தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 118:8,9
மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.
பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் எப்போதும் கர்த்தரிடத்திலிருந்து நல்ல ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்மீகத்தை பரிசுத்தமாக காத்துக்கொள்ளவேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
11நாளாகமம் 10:6
அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தன் தகப்பனாகிய சாலொமோன் உயிரோடிருக்கையில் அவன் சமுகத்தில் நின்ற முதியோரோடே ஆலோசனைபண்ணி, இந்த ஜனங்களுக்கு மறுஉத்தரவு கொடுக்க நீங்கள் என்ன ஆலோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.
மேற்கூறப்பட்ட வசனங்களின்படி ராஜாவாகிய ரெகொபெயாம் ஜனங்களை வரவழைத்த பின்பு, தன் தகப்பனாகிய சாலொமோன் உயிரோடிருக்கும் போது அவன் சமூகத்தில் நின்ற முதியோரோடே ஆலோசனைப் பண்ணி, ஜனங்களுக்கு கொடுக்கதக்க ஆலோசனை என்ன என்று கேட்டான். அதற்கு அவர்கள் சொன்னது
11நாளாகமம் 10:7
அதற்கு அவர்கள்: நீர் இந்த ஜனங்களுக்குத் தயவையும் பட்சத்தையும் காண்பித்து, அவர்களுக்கு நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், என்றைக்கும் அவர்கள் உமக்கு ஊழியக்காரராயிருப்பார்கள் என்றார்கள்.
இந்த முதியோரின் ஆலோசனையை தள்ளி விட்டு,
11நாளாகமம் 10:8, 9
முதியோர் சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடே வளர்ந்தவர்களும் தன் சமுகத்தில் நிற்கிறவர்களுமாகிய வாலிபரோடே ஆலோசனைபண்ணி,
அவர்களை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள்மேல் வைத்த நுகத்தை இலகுவாக்கும் என்று என்னிடத்தில் சொன்ன இந்த ஜனங்களுக்கு மறுஉத்தரவு கொடுக்க நீங்கள் என்ன ஆலோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.
மேலும் அவனோடே வளர்ந்த வாலிபர் அவனிடம்,
11நாளாகமம் 10:10-12
அவனோடே வளர்ந்த வாலிபர் அவனை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நீர் அதை எங்களுக்கு இலகுவாக்கும் என்று உம்மிடத்தில் சொன்ன இந்த ஜனத்திற்கு நீர் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் சுண்டுவிரல் என் தகப்பனுடைய இடுப்பைப்பார்க்கிலும் பருமனாயிருக்கும்.
இப்போதும் என் தகப்பன் பாரமான நுகத்தை உங்கள்மேல் வைத்தார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று சொல்லும் என்றார்கள்.
மூன்றாம் நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று ராஜா சொல்லியிருந்தபடியே, யெரொபெயாமும் சகல ஜனங்களும் மூன்றாம் நாளிலே ரெகொபெயாமிடத்தில் வந்தார்கள்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகளை கேட்ட ரெகொபெயாம், மூன்றாம் நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று சொல்லியிருந்தபடியே, அவர்கள் அவனிடத்தில் வந்த போது, அவர்களிடம், முதியோர் ஆலோசனையை தள்ளி விட்டு, அவர்களுக்கு கடினமான உத்தரவுக் கொடுத்தான். எப்படியென்றால்,
11நாளாகமம் 10:14
வாலிபருடைய ஆலோசனையின்படியே அவர்களோடே பேசி, என் தகப்பன் உங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நான் அதை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று சொன்னான்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகளை ராஜா ஜனங்களுக்கு சொல்லி ராஜா ஜனங்களுக்கு செவிக்கொடாமற் போனான்; கர்த்தர் சீலோனியனான அகியாவைக்கொண்டு நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமுக்கு சொன்ன வார்த்தை நிறைவேறும்படி இப்படி நடந்தது என்று எழுதப்பட்டிருக்கிறது.
பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட வசனங்களின் படி நாம் ஒரு போதும் கர்த்தருக்குள் வாழ்ந்த முதியோர் ஆலோசனையை தள்ளிப் போடக்கூடாது என்னவென்றால் அவர்களிடமிருந்து கர்த்தரின் ஆலோசனை பிறக்கும். அல்லாமலும் கர்த்தர் நம் வாழ்வில்; நாம் நடப்பித்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனாக; அவர் நமக்கு தந்த வார்த்தைகளை நிச்சயம் நிறைவேற்றுவார் என்பதில் மாற்றமில்லை என்பதனை அறிந்துக் கொள்கிறவர்களாக இருக்க வேண்டும். ஆதலால் நாம் எப்போதும் கர்த்தரிடத்திலிருந்து நடக்க வேண்டிய அவருடைய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.