தேவனுக்கே மகிமையுண்டாவதாக
எபிரெயர் 10:25
சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சத்திய சபையோடு சேர்ந்து கர்த்தரை ஆராதிக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதிகளில், மணவாட்டி சபையாகிய நாம் தேவனுடைய காரியங்களைக் குறித்து ஏக சிந்தையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக தியானிப்பது என்னவென்றால்
2 நாளாகமம் 1:13-17
இப்படிச் சாலொமோன் கிபியோனிலிருக்கிற மேட்டிற்குப் போய், ஆசரிப்புக்கூடாரத்தின் சந்நிதியிலிருந்து எருசலேமுக்கு வந்து, இஸ்ரவேலை அரசாண்டான்.
சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரரையும் சேர்த்தான்; அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்கள் இருந்தது; பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்; அவைகளை இரதங்களின் பட்டணங்களிலும், அவர்களை ராஜாவாகிய தன்னிடத்தில் எருசலேமிலும் வைத்திருந்தான்.
ராஜா எருசலேமிலே வெள்ளியையும் பொன்னையும் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்கில் இருக்கிற காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கினான்.
சாலொமோனுக்கு இருந்த குதிரைகளும் புடவைகளும் எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்டது; ராஜாவின் வர்த்தகர் புடவைகளை ஒப்பந்த விலைக்கிரயத்துக்கு வாங்கினார்கள்.
அவர்கள் எகிப்திலிருந்து ஒரு இரதத்தை அறுநூறு வெள்ளிக்காசுக்கும், ஒரு குதிரையை நூற்றைம்பது வெள்ளிக்காசுக்கும் கொண்டுவருவார்கள்; அந்தப்படியே ஏத்தியரின் சகல ராஜாக்களுக்கும், சீரியாவின் ராஜாக்களுக்கும் அவர்கள் மூலமாய்க் கொண்டுவரப்பட்டது.
மேற்கூறிய வசனங்களில் ராஜாவாகிய சாலொமோன் இஸ்ரவேலை அரசாள தொடங்கின பின்பு இரதங்களையும் குதிரை வீரரையும் சேர்த்தான். அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்கள் இருந்தது; பன்னீராயிரம் குதிரை வீரரும் இருந்தார்கள்; அவைகளை இரதங்களின் பட்டணங்களிலும்,அவர்களை ராஜாவாகிய தன்னிடத்தில் எருசலேமிலும் வைத்தான். ராஜா எருசலேமிலே வெள்ளியையும் பொன்னையும் கற்கள் போலவும், கேதுரு மரங்களைப் பள்ளத்தாக்கில் இருக்கிற காட்டத்தி மரங்கள் போலவும் அதிகமாக்கினான். சாலொமோனுக்கு இருந்த குதிரைகளும், புடவைகளும் எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்டது. ராஜாவின் வர்த்தகர்கள் புடவைகளை ஒப்பந்த விலைக்கிரயத்துக்கு வாங்கினார்கள். அவர்கள் எகிப்திலிருந்து ஒரு இரதத்தை அறுநூறு வெள்ளிக்காசுக்கும், ஒரு குதிரையை நூற்றைம்பது வெள்ளிக்காசுக்கும் கொண்டு வருவார்கள்; அந்தபடியே ஏத்தியரின் சகல ராஜாக்களுக்கும், சீரியரின் ராஜாக்களுக்கும் அவர்கள் மூலமாய் கொண்டுவரப்பட்டது.
பிரியமனவர்களே, மேற்கூறிய வசனங்களில் ராஜாவாகிய சாலொமோன் சேர்த்து எருசலேமிலே கொண்டு வந்த இரதங்களும், குதிரைகளும் என்றால் தேவனால் அபிஷேகம்பண்ணப்பட்டவர்கள் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் சேர்க்கப்படுகிறார்கள் என்பது திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது.மேலும் அவர்கள் தங்கள் பாரம்பரிய வாழ்வை களைந்து விடுகிறதினால், தேவ மகிமையை அடைகிறவர்கள் ராஜாவின் வேலைக்காரர்களால் தேவனோடு ஒப்புரவாக்கப்பட்டு விலைக்கிரயமாக வாங்கப்படுகிறார்கள். அல்லாமலும் பல உலக கிரியைகளால் மேன்மையோடு வாழ்ந்தவர்களும் இரட்சிக்கப்பட்டு தேவ சபையோடு இணைகிறார்கள் என்பதும் திருஷ்டாந்தபடுத்தபுபடுகிறது. ஆதலால் கிறிஸ்துவின் சத்திய சபையோடு நாமெல்லாரும் சேர்ந்துக்கொண்டு கர்த்தரை ஆராதிக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.