்படியாக நாம் ஒவ்வொருவரும் உத்தம இருதயத்தை காண்பிக்கும் பொருட்டு கிறிஸ்து நமக்காக வேண்டுதல் செய்கிறவராயிருக்கிறார். இவ்விதமாக நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்களானால், நாம் எப்போதும் கர்த்தரை ஸ்தோத்தரித்து, தலைகுனிந்து கர்த்தரை பணிந்துக்கொள்கிறவர்களாக இருக்க வேண்டும். பின்பு நாம் கர்த்தருக்கு அதிகமான ஸ்தோத்திர பலிகளையிட்டு கர்த்தரை மகிமைப்படுத்தி நம்மை முழுமையாக ஒப்புக்கொடுப்போம். பின்பு கர்த்தருக்கு முன்பாக மிகுந்த சந்தோஷத்தோடு போஜனம்பண்ணி, அதனால் நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவின் ஜீவன் பெற்று விளங்குமானால் கிறிஸ்து நம்மில் ஆசாரியராக தேவனால் அபிஷேகம் பண்ணப்படுகிறார். அவ்விதமாக கிறிஸ்து நம் நடுவில் சிங்காசனத்தில் வீற்றிருந்தால் நாம் பாக்கியசாலிகளாயிருப்போம். கிறிஸ்துவின் சபையார் கிறிஸ்துவுக்கு எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்திருப்பார்கள். இப்படியாக கர்த்தர் தம்முடைய குமாரனாகிய கிறிஸ்துவை நம்மில் மிகவும் பெரியவராக்கி, மற்ற எல்லா முன்னே இருந்த இஸ்ரவேல் ராஜாவான ஒருவனுக்கும் இல்லாதிருந்த மகத்துவத்தை கிறிஸ்துவுக்கு கொடுப்பதை சாலொமோனை வைத்து திருஷ்டாந்தப்படுத்தும்பொருட்டாக தாவீது இஸ்ரவேல் அனைத்திற்கும் ராஜாவாயிருந்தான். இப்படியாக தாவீது இஸ்ரவேலை நாற்பது வருஷம் அரசாண்டான், எப்ரோனிலே ஏழு வருஷமும், எருசலேமிலே முப்பத்து மூன்று வருஷமும் ராஜாவாயிருந்தான். அவன் தீர்க்காயுசும், ஐசுவரியமும் மகிமையுள்ளவனாய், நல்ல முதிர்வயதிலே மரணமடைந்தபின் அவன் குமாரன் சாலொமோன் அவன் ஸ்தானத்தில் அரசாண்டான்.இது என்னவென்றால் நம் வாழ்வில் கிறிஸ்து தீர்க்காயுசும், ஐசுவரியமும் மகிமையுமுள்ளவராய் நம்மில் ஒவ்வொரு நாளிலும் விளங்கிக்கொண்டிருப்பார். அல்லாமலும் தாவீதின் நாட்களில் நடந்த சகல காலசம்பவங்களும் ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலின் பிரபந்தத்திலும், தீர்க்கதரிசியாகிய நாத்தானின் பிரபந்தத்திலும், ஞான திருஷ்டிகாரனாகிய காத்தின் பிரபந்தத்திலும் எழுதியிருக்கிறது. இந்த கர்த்தரின் வார்த்தைகளை நாம் கருத்தில் கொண்டு நாம் ஒவ்வொருவரும் உத்தம இருதயத்தோடு கர்த்தரை பிற்பற்றுகிறவர்களாகி, கர்த்தரின் மாளிகைகளாக விளங்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.