தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 119:19
பூமியிலே நான் பரதேசி; உமது கற்பனைகளை எனக்கு மறையாதேயும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் ஆலயமாக விளங்கினால் கர்த்தரின் நாமம் என்றென்றைக்கும் நம்மில் தங்கியிருக்கும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய வாழ்வு எப்போதும் சந்தோஷமும், மனமகிழ்ச்சியுமாயிருக்க வேண்டும் என்று தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 11நாளாகமம் 7:12-13
கர்த்தர் இரவிலே சாலொமோனுக்குத் தரிசனமாகி: நான் உன் விண்ணப்பத்தைக் கேட்டு, இந்த ஸ்தலத்தை எனக்குப் பலியிடும் ஆலயமாகத் தெரிந்துகொண்டேன்.
நான் மழையில்லாதபடிக்கு வானத்தை அடைத்து, அல்லது தேசத்தை அழிக்க வெட்டுக்கிளிகளுக்குக் கட்டளையிட்டு, அல்லது என் ஜனத்திற்குள் கொள்ளைநோயை அனுப்பும்போது,
மேற்கூறிய வசனங்களில் கர்த்தருடைய ஆலயம் பிரதீஷ்டை பண்ணப்பட்டு தேவனுடைய மகிமையால் நிறையப்பட்ட பின்பு, கர்த்தர் இரவிலே சாலொமோனுக்கு தரிசனமாகி சொன்னது; உன் விண்ணப்பத்தை கேட்டு, இந்த ஸ்தலத்தை எனக்கு பலியிடும் ஆலயமாக தெரிந்து கொண்டேன். நான் மழையில்லாதபடிக்கு வானத்தை அடைத்து, அல்லது தேசத்தை அழிக்க வெட்டுகிளிகளுக்கு கட்டளையிட்டு அல்லது என் ஜனத்திற்குள் கொள்ளைநோயை அனுப்பும்போது
11நாளாகமம் 7:14-15
என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.
இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு, என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் கர்த்தர் அவருடைய நாமம் தரிக்கப்பட்ட தம்முடையவர்கள் தங்களை தாழ்த்தி ஜெபம் பண்ணி, அவர் முகத்தை தேடி, தங்கள் பொல்லாத வழிகளை விட்டு திரும்பினால் பரலோகத்திலிருக்கிற கர்த்தர் கேட்டு நம்முடைய பாவத்தை மன்னித்து தேசத்திற்கு க்ஷேமத்தை தருவார். ஆதலால் நம் உள்ளம் பரிசுத்தமாக்கப்பட்டு, நாம் செய்கிற ஜெபத்திற்கு அவர் கண்கள் திறந்தவைகளும், அவர் செவிகள் கவனித்தும் இருக்கிறது என்கிறார். மேலும் அவர் சொல்வது
11நாளாகமம் 7:16-18
என் நாமம் இந்த ஆலயத்தில் என்றென்றைக்கும் இருக்கும்படி, நான் அதைத் தெரிந்துகொண்டு பரிசுத்தப்படுத்தினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் இங்கே இருக்கும்.
உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல, நீ எனக்கு முன்பாக நடந்து, நான் உனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்து, என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்வாயானால்,
அப்பொழுது இஸ்ரவேலை அரசாளும் புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று நான் உன் தகப்பனாகிய தாவீதோடே உடன்படிக்கைபண்ணினபடியே, உன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை நிலைக்கப்பண்ணுவேன்.
