தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 2:3 

திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார்; நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மில் தேவன் பிரகாசிக்கவேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் கிருபைகளை காத்துக்கொள்ள வேண்டும் என்பதன் திருஷ்டாந்தத்தைக் குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 நாளாகமம் 5:1-2 

கர்த்தருடைய ஆலயத்துக்காகச் சாலொமோன் செய்த வேலையெல்லாம் முடிந்தபோது, சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீது பரிசுத்தம்பண்ணும்படி நேர்ந்தவைகளைக் கொண்டுவந்து, வெள்ளியையும், பொன்னையும், சகல பணிமுட்டுகளையும், தேவனுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் வைத்தான்.

பின்பு கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியைச் சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பரையும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரின் வம்சத் தலைவர் எல்லாரையும் எருசலேமிலே கூடிவரச்செய்தான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் சாலொமோன் தேவனுடைய ஆலயத்துக்காக செய்த வேலையெல்லாம் முடிந்த பின்பு, தன் தகப்பனாகிய தாவீது பரிசுத்தம் பண்ணும்படி நேர்ந்துக் கொண்டவைகளாகிய பொன்னையும், வெள்ளியையும், பண்முட்டுகளையும் கொண்டு வந்து தேவனுடைய ஆலயத்தின் பொக்கிஷத்தில் வைத்தான். பின்பு கர்த்தருடைய  உடன்படிக்கைப்பெட்டியைச் சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டு வரும்படி, சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பரையும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரின் வம்சத் தலைவர் எல்லாரையும் எருசலேமிலே கூடிவர செய்தான்.  அப்படியே இஸ்ரவேலர் எல்லாரும் கூடி வந்த பின்பு 

2 நாளாகமம் 5:3-6 

அப்படியே இஸ்ரவேலர் எல்லாரும் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே ராஜாவினிடத்தில் கூடிவந்தார்கள்.

இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் வந்தபின்பு லேவியர் பெட்டியை எடுத்து,

பெட்டியையும், ஆசரிப்புக்கூடாரத்தையும், கூடாரத்திலிருக்கிற பரிசுத்த பணிமுட்டுகளையும் கொண்டுவந்தார்கள்; அவைகளைக் கொண்டுவந்தவர்கள் லேவியரான ஆசாரியரே.

ராஜாவாகிய சாலொமோனும், அவனோடே கூடின இஸ்ரவேல் சபையார் அனைவரும், பெட்டிக்கு முன்பாக எண்ணிக்கைக்கும் தொகைக்கும் அடங்காத ஏராளமான ஆடுமாடுகளைப் பலியிட்டார்கள்.

மேற்கூறப்பட்ட வார்த்தைகள் பிரகாரம் கர்த்தருடைய பெட்டியைக் கொண்டு வந்த பின்பு சாலொமோன் ராஜாவும், இஸ்ரவேலர் சபையார் அனைவரும் பெட்டிக்கு முன்பாக எண்ணிக்கைக்கும், தொகைக்கும் அடங்காத ஏராளமான ஆடுமாடுகளை பலியிட்டார்கள். 

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்டவைகளை நாம் தியானிக்கும் போது, நாம் கர்த்தருடைய ஆலயமாக விளங்கினால், நம்மில் சீயோனாக தேவன் வெளிப்படுவார். சீயோனில் கர்த்தரின் உடன்படிக்கைப் பெட்டி வைக்கப்படுகிறது என்றால் சீயோனில் வேதம் வெளிப்படும்;எருசலேமிலிருந்து வசனம் வெளிப்படும். இப்படியாக வேதவசனமாக நம்மில் தேவன் பிரகாசிக்கிறார்.  இதனை திருஷ்டாந்தபடுத்தி முந்தின வார்த்தைகள் எழுதப்பட்டிருக்கிறது. இப்படி நம் உள்ளத்திலிருந்து ஜீவ தண்ணீர் புறப்பப்ட தொடங்ககுகையில் நாம் தேவனுக்கு முன்பக சபையாக கூடி அதிகமான ஸ்தோத்திர பலிகளை செலுத்த வேண்டும்.  இவை நாம் தேவனுக்கு செய்கிற ஆராதனை.  இப்படியாக நம்மை கர்த்தருக்காய்  ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.