தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 85:1
கர்த்தாவே,
உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து, யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக. ஆமென்.
அல்லேலூயா
இஸ்ரவேல்
வம்சத்தார் கானானில் பிரவேசித்தல்:-
கிறிஸ்துவுக்குள்
பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேத பகுதியில் சீயோன் நகரமாகிய கிறிஸ்து
எவ்விதம் நம்மளில் மகிமைப்படுகிறார் என்று பார்த்தோம். தேவன் யாக்கோபை வைத்து நமக்கு
திருஷ்டாந்தபடுத்தி புதிய எருசலேமாகிய மணவாட்டியானவர் நம் நடுவில் வெளிப்படுகிறார்.
எப்படியெனில்
நாம் தேவனுடைய நீதியாகும் படிக்கு,
பாவம் அறியாத ஆட்டுக்குட்டியானவரை நமக்காக பாவமாக்கி, அந்த பாவத்தினால் சொரிந்த பரிசுத்த
இரத்தத்தால், நாம் எல்லோரும் தேவனிடத்தில் ஒப்புரவாகும்படியாக ஒப்புரவாகுதலை நம்மளில்
நிறைவேற்றி, கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாய் தேவனிடத்தில் சேரும் சிலாக்கியத்தை தேவன்
நமக்குத் தருகிறார்.
இவ்விதமாக நாம்
ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை செய்யும் போது, கிறிஸ்து நம் இதயத்துக்குள் பிரவேசிக்கிறார்
என்னவெனில் பாவத்துக்கு மரித்து நீதிக்கு பிழைக்கிறவர்கள் மேல் இவ்வித கிரியை உண்டாயிருக்கும்.
அதைத்தான்,
சங்கீதம் 118:19,20
நீதியின் வாசல்களைத்
திறவுங்கள்; நான் அவைகளுக்குள் பிரவேசித்துக் கர்த்தரைத் துதிப்பேன்.
கர்த்தரின்
வாசல் இதுவே; நீதிமான்கள் இதற்குள் பிரவேசிப்பார்கள்.
கர்த்தர், பாவத்திற்கு
நாம் மரிக்கவேண்டும் என்று நமக்கு யாக்கோபை வைத்து திருஷ்டாந்தபடுத்துகிறார். எப்படியெனில்
யாக்கோபை வைத்து தன் மகனாகிய யோசேப்பின் குமாரராகிய எப்பிராயீமையும், மனாசேயையும் ஆசீர்வதித்ததை
கழிந்த நாட்களுக்கு முந்தின நாளில் நாம் தியானித்தோம். அவர்கள் பெரிய ஜனகூட்டமாக பெருகுவார்கள்
என்று ஆசீர்வதித்ததை பார்க்கிறோம். அந்த ஆசீர்வாதம் என்னவெனில் எப்பிராயீமை மனாசேக்கு
முன்னை வைக்கிறான்.
ஆதியாகமம் 48:21
பின்பு, இஸ்ரவேல்
யோசேப்பை நோக்கி: இதோ, நான் மரணமடையப்போகிறேன்; தேவன் உங்களோடே இருப்பார்; அவர் உங்கள்
பிதாக்களின் தேசத்துக்கு உங்களைத் திரும்பவும் போகப்பண்ணுவார் என்றும்,
இஸ்ரவேல் யோசேப்பிடம்
அவ்விதம் சொல்வதற்கு காரணம் என்னவெனில், அவர் அப்போது இருந்த இடம் எகிப்து அவன் குமாரர்கள்
இருக்கிற இடம் எகிப்து. எகிப்து என்றால் பாவம் நிறைந்த தேசம். பார்வோன் ஆளுகிற தேசம்.
இந்த எகிப்தில் தேவன் அவர்களை கொண்டு வந்து காட்டுவது பாவத்தின் அடிமையிலிருந்து நாம்
மீள வேண்டும் என்பதற்காகவே, இஸ்ரவேலை தேவன் நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார்; ஆனால்
அவர் உங்களை பிதாக்களின் தேசத்திற்கு திரும்ப போக பண்ணுவார் என்று அவர் சொல்வது, பிதாக்களின்
தேசம் கானான் தேசம். என்னவெனில் பரமதேசமாகிய கானானுக்குள் பிரவேசிக்க வேண்டும் என்பதை
குறித்து தேவன் தெளிவுப்படுத்தி காட்டுகிறார்.
ஆனால் யாக்கோபும்,
ஆதியாகமம் 49:29
பின்னும் அவன் அவர்களை நோக்கி: நான் என் ஜனத்தாரோடே சேர்க்கப்படப்போகிறேன்; ஏத்தியனான எப்பெரோனின் நிலத்திலுள்ள குகையிலே என்னை என் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டு;
ஆதியாகமம் 49:33
யாக்கோபு தன்
குமாரருக்குக் கட்டளையிட்டு முடிந்தபின்பு, அவன் தன் கால்களைக் கட்டிலின்மேல் மடக்கிக்கொண்டு
ஜீவித்துப்போய், தன் ஜனத்தாரோடே
சேர்க்கப்பட்டான்.
