தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 25:5 

உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் அந்நிய உபதேசங்களில் பங்குபெறக்கூடாது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா முழுமையான இரட்சிப்பை சுதந்தரிக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்

 11 நாளாகமம் 8:11-13 

சாலொமோன்: கர்த்தருடைய பெட்டி வந்த ஸ்தலங்கள் பரிசுத்தமாயிருக்கிறது; ஆதலால், இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீதின் அரமனையிலே என் மனைவி வாசம்பண்ணலாகாது என்று சொல்லி, பார்வோனின் குமாரத்தியைத் தாவீதின் நகரத்திலிருந்து தான் அவளுக்குக் கட்டின மாளிகைக்குக் குடிவரப்பண்ணினான்.

அதுமுதற்கொண்டு சாலொமோன் தான் மண்டபத்திற்கு முன்பாகக் கட்டியிருந்த கர்த்தருடைய பலிபீடத்தின்மேல்,

ஒவ்வொரு நாளின் கட்டளைக்குந்தக்கதாய் மோசேயுடைய கற்பனையின்படியே ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும், வருஷத்தில் மூன்றுதரம் ஆசரிக்கிற பண்டிகைகளாகிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான்.

மேற்கூறிய வசனங்களில் ராஜாவாகிய சலொமோன்:கர்த்தருடைய பெட்டி வந்த ஸ்தலங்கள் பரிசுத்தமாயிருக்கிறது: ஆதலால் இஸ்ரவேலின் மனைவியாகிய தாவீதின் அரண்மனையிலே என் மனைவி வாசம் பண்ணலாகாது என்று சொல்லி, பார்வோனின் குமாரத்தியை தாவீதின் நகரத்திலிருந்து தான் அவனுக்கு கட்டின மாளிகையிலே குடிவர பண்ணினான்.  அந்தநாள் முதற்க்கொண்டு சாலொமோன் தான் மண்டபத்திற்கு முன்பாக கட்டியிருந்த கர்த்தருடைய பலிபீடத்தின் மேல் ஒவ்வொரு நாளின் கட்டளைக்குதக்கதாய் , கர்த்தர் மோசேயின் மூலமாய் தந்த கற்பனையின்படியே, ஓய்வு நாட்களிலும்,  மாதப்பிறப்புகளிலும், வருஷத்தில் மூன்று தரம் ஆசரிக்கிறப் பண்டிகைகளிலும், கூடார பண்டிகையிலும், கர்த்தருக்கு சர்வாங்க தகன பலிகளைச் செலுத்தினான்.  பின்னும் சாலொமோன் 

11நாளாகமம் 8:14-18 

 அவன் தன் தகப்பனாகிய தாவீதுடைய பிரமாணத்தின்படியே, ஆசாரியர்கள் தங்கள் தங்கள் ஊழியத்தைச் செய்யும் வகுப்புகளையும், லேவியர் ஒவ்வொரு நாளின் கட்டளைப்படியே துதித்து சேவித்து ஆசாரியருக்கு முன்பாகத் தங்கள் ஊழியத்தைச் செய்யும் முறைகளையும், வாசல் காப்பவர்கள் ஒவ்வொரு வாசலில் காவல்காக்கும் வகுப்புகளையும் நிற்கப்பண்ணினான்; தேவனுடைய மனுஷனாகிய தாவீது இப்படிக் கட்டளையிட்டிருந்தான்.

சகல காரியத்தையும் பொக்கிஷங்களின் காரியத்தையும் குறித்து, ராஜா ஆசாரியருக்கும் லேவியருக்கும் கொடுத்த கட்டளையை விட்டு அவர்கள் விலகாதிருந்தார்கள்.

இப்படியே கர்த்தருடைய ஆலயத்துக்கு அஸ்திபாரம் போடப்பட்ட நாள்முதல் அதை முடிக்குமட்டும் சாலொமோனின் வேலையெல்லாம் நடந்தேறிக் கர்த்தருடைய ஆலயம் கட்டித்தீர்ந்தது.

பின்பு சாலொமோன் ஏதோம்தேசத்துக் கடல் ஓரத்திலிருக்கும் எசியோன்கேபேருக்கும் ஏலோத்துக்கும் போனான்.

அவனுக்கு ஈராம் தன் ஊழியக்காரர் முகாந்தரமாய்க் கப்பல்களையும், சமுத்திர யாத்திரையில் பழகின வேலையாட்களையும் அனுப்பினான்; அவர்கள் சாலொமோனின் வேலைக்காரரோடேகூட ஓப்பீருக்குப்போய், அங்கேயிருந்து நானூற்று ஐம்பது தாலந்து பொன்னை ஏற்றி ராஜாவாகிய சாலொமோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் தாவீது கற்பித்தபிரகாரம் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் ஊழியத்தை செய்யும் படி நிர்ணயம் பண்ணினான்.  சகல காரியத்தையும், பொக்கிஷங்களின் காரியத்தையும் குறித்து ஆசாரியரும், லேவியரும் கட்டளைகளை விட்டு விலகாதிருந்தார்கள்.  இப்படியாக ஆலயத்திற்கு அஸ்திபாரம் போட்ட நாள் முதற்கொண்டு அது முடியுமட்டும் சாலொமோனுடைய வேலையெல்லாம் நடந்தேறிக் கர்த்தருடைய ஆலயம் கட்டி தீர்ந்தது.  பின்பு சாலொமோன் அங்கிருந்து ஏதோம் தேசத்து கடல் ஓரத்திற்கு  போனான்.  ஈராமின் வேலைக்காரர்கள் சாலொமோனுடைய  வேலைக்காரர்களோடே கூட ஒப்பீருக்கு போய் நானூற்றி ஐம்பது தாலந்து பொன்னை ஏற்றி ராஜாவாகிய சாலமோனிடத்தில் கொண்டு வந்தார்கள்.  பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது நம்மில் கர்த்தரின் வசனம் செயல்பட்டால் நாம் பரிசுத்தமாகுவோம்.அவ்விதம் பரிசுத்தமாக்கப்பட்ட  நம்முடைய உள்ளமானது அந்நிய ஆராதனையோடு இணையக்கூடாது என்பதும், கர்த்தரால் வேறுபடுத்தப்பட்டவர்கள் அவரவர் தங்களுக்குரிய வேலையில் உண்மையாக இருக்க வேண்டும் என்பதனையும் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.இப்படியாக நம்முடைய வாழ்வானது அனுதினம் சத்திய வசனத்தால் பாதுகாக்கப்பட வேண்டும்.  ஆனால் சத்தியத்தை முழுமையாக விசுவாசியாதவர்களோடு  நாம்  ஐக்கியப்பட்டால் நாம் ஆவிக்குரிய பாதையில் விழுவோம். ஆதலால் நாம் நல்லவர்களின் பாதையில் நடக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.  ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.