தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 122:9

எங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தினிமித்தம் உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் தேவனுடைய ஆலயமாக விளங்கும் போது கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கிறார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் தேவாலயமாக மாறி தேவ மகிமையால் நிறையப்பட வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 நாளாகமம் 6:1-3 

அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,

தேவரீர் வாசம்பண்ணத்தக்க வீடும், நீர் என்றைக்கும் தங்கத்தக்க நிலையான ஸ்தானமுமாகிய ஆலயத்தை உமக்குக் கட்டினேன் என்றும் சொல்லி,

ராஜா முகம் திரும்பி, இஸ்ரவேல் சபையார் எல்லாரையும் ஆசீர்வதித்தான்; இஸ்ரவேல் சபையார் எல்லாரும் நின்றார்கள்.

மேற்கூறிய வசனங்களில் சாலொமோன் கர்த்தருக்காக ஆலயம் கட்டி முடித்த பின்பு, ஆலயம் தேவனுடைய மகிமையால் நிறைந்த பின்பு சாலொமோன்: காரிருளில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,தேவரீர் வாசம்பண்ணதக்க வீடும், நீர் என்றைக்கும் தங்க தக்க ஸ்தானமாகிய ஆலயத்தை உமக்கு கட்டினேன் என்று சொல்லி,ராஜா முகம் திரும்பி, இஸ்ரவேல் சபையார் எல்லாரும் ஆசீர்வதிக்கும் போது; இஸ்ரவேல் சபையார் எல்லாரும் நின்றார்கள்.  அவன் சொன்னது 

2 நாளாகமம் 6: 4-12 

அவன் சொன்னது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் தகப்பனாகிய தாவீதுக்குத் தம்முடைய வாக்கினால் சொன்னதை, தம்முடைய கரத்தினால் நிறைவேற்றினார்.

அவர்: நான் என் ஜனத்தை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதற்கொண்டு, என் நாமம் விளங்கும்படி, ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டுமென்று நான் இஸ்ரவேலுடைய எல்லாக்கோத்திரங்களிலுமுள்ள வேறே யாதொரு பட்டணத்தைத் தெரிந்துகொள்ளாமலும், என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கும்படி வேறே ஒருவரைத்தெரிந்துகொள்ளாமலும்,

என் நாமம் விளங்கும் ஸ்தானமாக எருசலேமையும், என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கத் தாவீதையும் தெரிந்துகொண்டேன் என்றார்.

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் என் தகப்பனாகிய தாவீதின் மனதில் இருந்தது.

ஆனாலும் கர்த்தர் என் தகப்பனாகிய தாவீதை நோக்கி: என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் உன் மனதிலே இருந்தது நல்ல காரியந்தான்.

ஆகிலும் நீ அந்த ஆலயத்தைக் கட்டமாட்டாய்; உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் குமாரனே என் நாமத்திற்கு அந்த ஆலயத்தைக் கட்டுவான் என்றார்.

இப்போதும் கர்த்தர் சொல்லிய தமது வார்த்தையை நிறைவேற்றினார்; கர்த்தர் சொன்னபடியே, நான் என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்தில் எழும்பி, இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டி,

கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருடனே பண்ணின உடன்படிக்கையிருக்கிற பெட்டியை அதிலே வைத்தேன் என்று சொல்லி,

கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்னே இஸ்ரவேல் சபையார் எல்லாருக்கும் எதிராக நின்று தன் கைகளை விரித்தான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் கர்த்தர் நம்மில் ஆலயமாக எழும்பினாராகில் நாம் கர்த்தரை மிகவும் ஸ்தோத்தரிக்கிறவர்களாக இருக்க வேண்டும்.  ஏனென்றால் அவர் தம்முடைய வாக்கினால் சொன்னதை எந்த ஒரு நாளிலாகிலும் நிறைவேற்றுவார் என்பது நிச்சயம்.  நம் முன்னோர்களில்  செய்யாத காரியங்களை, நாம் அவரை நம்பினால் நம் காலங்களில் கட்டாயமாக நிறைவேற்றுவார் என்பது நிச்சயம். கர்த்தர் நம்மை அழைத்து அவர் பாதத்தில் கொண்டு வந்த நாளிலிருந்து நம்மை தெரிந்துக்கொண்டு, அவர் நாமம்  விளங்கும் ஸ்தானமாகிய எருசலேமையும், அதின் அதிபதியாக கிறிஸ்துவையும் தெரிந்துக்கொண்டு, கிறிஸ்து ஆலயமாக நம்மில் எழும்பி, அவருடைய வார்த்தையை நம்மில் திடப்படுத்தி என்றைக்கும் நாம் தேவனுடைய ஆலயமாக விளங்குவோம்   என்ற தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுகிறார் என்பதனை திருஷ்டாந்தப்படுத்தி, நான் என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்தில், எழும்பி, இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தை கட்டி, இஸ்ரவேல் புத்திரருடனே பண்ணின உடன்படிக்கையிருக்கிற பெட்டியை அதிலே வைத்தான். இப்படியாக நாம் கர்த்தருக்காக விங்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.