தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 92:13

கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்காய் நம்மை பிரதீஷ்டிக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்மிலிருந்து கிறிஸ்து நமக்காக விண்ணப்பித்து ஜெபிக்கிறார் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 நாளாகமம் 7:1-4 

சாலொமோன் ஜெபம்பண்ணி முடிக்கிறபோது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, சர்வாங்க தகனபலியையும் மற்றப் பலிகளையும் பட்சித்தது; கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று.

கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பினதினால், ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கக்கூடாதிருந்தது.

அக்கினி இறங்குகிறதையும், கர்த்தருடைய மகிமை ஆலயத்தின்மேல் தங்கியிருக்கிறதையும், இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் கண்டபோது, தளவரிசைமட்டும் தரையிலே முகங்குப்புறக் குனிந்து பணிந்து, கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று சொல்லி, அவரைத் துதித்தார்கள்.

அப்பொழுது ராஜாவும் சகல ஜனங்களும் கர்த்தருடைய சந்நிதியில் பலிகளைச் செலுத்தினார்கள்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் சாலொமோன் ஜெபம்பண்ணி முடிக்கிறபோது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, சர்வாங்க தகனபலியையும் மற்ற பலிகளையும் பட்சித்தது; கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று.  கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பினதினால், ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கக்கூடாதிருந்தது.  மேலும் 

2 நாளாகமம் 7:5 

ராஜாவாகிய சாலொமோன் இருபத்தீராயிரம் மாடுகளையும், லட்சத்திருபதினாயிரம் ஆடுகளையும் பலியிட்டான்; இவ்விதமாய் ராஜாவும் சகல ஜனங்களும் தேவனுடைய ஆலயத்தைப் பிரதிஷ்டைபண்ணினார்கள்.

மேற்கூறிய வசனப்பிரகாரம் தேவனுடைய ஆலயத்தை பிரதீஷ்டைப்பண்ணினார்கள். 

பிரியமானவர்களே, தேவனுடைய ஆலயம் பிரதீஷ்டை என்பது நமக்கு திருஷ்டாந்தத்திற்கென்றுக் கொடுக்கப்பட்டுள்ளது என்னவென்றால் நம்மை கர்த்தருக்காய் எப்படி பிரதீஷ்டையாக்க வேண்டும் என்பனை விளக்கிக்காட்டி,நாம் தேவனுடைய ஆலயமாக கிறிஸ்துவுக்குள் மகிமையாக விளங்கினால்; கர்த்தருக்கு நாம் செலுத்தவேண்டிய பலிகளாகிய துதிகளையும், ஸ்தோத்திரபலிகளையும் உண்மையுள்ள இருதயத்தோடு செலுத்தும் போது, நம்மை கர்த்தர் ஏற்றுக்கொண்டு அவர் மகிமையால் நம்மை முழுமையும் நிரப்புவார்.  அவ்விதம் தேவனுடைய மகிமையினால் நிரம்பும் போது, பரலோகத்திலிருந்து அக்கினி நம் உள்ளத்தில் இறங்குகிறதையும், அவர் மகிமை நம்மில் தங்கியிருக்கிறதையும் நாம் காணும்போது, நாம் அவரை முகங்குப்புற குனிந்து பணிந்துக்கொண்டு, கர்த்தர் நமக்கு செய்த நன்மைகளினால் நம் வாழ்வில் கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது என்று நம்மிலிருந்து துதியின் சத்தம் தொனித்துக்கொண்டிருக்கும். நாம் துதிக்கிற துதியின் சத்தத்தால் ஜனங்கள் கர்த்தரின் சந்நதியில் பலிகளை செலுத்தும்போது, தேவனால் ஆலயமாக்கப்பட்டவர்கள் கர்த்தருக்காய் பிரதீஷ்டைபண்ணப்படுகிறார்கள்.  இப்படியாக நாம் ஒவ்வொருவரும் கர்த்தருக்காய் நம்மை பிரதீஷ்டையாக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.