தேவனுக்கே மகிமையுண்டாவதாக
எரேமியா 31:3
பூர்வகாலமுதல் கர்த்தர் எனக்குத் தரிசனையானார் என்பாய்; ஆம் அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் தேவாலயமாக மாறி தேவ மகிமையால் நிறையப்படுவோம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்மில் தேவன் பிரகாசிக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 நாளாகமம் 5:7-8
அப்படியே ஆசாரியர் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை, ஆலயத்தின் சந்நிதியாகிய மகா பரிசுத்தமான ஸ்தலத்திலே, கேருபீன்களுடைய செட்டைகளுக்குக் கீழாகக் கொண்டுவந்து வைத்தார்கள்.
கேருபீன்கள், பெட்டியிருக்கும் ஸ்தானத்தின்மேல், தங்கள் இரண்டிரண்டு செட்டைகளை விரித்து உயர இருந்து பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தன.
மேற்கூறிய வசனங்களில் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைகொண்டு வந்து, கர்த்தருக்கு முன்பாக பலியிட்ட பின்பு, ஆசாரியர் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை, ஆலயத்தின் சந்நிதியாகிய மகா பரிசுத்தமான ஸ்தலத்திலே, கேரூபீன்களுடைய செட்டைக்குக் கீழாகக் கொண்டு வந்து வைத்தார்கள். கேரூபீன்கள் பெட்டியிருக்கும் ஸ்தானத்தின்மேல், தங்கள் இரண்டிரண்டு செட்டைகளை விரித்து உயர இருந்து பெட்டியையும் அதின்தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தன. மேலும்
2 நாளாகமம் 5:9
பெட்டியிலிருக்கிற தண்டுகளின் முனைகள் சந்நிதி ஸ்தலத்திற்கு முன்னே காணப்படத்தக்கதாய் அந்தத் தண்டுகளை இழுத்தார்கள்; புறம்பே அவைகள் காணப்படவில்லை; அது இந்நாள்வரைக்கும் அங்கே இருக்கிறது.
முன் கூறப்பட்ட வசனங்களில் கர்த்தருடைய பெட்டியின் தண்டுகள் இழுக்கப்படுகிற விதங்கள் எழுதப்பட்டிருக்கிறது.
பிரியமானவர்களே, திருஷ்டாந்ததிற்க்காக மேற்கூறப்பட்டவைகள் எழுதப்பட்டுள்ளது. கர்த்தருடைய பெட்டியாகிய தேவவசனம் நம்மில் இருக்குமானால் கர்த்தர் எப்படி நம்மை அவருடைய வசனத்தால் காக்கிறார் என்றும், எப்படி நம்மை அவருடைய வசனத்தால் அவரண்டையில் இழுத்துக்கொள்கிறார் என்றும் கூறப்பட்டிருக்கிறது. கர்த்தர் ஒருவனை எவ்விதம் இழுத்துக்கொள்கிறார் என்பதனை யாரும் காணமுடியாது. ஆனால் அவர்கள் பாரம்பரிய பாவ வாழ்க்கையை விட்டு கர்த்தருடைய ஸ்தலமாகிய ஒரேபிலே உடன்படிக்கைப்பண்ணுவார்கள். அப்படி நாம் கர்த்தரோடு உடன்படிக்கைபண்ணும் போது, மோசே அந்த பெட்டியில் வைத்த கற்பலகைகளே அல்லாமல் வேறொன்றும் இருந்ததில்லை என்றால்; முதலாவது நியாயப்பிரமாணம் காத்துக்கொள்ளவேண்டும். அவ்விதம் காத்துக்கொண்டு தங்களை பரிசுத்தம்பண்ணிக்கொள்ள வேண்டும்.பின்பு நாம் யாவரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, கைத்தாளங்களோடும், தம்புருக்களோடும், சுரமண்டலங்களோடும் நின்று கர்த்தரை போற்றிப்பாட வேண்டும். பின்பு கர்த்தரால் ஆசாரியத்துவம் பெற்றவர்கள் வசனங்களை போதிக்கிறதாகயிருக்கவேண்டும்; சபையார் யாவரும் நடுக்கத்துடனே அதற்கு கீழ்படிகிறவர்களாகயிருக்க வேண்டும். பின்பு கர்த்தரை ஒருமித்து ஏகசத்தமாய் கர்த்தரை துதித்து ஸ்தோத்தரித்து பாடி மகிமைப்படுத்தும் போது, நம்முடைய ஆத்துமா எழுப்புதல் அடைந்து விசுவாசபாதையை நோக்கி முன்னேறும். அவ்விதம் வாழ்வில் மாற்றங்கள் தோன்றும் போது. நாமாகவே கர்த்தர் நல்லவர் அவர்கிருபை என்றுமுள்ளது என்று ஸ்தோத்தரிப்போம்; அப்போது கர்த்தருடைய வீடாகிய தேவாலயமாகிய நாம் ஒவ்வொருவரும் தேவ மகிமையால் நிறையப்படுவோம்; இவ்விதமாக நம்மை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.