கடைசி நேரத்தில்
அவன் கட்டிலில் வைத்து அவன் ஆத்துமா ஜீவித்து போய் (உயிர்ப்பிக்கபடுதல்)
என்று நமக்கு தெரிகிறது.
எசேக்கியேல் 37:12-14
ஆகையால் நீ
தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர்
உரைக்கிறார், இதோ, என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள்
பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படவும், உங்களை இஸ்ரவேல் தேசத்துக்குவரவும்பண்ணுவேன்.
என் ஜனங்களே,
நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படப்பண்ணும்போது,
நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
என் ஆவியை உங்களுக்குள்
வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்; நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன்; அப்பொழுது
நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்; இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று கர்த்தர்
உரைக்கிறார் என்று சொல் என்றார்.
இந்த காரியத்தை
தேவன் யாக்கோபு (இஸ்ரவேல்) - க்கு செய்தார் என்பது தெரிய வருகிறது ஏனென்றால் தேவ ஆவியானவர்
அவர்களை உயிரடைய செய்கிறார்.
யாக்கோபு மரித்தான்
ஆனால் யோசேப்பு தன் தகப்பனுக்கு சுகந்தவர்க்கமிடும்படி ஊழியக்காரனாகிய வைத்தியருக்கு
கட்டளையிட்டான். அப்படியே வைத்தியர் இஸ்ரவேலருக்கு சுகந்தவர்க்கமிட்டார்கள்.
சுகந்தவர்க்கம்
பழைய ஏற்பாட்டின் பகுதி, நாம் வாசிக்கப்படும் போது, மரித்த பரிசுத்தவான்களுக்கு சுகந்தவர்க்கமிடுகிறதை
பார்க்க முடிகிறது. அதென்னவெனில் தேவனுடைய அபிஷேகத்திற்கு அது திருஷ்டாந்தபடுத்தப்படுகிறது.
அதுதான் மணவாட்டி சபையின் அனுபவம்.
இங்கு சுகந்தவர்க்கமிட
நாற்பது நாள் செல்லும், அந்த நாள் நிறைவேறி, எழுபது நாள் துக்க நாளும் முடிந்த பிறகு யாக்கோபின்
குடும்பத்தார் அனைவரும் யாக்கோபு கட்டளையிட்டபடியே
ஆதியாகமம் 50:13
அவனைக் கானான்
தேசத்துக்குக் கொண்டுபோய், ஆபிரகாம் மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்திலே தனக்குச்
சொந்தக் கல்லறை பூமியாக ஏத்தியனாகிய எப்பெரோனிடத்தில் வாங்கின நிலத்திலுள்ள குகையிலே
அவனை அடக்கம் பண்ணினார்கள்.
பிரியமானவர்களே
இதனை வாசிக்கிற தேவஜனமே இந்த அனுபவம் யாருக்கு என்றால் நம் முற்பிதாக்கள் அவர்களுக்கு
சுவிசேஷம் அறிவிக்கப்பட வில்லை மற்றும் இளங்காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தம் தான் தெளிக்கப்பட்டது. அவர்களுக்கு
இந்த இரத்தம் ஆத்துமாவை உயிர்ப்பிக்க மாட்டாது.
ஆனால் நமக்கோ
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக பலியாகி, அந்த இரத்தத்தால் நமக்கு பாவமன்னிப்பும்
ஆத்துமாவின் உயிர்ப்பும் இப்போதே காணப்படுகிறது. ஆனால் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்கு
நடந்தது போல் நமக்கு நடந்து வராது. அதனால் நம் மீட்பு இப்போதே சுதந்தரித்து இப்பூமியில்
நாம் ஒவ்வொரு நாளும் ஆவி, ஆத்துமா உயிர்ப்பித்து பரிசுத்த பட்டு வாழ்ந்து கொண்டிருந்தாலே
கானானுக்குள் பிரவேசிக்க முடியும். இந்த பரலோக வாழ்க்கை நமக்கு வேண்டுமென்றவர்கள் இப்போதே
இரட்சிப்பை சுதந்தரிக்க வேண்டும். மற்றபடி பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்கு கிடைத்தது
போல் நாமும் கிடைக்கும் என்றிருந்தால் நாம் ஏமாந்தவர்களாகி விடுவோம்.
ஆனால், யோசேப்பு
தன் தகப்பனை அடக்கம் பண்ணின பின்பு அவனும் அவன் சகோதரர்கள் யாவரும் எகிப்துக்கு திரும்பினார்கள்.
