தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யோபு 4:12

இப்போதும் ஒரு வார்த்தை என்னிடத்தில் இரகசியமாய் அறிவிக்கப்பட்டது, அதினுடைய மெல்லிய ஓசை என் செவியில் விழுந்தது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் ஒவ்வொருவரும்,  தேவன் நம்மிடம் பேசுகிற சத்தம் கேட்கிறவர்களாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரோடு உத்தம இருதயம் உள்ளவர்களாக விளங்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 நாளாகமம் 1:1-4

தாவீதின் குமாரனாகிய சாலொமோன் தன் ராஜ்யத்திலே பலப்பட்டான்; அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனுடனே இருந்து அவனை மிகவும் பெரியவனாக்கினார்.

சாலொமோன் ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளும், நியாயாதிபதிகளும், இஸ்ரவேல் எங்குமிருக்கிற வம்சங்களின் தலைவராகிய சகல பிரபுக்களுமான இஸ்ரவேல் அனைவரோடும் பேசி,

அவனும் அவனோடேகூடச் சபையார் அனைவரும், கிபியோனிலிருக்கிற மேடைக்குப் போனார்கள்.

தாவீது தேவனுடைய பெட்டிக்கு எருசலேமிலே கூடாரம்போட்டு ஆயத்தம்பண்ணின ஸ்தலத்திற்குக் கீரியாத்யாரீமிலிருந்து அதைக் கொண்டுவந்தான்; கர்த்தரின் தாசனாகிய மோசே வனாந்தரத்திலே பண்ணின தேவனுடைய ஆசரிப்புக்கூடாரம் அங்கே இருந்தது.

மேற்கூறப்பட்ட வசனங்களில் தாவீதின் குமாரனாகிய சாலொமோன் தன் ராஜ்யத்திலே பலப்பட்டான்; அவனுடய தேவனாகிய கர்ததர்  அவனுடனே இருந்து அவனை மிகவும் பெரியவனாக்கினார்.  சாலொமோன் ஆயிரம் பேருக்கு அதிபதிகளும் நூறு பேருக்கு அதிபதிகளும், நியாயாதிகளும், இஸ்ரவேலில் எங்குமிருக்கிற வம்சங்களின் தலைவராகிய சகல பிரபுக்களான இஸ்ரவேல் அனைரோடும் பேசி, அவனும் அவனோடேக்கூட சபையார் அனைவரும், கிபியோனிலிருக்கிற  மேட்டுக்கு போனார்கள்.  தாவீது தேவனுடைய பெட்டிக்கு எருசலேமிலே கூடாரம் போட்டு ஆயத்தம் பண்ணின ஸ்தலத்திற்குக் கீரியாத்யாரீமிலிருந்து அதைக் கொண்டு வந்தான்; கர்த்தரின் தாசனாகிய மோசே வனாந்தரத்திலே பண்ணின தேவனுடைய ஆசரிப்புக்கூடாரம் அங்கே இருந்தது.  மேலும்

2 நாளாகமம் 1:5,6 

ஊரின் புத்திரனாகிய ஊரியின் குமாரன் பெசலெயேல் உண்டுபண்ணின வெண்கலப் பலிபீடமும் அங்கே கர்த்தரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக இருந்தது; சாலொமோனும் சபையாரும் அதை நாடிப்போனார்கள்.

அங்கே சாலொமோன் ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாகக் கர்த்தரின் சந்நிதியிலிருக்கிற வெண்கலப் பலிபீடத்தின்மேல் ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்திப் பலியிட்டான்.

மேற்கூறிய வசனங்கள் பிரகாரம் இஸ்ரவேல் சபையும், சாலொமோனும் நடந்துக்கொண்டதால் அன்று ராத்திரியிலே தேவன் சாலொமோனிடம் நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்றார்.  

பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது, கிறிஸ்து தாவீதின் குமாரனாக தேவனுடைய ராஜ்யத்தில் பலப்படுவார் என்பதும், எல்லாவரைக் காட்டிலும் உயர்ந்திருப்பார் என்பதும் திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது.  அல்லாமலும் கர்த்தருக்கு ஆராதனைச் செய்யும்படி மோசேயைக்கொண்டு ஆசரிப்புக்கூடாரம் போடுகிறார்; அதன் பின்பு ஊரியின் குமாரனாகிய பெசெலெயேல் உண்டு பண்ணின வெண்கல பலிபீடம் கர்த்தரின் வாசஸ்தலத்திற்கு  முன்பாக இருக்கிறது.  சாலொமோன் கர்த்தரின் சந்நிதியிலிருக்கிற வெண்கல பலிபீடத்தின் மேல் ஆயிரம் சர்வாங்க தகனபலி செலுத்தி பலியிடுகிறான் என்பது கர்த்தர் நமக்கு வைத்திருக்கிற திருஷ்டாந்தம். இவை  என்னவெனில் கர்த்தர் மோசேயைக்கொண்டு நமக்கு தந்த சகல கட்டளை, கற்பனை நியாயப்பிரமாணம் எல்லாம் எப்போதும் நம்மில் நிலைத்திருக்க வேண்டும் என்பதும்,  வெண்கல பலிபீடம் என்பது கர்த்தருடைய சத்திய வசனங்கள் நம்மில் நிலைத்திருப்பதும், மற்றும் எண்ணிக்கைக்கு  அடங்காத ஸ்தோத்திர பலிகளை நாம் கர்த்தருக்கு செலுத்த கடமைப்பட்டவர்களாயிருக்கிறோம். அல்லாமலும்  உ்ண்மையாக உத்தம இருதயத்தோடு நாம் செலுத்துவோமானால் அன்று ராத்திரியிலே தேவன் நம்மோடு பேசுவார் என்பது நிச்சயம்.  ஆதலால் இப்படியாக நாம் கர்த்தரை மகிமைப்படுத்தும்படியாக நம்மை முழுமையாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.