தேவனுக்கே மகிமையுண்டாவதாக
1கொரிந்தியர் 7:23
நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா முழுமையான இரட்சிப்பை சுதந்தரிக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருடைய ஆலயமானால், அவர் நாமம் என்றன்றைக்கும் நம்மில் தங்கியிருக்கும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
11நாளாகமம் 8:1-3
சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் தன் அரமனையையும் கட்ட இருபது வருஷகாலம் சென்றபின்பு,
ஈராம் தனக்குக் கொடுத்திருந்த பட்டணங்களைச் சாலொமோன் கட்டி, அவைகளில் இஸ்ரவேல் புத்திரரைக் குடியேற்றினான்.
பின்பு சாலொமோன் ஆமாத்சோபாவுக்குப் போய், அதை ஜெயித்தான்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் ராஜாவாகிய சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும், அரமனையையும் கட்ட இருபது வருஷகாலம் சென்ற பின்பு,ஈராம் தனக்கு கொடுத்திருந்த பட்டணங்களைச் சலொமோன் கட்டி, இஸ்ரவேல் புத்திரரை அவைகளில் குடியேற்றினான். பின்பு சாலொமோன் ஆமாத்சோபாவுக்கு போய் அதை ஜெயித்தான். பின்பு அவன்
11நாளாகமம் 8:4-6
அவன் வனாந்தரத்திலுள்ள தத்மோரையும், ஆமாத்தேசத்திலே இரஸ்துக்களின் பட்டணங்கள் அனைத்தையும் கட்டினான்.
சாலொமோன் மேல்பெத்தொரோனையும், கீழ்ப்பெத்தொரோனையும், அலங்கங்களும் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள அரணான பட்டணங்களாகக் கட்டி,
பாலாத்தையும், தனக்கு இருக்கிற இரஸ்துக்களை வைக்கும் சகல பட்டணங்களையும், இரதங்கள் இருக்கும் சகல பட்டணங்களையும், குதிரைவீரர் இருக்கும் பட்டணங்களையும், எருசலேமிலும் லீபனோனிலும் தான் ஆளும் தேசமெங்கும் தனக்கு இஷ்டமானதையெல்லாம் கட்டினான்.
மேற்கூப்பட்ட பட்டணங்களையெல்லாம் சாலொமோன் கட்டி; இஸ்ரவேல் புத்திரர் சங்காரம்பண்ணாதிருந்த இஸ்ரவேல் ஜாதியல்லாத ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியரில் மீதியான சகல ஜனத்திலும் அவர்களுக்கு பிறகு தேசத்திலிருந்த அவர்கள் பிள்ளைகளை சாலொமோன் இந்நாள்வரை இருக்கிறபடி பகுதி கட்ட செய்தான். இஸ்ரவேல் புத்திரரில் ஒருவரையும் சாலொமோன் தன் வேலையை செய்ய அடிமைபடுத்தவில்லை; அவர்கள் யுத்த மனுஷரும், அவனுடைய சேர்வைக்காரரின் தலைவரும், அவனுடைய இரதங்களுக்கும் குதிரை வீரருக்கும் தலைவருமாயிருந்தார்கள். ராஜாவாகிய சாலொமோனுடைய ஊழியக்காரரின் தலைவராகிய இவர்களில் இருநூற்று ஐம்பது பேர் ஜனத்தை ஆண்டார்கள்.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்டிருக்கிற வசனங்களை நாம் தியானிக்கும் போது, நம்முடைய ஆத்தும இரட்சிப்பைப் கர்த்தரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளுகிற விதத்தை கர்த்தர் சாலொமோனை வைத்து திருஷ்டாந்தப்படுத்திக் காட்டுகிறார். மேலும் இஸ்ரவேல் ஜாதியல்லாத புறஜாதிகளில் மீதியான ஜனத்தில், அவர்களுக்கு பிறகு அவர்கள் தேசத்திலிருந்த அவர்கள் பிள்ளைகளை ஒரளவுக்கு இரட்சிப்புக்குள்ளாக்கிக் கொண்டு வருகிறதை திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது. அல்லாமலும் கிறிஸ்துவினால் மீண்டெடுக்கப்பட்டு இரட்சிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகளை ஒரு போதும் நாம் நம்முடைய வேலையில் அடிமையாக வைத்துக்கொள்ளக்கூடாது. அவர்கள் கர்த்தருக்காய் சத்துருவோடு போராடுகிறவர்களாயிருப்பார்கள். இப்படியாக ஒவ்வொரு காரியத்திலும் நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.