தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 3:26 

கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்மீகத்தை பரிசுத்தமாக காத்துக்கொள்ளவேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் மற்றவர்களால் வஞ்சிக்கப்படக்கூடாது என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

11நாளாகமம் 10:1-3 

ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி இஸ்ரவேலர் எல்லாரும் சீகேமுக்கு வந்திருந்தபடியால், அவனும் சீகேமுக்குப் போனான்.

ராஜாவாகிய சாலொமோனை விட்டு ஓடிப்போய், எகிப்திலிருந்த நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் அதைக் கேட்டபோது, அவன் எகிப்திலிருந்து திரும்பிவந்தான்.

ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தார்கள்; பின்பு யெரொபெயாமும் இஸ்ரவேலனைத்துமாய் வந்து, ரெகொபெயாமை நோக்கி:

மேற்கூறிய வசனங்களின்படி சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி இஸ்ரவேலர் எல்லாரும் சீகேமுக்கு போனபடியால் அவனும் சீகேமுக்கு போனான். ராஜாவாகிய சாலொமோனை விட்டு ஓடிப் போய் எகிப்திலிருந்த நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் அதை கேட்ட போது, அவன் எகிப்திலிருந்து திரும்பி வந்தான்.   ஆள் அனுப்பி அவனை இஸ்ரவேலர் அழைப்பித்தார்கள்.  பின்பு யெரொபெயாமும், இஸ்ரவேலனைத்துமாய் வந்து, ரெகொபெயாமை நோக்கிசொன்னது: 

11நாளாகமம் 10:4 

உம்முடைய தகப்பன் பாரமான நுகத்தை எங்கள்மேல் வைத்தார்; இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்தின கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான நுகத்தையும் இலகுவாக்கும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம் என்றார்கள்.

மேற்கூறிய வார்த்தைகளை கேட்ட ரெகொபெயாம் சொன்னது ,

11நாளாகமம் 10:5  

அதற்கு அவன்: நீங்கள் மூன்றுநாளைக்குப் பிற்பாடு, திரும்ப என்னிடத்தில் வாருங்கள் என்றான்; அப்படியே ஜனங்கள் போயிருந்தார்கள்.

மூன்று நாளைக்கு பின்பு திரும்பி வாருங்கள் என்று ரெகொபெயாம் சொன்னது போல் அவர்கள் திரும்பி வந்தார்கள். 

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட பகுதிகளின் திருஷ்டாந்தம் என்னவென்றால், கர்த்தரால் நாம் அழைக்கப்பட்டு, தெரிந்தெடுத்து நம்மை அபிஷேகம் பண்ணும்போது, நம்மை விட்டு போன சில தீய செயல்பாடுகள்;  நம் உள்ளத்தில் தீமைக்காக தூண்டிவிடுகிற சில கிரியைகளோடு நம்மில் வந்து ஏறும் படி முயற்சி செய்யும்.  அவ்விதம் முயற்சி செய்கிறைவைகளுக்கு நாம் நம்முடைய உள்ளத்தில் ஒரு போதும் இடம் கொடுக்கக் கூடாது.  அப்படிக்கொடுத்தால் நாம் ஆத்மீக வாழ்வில் விழுந்து விடுவோம்.  ஆதலால் நாம் விழுந்து விடாமல் கர்த்தரிடத்திலிருந்துப் பெற்றுக் கொண்ட அபிஷேகத்தை அனுதினம் புதுப்பித்து கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.