தங்கள் தகப்பன்
மரணமடைந்ததை யோசேப்பின் சகோதரர் கண்டு ஒருவேளை நாம் செய்த பொல்லாப்புக்குத்தக்க யோசேப்பு
நமக்கு சரிக்கு சரி கட்டுவான் என்று சொல்லி, யோசேப்பின் இடத்தில் ஆள் அனுப்பி,
ஆதியாகமம் 50:16
உம்முடைய சகோதரர்
உமக்குப் பொல்லாங்கு செய்திருந்தாலும், அவர்கள் செய்த துரோகத்தையும் பாதகத்தையும் நீர்
தயவுசெய்து மன்னிக்கவேண்டும் என்று
உம்முடைய தகப்பனார் மரணமடையுமுன்னே, உமக்குச் சொல்லும்படி கட்டளையிட்டார்.
ஆகையால் உம்முடைய
தகப்பனாருடைய தேவனுக்கு ஊழியக்காரராகிய நாங்கள் செய்த துரோகத்தை மன்னிக்க வேண்டும்
என்று அவனுடைய சகோதரர்கள் அவனுக்கு முன்பாக தாழ விழுந்து இதோ, நாங்கள் உமக்கு அடிமைகள்
என்றார்கள்.
ஆனால் யோசேப்பு
அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், நான் தேவனா;
நீங்கள் எனக்குத்
தீமை செய்ய நினைத்தீர்கள் ஆனால் வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு தேவன் அதை நன்மையாக
முடிவடைய பண்ணினார் என்று சொல்லி, நீங்கள் பயப்படாதிருங்கள் உங்கள் குழந்தைகளையும்
பராமரிப்பேன் என்று சொல்லி அவர்களோடே பட்சமாய் பேசினான்.
யோசேப்பு நூற்றுபத்து
வருஷம் உயிரோடிருந்தான்.
யோசேப்பு தன்
சகோதரரை நோக்கி: நான் மரணமடைய போகிறேன்; ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாய் சந்தித்து
நீங்கள் இந்த தேசத்தை விட்டு ஆபிரகாமுக்கும் , ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் ஆணையிட்டு
கொடுக்கிற தேசத்துக்குப் போக பண்ணுவார் என்று சொன்னதுமன்றி,
தேவன் உங்களை
சந்திக்கும் போது என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டு போவீர்களாக என்றும் சொல்லி
யோசேப்பு இஸ்ரவேல் புத்திரரிடத்தில் ஆணையிட்டு கொண்டான்.
இதனை நாம் பார்க்கும்போது
யோசேப்பும் தன் சகோதரரிடம் எலும்புகளை கானானுக்கு (இஸ்ரவேல் தேசத்துக்கு) கொண்டுசெல்ல
கூறுகிறதை பார்க்கிறோம்.
இதிலிருந்து
தெரிய வருவது என்ன என்றால் யோசேப்பு கானான் தேசத்தில் பிரவேசிக்கிறான். என்பதை தேவன்
திருஷ்டாந்தபடுத்துகிறார்.
அதை தான் இந்த
எலும்புகள் உயிரடையுமா என்று எசேக்கியேல் தீர்க்கதரிசியை பள்ளத்தாக்கில் கொண்டு தரிசனத்தில்
நிறுத்திவிட்டு கேட்கிறதை பார்க்கிறோம். எலும்பு என்றால் இஸ்ரவேல் வம்சத்தார் தேவன்
அவருக்கு சித்தமானவர்கள் மேல் அவர் ஆவியை பிரவேசிக்க செய்கிறார். அப்பொழுது அவர்கள்
உயிரடைவார்கள்.
இதிலிருந்து
நமக்கு தெரியவருகிறது என்னவென்றால் யாக்கோபின் புத்திரராகிய இஸ்ரவேல் கோத்திரத்தார்
கடைசி நேரத்தில் தங்கள் பாவத்தை அறிக்கையிடுகிறதை பார்க்கிறோம். அதனால் அவர்களுடைய
நாமம் எழுதப்பட்டிருக்கிறது அவர்களோடு தேவன் உண்டு.
ஆனால் இயேசு
கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு இவர்கள் கல்லறைகளை விட்டு புறப்பட்டு பரிசுத்த நகரத்தில்
பிரவேசித்து அநேகருக்கு காணப்பட்டார்கள்.
அன்பானவர்களே
நாமும் கிறிஸ்துவோடு கூட பரிசுத்த நகரத்தில் பிரவேசிக்கும் படியாக நம்மை சகலமும் ஒப்புக்கொடுத்தவர்களாக
பரிசுத்தமாக நடப்போமானால் நாம் பரிசுத்த நகரத்தில் பிரவேசிக்க முடியும். ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி
நாளை.