தேவனுக்கே மகிமையுண்டாவதாக

வெளி: 3:12

ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் ஒவ்வொருவரும் ஆலயத்தின் தூண்கள்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் மகிமையால் நிரப்பப்படவேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 நாளாகமம் 3:10-17 

அவன் மகா பரிசுத்தமான ஆலயத்திலே இரண்டு கேருபீன்களையும் சித்திரவேலையாய் உண்டுபண்ணினான்; அவைகளைப் பொன்தகட்டால் மூடினான்.

அந்தக் கேருபீன்களுடைய செட்டைகளின் நீளம் இருபது முழமானது; ஒன்றினுடைய ஒரு செட்டை ஐந்துமுழமாயிருந்து, ஆலயத்துச் சுவரைத் தொட்டது; மறுசெட்டை ஐந்துமுழமாயிருந்து, மற்றக் கேருபீனின் செட்டையைத் தொட்டது.

மற்றக் கேருபீனின் ஒரு செட்டையும் ஐந்துமுழமாயிருந்து, ஆலயத்துச்சுவரைத் தொட்டது; அதின் மறுசெட்டையும் ஐந்துமுழமாயிருந்து, மற்றக் கேருபீனின் செட்டையைத் தொட்டது.

இப்படியே அந்தக் கேருபீன்களின் செட்டைகள் இருபதுமுழ விரிவாயிருந்தது; அவைகள் தங்கள் கால்களால் ஊன்றி நின்றது; அவைகளின் முகங்கள் ஆலயத்து உட்புறமாய் நோக்கியிருந்தது.

இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லியநூலாலும் திரையையும், அதிலே கேருபீன்களின் உருவங்களையும் உண்டுபண்ணினான்.

ஆலயத்திற்கு முன்னாக முப்பத்தைந்துமுழ உயரமான இரண்டு தூண்களையும், அவைகளுடைய முனைகளின்மேலிருக்கும் ஐந்துமுழ உயரமான கும்பங்களையும் உண்டாக்கி,

சந்நிதிக்கு முன்னிருக்கச் சங்கிலிகளையும் பண்ணி, தூண்களின் முனைகளின்மேல் பற்றவைத்து, நூறு மாதளம்பழங்களையும் பண்ணி அந்தச் சங்கிலிகளில் கோர்த்தான்.

அந்தத் தூண்களை அவன் தேவாலயத்திற்கு முன்பாக ஒன்றை வலதுபுறத்திலும் ஒன்றை இடதுபுறத்திலும் நாட்டி, வலதுபுறமானதற்கு யாகீன் என்றும், இடதுபுறமானதற்குப் போவாஸ் என்றும் பேரிட்டான்.

மேற்கூறப்பட்ட கர்த்தரின் வார்த்தை என்னவென்றால் மகா பரிசுத்தமான ஆலயத்திலே இரண்டு கேரூபீன்களையும் சித்திர வேலையாய் உண்டு பண்ணினான்: அவைகளை பொன் தகட்டால் மூடினான். அந்த கேரூபீன்களுடைய செட்டைகளின் நீளம் இருபது முழமானது;  ஒன்றினுடைய  ஒரு செட்டை, ஐந்து முழமாயிருந்து, ஆலயத்துச்சுவரை தொட்டது; மறு செட்டை ஐந்து முழமாயிருந்தது, மற்றக் கேருபீனின் செட்டையைத் தொட்டது.  இவ்விதமாக இரண்டு செட்டைகளில் ஒரு செட்டை ஐந்து முழமாயிருந்து ஆலயத்தின் சுவரை தொடுகிறது, மறு செட்டையும்  ஐந்து முழமாயிருந்து  மற்ற கேரூபீனின் செட்டையை தொடுகிறது. இவை என்னவென்றால் இருபது முழ உயரமும்  அகலமும் கொண்ட ஆலயம் முழுவதும் கேரூபீன்களின் செட்டைகளால் நிறையப்பட்டிருக்கிறது.  இப்படியே அந்த கேரூபீன்களின் செட்டைகள் இருபதுமுழ விரிவாயிருந்தன; அவைகள் தங்கள் கால்களால் ஊன்றி நின்றன; அவைகளின் முகங்கள் ஆலயத்து உட்புறமாய் நோக்கியிருந்து.  இவையென்றால் கேருபீன்களும், சேராபீன்களும் என்றால் பரிசுத்த தூதர்களை குறிக்கிறது.  பரிசுத்த தூதர்கள் தாங்கள் பரிசுத்தத்தை காததுக்கொண்டவர்களாக இரவும் பகலும் கர்த்தரை துதித்து பாடி மகிமைப்படுத்துகிறார்கள் என்று திருஷ்டாந்தப்படுத்தபடுகிறது என்றால், நம்மில் எப்போதும் துதியும் ஸ்தோத்திரமும் விளங்கும் போது ஆலயமாகிய நம்முடைய உள்ளம் எல்லாம் தேவ மகிமையால் நிறைந்திருக்க வேண்டும் என்பதனையும், நம்முடைய முகங்கள் எப்போதும் கர்த்தரையே நோக்கியிருக்க வேண்டும்;அப்படிபட்டவர்கள் கிறிஸ்துவின் கிருபையிலும், அவருடைய ஜீவனிலும், அவருடைய சுத்த இரத்தத்தாலும்,  அவருடைய அன்பிலும் உறுதிபடுத்தப்பட்டவர்களாய் இருப்பார்கள். ஆலயத்திற்கு முன்னாக முப்பத்தைந்து முழு உயரமான இரண்டு தூண்களையும், அவைகளுடைய முனைகளின் மேலிருக்கும் ஐந்து முழ உயரமான கும்பங்களையும் உண்டாக்கி, சங்கிலிகளையும்  சந்நிதிக்கு முன்னிருக்கப் பண்ணி தூண்களின் முனைகளின் மேல் பற்ற வைத்து, நூறு மாதளம்பழங்களையும் பண்ணி, அந்த சங்கிலிகளில் கோத்தான்.  இந்த இரண்டு தூண்கள் கிறிஸ்துவும், மணவாட்டியாகிய பரிசுத்த ஆவியானவராலும் அபிஷேகம்பண்ணபடுகிற ஜனங்கள் தேவனோடு இணைக்கப்படுகிறார்கள்.  இந்த தூண்களில் ஒன்று தேவாலயத்திற்கு வலதுபுறமாகவும், ஒன்று இடதுபுறமாகவும் நாட்டப்படுகிறது.  இந்த தூண்களில் வலதுபுறமானதற்கு யாகீன் என்றும், இடதுபுறமானதற்கு போவாஸ் என்றும் பேரிட்டான்.    இப்படியாக கிறிஸ்துவினால் இரட்சிக்கப்பட்டு அபிஷேகிக்கபண்ணப்பட்டவர்கள் எல்லாரும் ஆலயத்தின் தூண்களாகும்படி கர்த்தர் நம்மை நாட்டுகிறார்.  இவ்விதம் கர்த்தரின் ஆலயத்தின் தூண்களாகும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.