தேவனுக்கே மகிமையுண்டாவதாக

1யோவான் 4:6

நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும், வஞ்சகஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் மற்றவர்களால் வஞ்சிக்கப்படகூடாது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் மகிமையில் மகிமைபட வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

11நாளாகமம் 9:21-26 

ராஜாவின் கப்பல்கள் ஈராமின் வேலைக்காரருடன் தர்ஷீசுக்குப் போய்வரும்; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.

பூமியின் சகல ராஜாக்களைப்பார்க்கிலும் ராஜாவாகிய சாலொமோன் ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாயிருந்தான்.

சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்பதற்கு பூமியின் ராஜாக்கள் எல்லாரும் அவன் முகதரிசனத்தைத் தேடினார்கள்.

வருஷாவருஷம் அவரவர் தங்கள் காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், வஸ்திரங்களையும், ஆயுதங்களையும், கந்தவர்க்கங்களையும், குதிரைகளையும், கோவேறுகழுதைகளையும் கொண்டுவருவார்கள்.

சாலொமோனுக்கு நாலாயிரம் குதிரை லாயங்களும் இரதங்களும் இருந்தது, பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்; அவைகளை இரதங்கள் வைக்கும் பட்டணங்களிலும், அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் ராஜா வைத்திருந்தான்.

நதிதுவக்கிப் பெலிஸ்தரின் தேசமட்டுக்கும் எகிப்தின் எல்லைவரைக்கும் இருக்கிற சகல ராஜாக்களையும் அவன் ஆண்டான்.

மேற்கூறிய வசனங்களில் ராஜாவாகிய சாலொமோனின் கப்பல்கள் ஈராமின் வேலைக்காரருடன் தர்ஷீசுக்கு போய் வரும்.  அந்த கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒரு முறை பொன்னையும் வெள்ளியையும் யானை தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டு வரும். பூமியிலுள்ள எல்லா ராஜாக்களை  காட்டிலும் சாலொமோன் ஐசுவரியத்திலும்,  ஞானத்திலும் சிறந்தவனாயிருந்தான்.  இந்த ஞானத்தினால் பூமியிலுள்ள ராஜாக்கள் எல்லாரும் அவன் முக தரிசனத்தை தேடினார்கள்.  வருஷா வருஷம் தங்கள் காணிக்கையாகிய வெள்ளிப் பாத்திரங்களையும், பொற் பாத்திரங்களையும், வஸ்திரங்களையும், ஆயுதங்களையும், கந்தவர்க்கங்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் கொண்டு வந்ததினால், சாலோமோனுக்கு நாலாயிரம் குதிரை லாயங்களும், இரதங்களும் இருந்தன, பன்னீராயிரம் குதிரை வீரரும் இருந்தார்கள்.  அவைகளை இரதங்கள் வைக்கும் பட்டணங்களிலும், அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் வைத்தான்.  ஆனால் நதி துவக்கிப் பெலிஸ்தரின் தேசமட்டுக்கும் எகிப்தின் எல்லைவரைக்கும் இருக்கிற ராஜாக்களை ஆண்டான்.  மேலும் 

11நாளாகமம் 9:27-31 

 எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கினான்.

எகிப்திலும் மற்ற தேசங்களிலுமிருந்து சாலொமோனுக்குக் குதிரைகள் கொண்டுவரப்பட்டது.

சாலொமோனுடைய ஆதியந்தமான மற்ற நடபடிகள் தீர்க்கதரிசியாகிய நாத்தானின் புஸ்தகத்திலும், சீலோனியனாகிய அகியா எழுதின தீர்க்கதரிசனத்திலும், நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமைக்குறித்து ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோ எழுதின தரிசனங்களிலும் அல்லவோ எழுதியிருக்கிறது.

சாலொமோன் எருசலேமிலே இஸ்ரவேலையெல்லாம் நாற்பது வருஷம் அரசாண்டான்.

பின்பு சாலொமோன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தான்; அவனை அவன் தகப்பனாகிய தாவீதின் நகரத்திலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய ரெகொபெயாம் ராஜாவானான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் சாலொமோன் ராஜா வெள்ளியை க் கற்கள் போலவும், கேதுரு மரங்களை பள்ளதாக்குகளில் இருக்கும் காட்டத்தி  மரங்களை போலவும் அதிகமாக்கினான்.  எகிப்திலும் மற்ற தேசங்களிலுமிருந்து சாலொமோனுக்கு குதிரைகள் கொண்டுவரப் பட்டது.  சாலொமோன் இஸ்ரவேலை எருசலேமிலே நாற்பது வருஷம் அரசாண்டான்.  பின் சாலொமோன் நித்திரையடைந்த பின் அவன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான் ; அவன் ஸ்தானத்திலே குமாரனாகிய ரெகொபெயாம் ராஜாவானான். 

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்டவைகளை  நாம் தியானிக்கும் போது சாலொமோனுக்கு பிற தேசத்து ராஜாக்களிடத்திலிருந்துக் கொண்டு வந்த பொருட்கள் எல்லாம் அந்நிய உபதேசத்திற்கும், அந்நிய உலகத்தின் ஆவி தன்னோடு கூட நிற்கிற மக்களை வஞ்சிக்கிறது என்பதனையும் கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  ஆதலால்  அவனும் அவன் ஜனங்களும் வஞ்சனைக்குள்ளானார்கள். ஆதலால் நாமும் அந்நியரோடு ஆத்துமாவில் ஐக்கியப்படுவோமானால் நாமும் சபையின் ஜனங்களும் வஞ்சிக்கப்படுவோம்.  ஆதலால் எந்த சூழ்நிலையிலும் கர்த்தரின் சத்தியத்தின்படி நடக்கிறவர்களோடுகூட நாம் ஐக்கியப்படவேண்டும். ஆதலால் நாம் ஒவ்வொருவரும் பரிசுத்தவான்களோடு ஐக்கியப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.