தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 52:13

இதோ, என் தாசன் ஞானமாய் நடப்பார், அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் சபையை விட்டு பிரிந்துப் போகாமல் நம்மை பாதுகாப்போம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டிசபையாகிய நாம் எப்போதும் கர்த்தரிடத்திலிருந்து ஆலோசனைகளை பெற்றுக்கொள்கிறவர்களாகயிருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

11நாளாகமம் 10:16-19 

ராஜா தங்களுக்குச் செவிகொடாததை இஸ்ரவேலர் எல்லாரும் கண்டபோது, ஜனங்கள் ராஜாவுக்கு மறுஉத்தரமாக: தாவீதோடே எங்களுக்குப் பங்கேது? ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரம் இல்லை; இஸ்ரவேலே, உன் கூடாரங்களுக்குப் போய்விடு; இப்போது தாவீதே, உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி, இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.

ஆனாலும் யூதாவின் பட்டணங்களிலே குடியிருந்த இஸ்ரவேல் புத்திரர்மேல் ரெகொபெயாம் ராஜாவாயிருந்தான்.

பின்பு ராஜாவாகிய ரெகொபெயாம் பகுதி விசாரிப்புக்காரனாகிய அதோராமை அனுப்பினான்; இஸ்ரவேல் புத்திரர் அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்; அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தீவிரமாய் இரதத்தின்மேல் ஏறி எருசலேமுக்கு ஓடிப்போனான்.

அப்படியே இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி இஸ்ரவேலர் தாவீதின் வம்சத்தை விட்டுக் கலகம்பண்ணிப் பிரிந்துபோயிருக்கிறார்கள்.

மேற்கூறிய வசனங்கள் கர்த்தர் தம்முடைய ஜனங்களை நடத்தி வருகிற காரியங்களை திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  எப்படியென்றால் அவர் தேவ சபையை கடினமாய் நடத்துகிறவரல்ல என்பதும்; ஜனங்களுக்கு தயவு காட்டுகிறவர் என்பதும் புரிகிறது.  மேலும் ஜனங்களுடைய சத்தத்திற்கு அவர் செவிகொடாதவர் அல்ல.  கீழ்படிகிற தம்முடைய பிள்ளைகளுக்கு அவர் எப்போதும் அவர்கள் சத்தத்திற்கு செவிக்கொடுத்து மெதுவாய் நடத்தி செல்கிறவர் என்பதனை அறிந்துக்கொள்ள வேண்டும்.  மேலும் அவர் கொடூரமாய் ஆளுகை செய்கிறவரல்ல; அவர் தயவு காட்டுகிறவர்.  நாம் ஜனங்களை கொடூரமாய் நடத்துவோமானால் அவர்கள் நம்மை ஏற்றுக்கொள்ளாமல் அவர்கள் சபையை விட்டு பிரிந்து போவார்கள்.  இதனால் தேவன் தம்முடைய குமாரனை நமக்கு தந்தருளி அவர் அன்பை தாழ்ந்த எண்ணத்தோடு நமக்கு வெளிப்படுத்துகிறார்.  அவரோ ஞானமாய் நடந்து தம்முடைய பிள்ளைகளின் பாதைகளை காத்துக்கொள்கிறார்.  தம்மை நேசிக்கிற பிள்ளைகள் பிரிந்து போக விடமாட்டார்.  ஆதலால் பிரியமானவர்களே, நாம் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையை விட்டு பிரிந்து போகாமல் நம்மை காத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.