தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 6:10

என் பகைஞர் எல்லாரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; அவர்கள் பின்னாகத் திரும்பிச் சடிதியிலே வெட்கப்படுவார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் சத்துருவோடு போராடி மேற்கொள்ள எப்போதும் ஆயத்தமாயிருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் சபையை விட்டு பிரிந்துப் போகாமல் நம்மை பாதுகாக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால், 

11நாளாகமம் 11:1-5

ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்தபோது, இஸ்ரவேலோடு யுத்தம்பண்ணவும், ராஜ்யத்தைத் தன்னிடமாகத் திருப்பிக்கொள்ளவும், யூதா வம்சத்தாரும் பென்யமீன் வம்சத்தாருமாகிய தெரிந்துகொள்ளப்பட்ட யுத்தவீரரான லட்சத்து எண்பதினாயிரம்பேரைக் கூட்டினான்.

தேவனுடைய மனுஷனாகிய செமாயாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர் சொன்னது:

நீ யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் சாலொமோனின் குமாரனையும், யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற எல்லா இஸ்ரவேலரையும் நோக்கி:

நீங்கள் போகாமலும், உங்கள் சகோதரரோடு யுத்தம்பண்ணாமலும், அவரவர் தம்தம் வீட்டுக்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்; அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, யெரொபெயாமுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுவதை விட்டுத் திரும்பிப் போய்விட்டார்கள்.

மேற்கூறிய வசனங்களில் ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்த போது இஸ்ரவேலரோடு யுத்தம் பண்ணவும், ராஜ்யத்தை தன்னிடமாக திருப்பிக்கொள்ளவும் யூதா வம்சத்தாரும், பென்யமீன் வம்சத்தாருமாகிய தெரிந்துக் கொள்ளப்பட்ட யுத்தவீரரான லட்சத்து எண்பதினாயிரம் பேரைக் கூட்டினான்.  அப்போது கர்த்தருடைய வார்த்தை தேவனுடைய மனுஷனகிய செமாயாவுக்கு உண்டாகி அவர்; ரெகொபெயாவுக்கும் யுத்தத்திற்கு ஆயத்தமாயிருந்த இஸ்ரவேலர் எல்லாருக்கும் சொல்ல  சொன்னது இஸ்ரவேல் புத்திரர் ரெகொபெயாமின் பகுதி விசாரிப்புக்காரனாகிய அதோராமை கல்லெறிந்துக் கொன்றது கர்த்தரால் தான் நடந்தது என்பதை சொல் என்றார்.  அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கீழ்படிந்து யெரொபெயாமுக்கு விரோதமாக யுத்தம் பண்ணுவதை விட்டுத் திரும்பி போய்விட்டார்கள்.  ரெகொபெயாம் எருசலேமில் வாசமாயிருந்து, யூதாவிலே அரணான பட்டணங்களை கட்டினான்.  அவன் பெத்லகேமும், ஏத்தாமும் தெக்கோவாவும் மேலும், 

11நாளாகமம் 11:6-12 

அவன் பெத்லகேமும், ஏத்தாமும், தெக்கொவாவும்,

பெத்சூரும், சோகோவும், அதுல்லாமும்,

காத்தும், மரேஷாவும், சீப்பும்,

அதோராயீமும், லாகீசும், அசேக்காவும்,

சோராவும், ஆயிலோனும், எப்ரோனும் ஆகிய யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற அரணிப்பான பட்டணங்களைக் கட்டி,

அந்த அரணிப்புகளைப் பலப்படுத்தி, அவைகளிலே தலைவரையும், ஆகாரமும் எண்ணெயும் திராட்சரசமுமுள்ள பண்டகசாலைகளையும்,

யூதாவும் பென்யமீனும் அவன் பட்சத்திலிருக்க, ஒவ்வொரு பட்டணத்திலும் பரிசைகளையும் ஈட்டிகளையும் வைத்து, அவைகளை மிகுதியும் பலப்படுத்தினான்.

இஸ்ரவேலெங்கும் இருக்கிற ஆசாரியரும் லேவியரும் தங்கள் எல்லா எல்லைகளிலுமிருந்து அவனிடத்தில் வந்தார்கள்.

மேற்கூறப்பட்ட அரணிப்பான பட்டணங்களை கட்டி, ஒவ்வொரு பட்டணத்திலும் பரிசைகளையும், ஈட்டிகளையும் வைத்து அவைகளை மிகவும் பலப்படுத்தினான்.  இஸ்ரவேலெங்கும் இருக்கிற ஆசாரியரும் லேவியரும் தங்கள் எல்லா எல்லைகளிலுமிருந்து அவனிடத்தில் வந்தார்கள். 

பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களின்படி பட்டணங்களை கட்டி பரிசைகளையும், ஈட்டிகளையும் வைப்பதை கர்த்தர் ஆத்துமாவின் இரட்சிப்பை திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  நம்முடைய ஆத்துமா ஆவியின் அபிஷேகமடைந்து சத்துருவோடு போர்செய்ய ஆயத்தப்படுத்தப்படுகிறது.  இவ்விதமாக நாம் சத்துருவோடு போராடும்படி நம்முடைய ஆத்துமாவை ஆயத்தப்படுத்துவோம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.