தேவனுக்கே மகிமையுண்டாவதாக

11கொரிந்தியர்3:18

நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் மகிமையில் மகிமைபட வேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தர் நமக்கு தந்தருளிய கிருபையாகிய நித்தியஜீவனை ஒருபோதும் இழந்துபோகக்கூடாது என்பதனை குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்

 11நாளாகமம் 9:14-20 

அரபிதேசத்துச் சகல ராஜாக்களும் மாகாணங்களின் அதிபதிகளும் சாலொமோனுக்குப் பொன்னையும் வெள்ளியையும் கொண்டுவருவார்கள்.

ராஜாவாகிய சாலொமோன் இருநூறு பரிசைகளை அடித்த பொன்தகட்டால் செய்வித்தான்; ஒவ்வொரு பரிசைக்கு அறுநூறு சேக்கல் நிறை பொன்தகட்டைச் செலவழித்தான்.

அடித்த பொன்தகட்டால் முந்நூறு கேடகங்களையும் உண்டாக்கினான்; ஒவ்வொரு கேடகத்திற்கு முந்நூறு சேக்கல்நிறை பொன்னைச் செலவழித்தான்; அவைகளை ராஜா லீபனோன் வனம் என்னும் மாளிகையிலே வைத்தான்.

ராஜா தந்தத்தினால் ஒரு பெரிய சிங்காசனத்தையும் செய்வித்து, அதைப் பசும்பொன்தகட்டால் மூடினான்.

அந்தச் சிங்காசனத்துக்குப் பொன்னினால் செய்யப்பட்ட ஆறு படிகளும், ஒரு பாதபடியும், உட்காரும் இடத்திற்கு இருபுறத்திலும் கைச்சாய்மானங்களும் இருந்தது; இரண்டு சிங்கங்கள் கைச்சாய்மானங்கள் அருகே நின்றது.

அந்த ஆறு படிகளின்மேலும், இரண்டு பக்கத்திலும் பன்னிரண்டு சிங்கங்கள் நின்றது; எந்த ராஜ்யத்திலும் இப்படிப் பண்ணப்படவில்லை.

ராஜாவாகிய சாலொமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்னும் மாளிகையின் பணிமுட்டுகளெல்லாம் பசும்பொன்னுமாயிருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருளாய் எண்ணப்படவில்லை.

மேற்கூறப்பட்ட வசனங்களில் ராஜாவாகிய சாலொமோனுக்கு அரபு தேசத்துச் சகல ராஜாக்களும் மாகாணங்களின் அதிபதிகளும் வெள்ளியையும், பொன்னையும் கொண்டு வருவார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது.  அவர்கள் கொண்டு வந்தவைகளில் இருநூறு பரிசைகளை அடித்த பொன் தகட்டால் செய்வித்தான்.  ஒவ்வொரு பரிசைக்கு அறுநூறு சேக்கல் நிறை பொன் தகட்டை செலவழித்தான்.  அடித்த பொன் தகட்டால் முந்நூறு கேடகங்களையும் உண்டாக்கினான்; ஒவ்வொரு கேடகத்திற்கு முந்நூறு சேக்கல் நிறை பொன்னை செலவழித்தான்; அவைகள் லீபனோன் வனம் என்னும் மாளிகையிலே வைத்தான்.  ராஜா தந்தத்தினால் ஒரு சிங்காசனத்தையும் செய்வித்து, அதை பசும் பொன் தகட்டால் மூடினான்.  அந்த சிங்காசனத்திற்கு பொன்னால் செய்த ஆறு படிகளும், ஒரு பாதபடியும், உட்காரும் இடத்திற்கு இரு கைசாய்மானங்கள் அருகே நின்றன.  அந்த ஆறு படிகளின் மேலும் இரண்டு பக்கத்திலும் பன்னிரண்டு சிங்காசனங்கள் நின்றன.  எந்த ராஜ்யத்திலும் இல்லாதபடி பண்ணப்பட்டது.  ராஜாவாகிய சாலொமோனுக்கு இருந்த பானபாத்திரங்கள் எல்லாம் பொன்னும், லீபனோன் வனம் மாளிகையின் பணிமுட்டுகளெல்லாம் பசும் பொன்னுமாயிருந்தது. வெள்ளியினால் ஒன்றும் செய்யப்படவில்லை.  சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருளாக எண்ணப்படவில்லை.

 பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களை தியானிக்கும் போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மகிமையான கேடகமாக நமக்குள் விளங்குகிறார் என்றும், அவர் நம்மில் சிங்காசனம் அமைத்து, யூத ராஜ சிங்கமாக  விளங்குகிறார் என்பதும்,மேலும் பன்னிரண்டு வாசல்களாக அவர் நம்மில் தேவாலயமாக விளங்குகிறார் என்பதும், அங்கு சிங்காசனத்திற்கு ஆறு படிகள் வைக்கப்பட்டிருக்கிறது என்பது, அவரோடு நாம் ஐக்கியபடவேண்டுமானால் ஆறு கற்சாடிகளின் அனுபவத்தோடு இஸ்ரவேலராக விளங்க வேண்டும் என்பதும் இஸ்ரவேலர்கள் 

ரோமர் 9:4

அவர்கள் இஸ்ரவேலரே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே;

ரோமர் 9:4-ன்படி நடக்கிறவர்கள் மட்டும் இஸ்ரவேலர்களும், 

ரோமர் 9:5

பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென்.

ரோமர் 9:5-ன்படி பிதாக்கள் அவர்களுடையவர்களும், மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே என்றும் இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட சர்வத்துக்கும் மேலான தேவன். 

 ரோமர் 9:6-8 

தேவவசனம் அவமாய்ப் போயிற்றென்று சொல்லக்கூடாது; ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் இஸ்ரவேலரல்லவே.

அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று சொல்லியிருக்கிறதே.

அதெப்படியென்றால், மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள்.

மேற்கூறப்பட்ட வசனங்களின் படி எல்லாரும் இஸ்ரவேலரல்லவே என்றும், அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று சொல்லியிருக்கிறதே.  அதெப்படியென்றால் மாம்சத்தின்டி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குதத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்த சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள். இவ்விதமாக கிறிஸ்துவின் சந்ததியாக,  நாம் வாக்குதத்தத்தின் சந்ததியாக யாவரும் மாறும்படியாக கர்த்தர் முன் குறித்த காரியங்களை திருஷ்டாந்தப்படுத்துகிறார். அல்லாமலும் ஒரு பாதபடி  தேவனின் பாதமும், இரண்டு கைசாய்மான்கள் என்னவென்றால் கிறிஸ்துவும், பரிசுத்த ஆவியானவரும்,அவர்பக்கத்தில் ஆறு படிகள் இஸ்ரவேலாகிய மணவாட்டி சபையும், அதில் பன்னிரண்டு சிங்காசனங்கள் என்பது நாம் மகிமையின் ஆலயமாக விளங்கனால் பன்னிரண்டு மகிமையான கற்கள் பதித்திருந்த பன்னிரண்டு வாசல்கள் கிறிஸ்துவின் மகிமைக்கு திருஷ்டாந்தப்படுத்தபட்டிருக்கிறது.  இவ்விதமாக கிறிஸ்துவின் மகிமையில்  மகிமைபடும்படியாக  ஒவ்வொருவரும்  ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.