மேற்கூறப்பட்ட வசனங்களை தியானிக்கும் போது அவர் நாமம் என்றென்றைக்கும் இருக்கும்படி நம்மை பரிசுத்தப்படுத்தி,கர்த்தரின் கண்களும் அவர் இருதயமும் எந்நாளும் நம்மில் இருக்கும்படி செய்கிறார். மேலும் கர்த்தர் சொல்வது என்னவென்றால் தாவீது நடந்தது போல் எனக்கு முன்பாக நடந்து கர்த்தர் கற்பித்தபடியெல்லாம் செய்து என் கட்டளைகளையும், என் நியாயங்களையும் கைக்கொள்வாயானால் இஸ்ரவேலை ஆளப்போகிற புருஷன் உனக்கு இல்லாமற் போவதில்லை என்று நான் உன் தகப்பனாகிய தாவீதோடே உடன்படிக்கைபண்ணினபடியே, உன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை நிலைக்கப்பண்ணுவேன் என்கிறார். இவை என்னவென்றால் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய கட்டளை, கற்பனைகளையெல்லாம் உண்மையாக பின்பற்றி நடப்போமானால், கிறிஸ்து ராஜாவாக நம்மில் என்றென்றைக்கும் ராஜ்யபாரம் பண்ணுவார். ஆனால்
11நாளாகமம் 7:19-22
நீங்கள் வழிவிலகி, நான் உங்களுக்கு முன்வைத்த என் கட்டளைகளையும் என் கற்பனைகளையும் விட்டுப்போய், வேறே தேவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொள்வீர்களேயாகில்,
நான் அவர்களுக்குக் கொடுத்த என் தேசத்தில் இருந்து அவர்களைப் பிடுங்கி, என் நாமத்திற்கென்று நான் பரிசுத்தப்படுத்தின இந்த ஆலயத்தை என் சமுகத்தினின்று தள்ளி, அதை எல்லா ஜனசதளங்களுக்குள்ளும் பழமொழியாகவும் வசைச்சொல்லாகவும் வைப்பேன்.
அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து: கர்த்தர் இந்த தேசத்திற்கும் இந்த ஆலயத்திற்கும் இப்படிச் செய்தது என்ன என்று கேட்பான்.
அதற்கு அவர்கள்: தங்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின தங்கள் தேவனாகிய கர்த்தரைவிட்டு, வேறே தேவர்களைப் பற்றிக்கொண்டு, அவைகளை நமஸ்கரித்து, சேவித்தபடியினால், கர்த்தர் இந்தத் தீங்கையெல்லாம் அவர்கள்மேல் வரப்பண்ணினார் என்று சொல்லுவார்கள் என்றார்.
மேற்கூறப்பட்ட பிரகாரம் கர்த்தரை விட்டு விலகி அந்நிய தேவர்களை சேவித்து பணிந்துக்கொண்டால், பரிசுத்தப்படுத்தின ஆலயமாகியஅவர்களை கர்த்தரின் சமூகத்தினின்று தள்ளி ஜனங்களுக்குள்ளும், பழமொழியாகவும், வசை சொல்லாகவும் வைப்பேன் என்கிறார். அப்போது உன்னதமாயிருக்கிற ஆலயத்தை கடந்து போகிறவன் எல்லாரும் கர்த்தர் இவர்களுக்கு செய்தது என்ன என்பார்கள். அப்போது அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரை விட்டு வேறே தேவர்களைப்பற்றிக் கொண்டு, அவைகளை நமஸ்கரித்து சேவித்தபடியினால் , கர்த்தர் இந்த தீங்கையெல்லாம் அவர்கள்மேல் வரபண்ணுகிறார் என்பது புரிகிறது. ஆதலால் பிரியமானவர்களே, கர்த்தருடைய ஆலயமாக நாம் விளங்கின பின்பு, ஒரு போதும் கர்த்தரின் கற்பனை, கட்டளை விட்டு விலகாமல் நாம் நம்மை ஜாக்கிரதையாக காத்துக்கொள்ள வேண்டும். நாம் நம்மை காத்துக்கொள்ளாவிட்டால், அந்நிய தேவர்களை சேவிக்கிறவர்களாகி விடுவோம். அப்படி செய்கிறவர்கள் மேல் கர்த்தர் தீங்கை வரபண்ணுகிறார். ஆதலால் நாம் எப்போதும் கர்த்தருக்குள் ஆலயமாக அவருடைய கற்பனைகளில் ஜாக்கிரதையோடு காணப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.