தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 26:8

கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கிய ஸ்தானத்தையும் வாஞ்சிக்கிறேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் தேவ சபைகள் பெருக செய்ய வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் சத்துருவோடு போராடி மேற்கொள்ள எப்போதும் ஆயத்தமாயிருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவன்றால்,

 11நாளாகமம் 11:14-23 

லேவியர் கர்த்தருக்கு ஆசாரிய ஊழியஞ்செய்யாதபடிக்கு யெரொபெயாமும் அவன் குமாரரும் அவர்களைத் தள்ளிப்போட்டபடியினால், தங்கள் வெளிநிலங்களையும் தங்கள் காணியாட்சிகளையும்விட்டு, யூதாதேசத்துக்கும் எருசலேமுக்கும் வந்தார்கள்.

அவன் மேடைகளுக்கென்றும், பேய்களுக்கென்றும், தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்கென்றும் ஆசாரியர்களை ஏற்படுத்தினான்.

அந்த லேவியரின் பிறகாலே இஸ்ரவேலின் கோத்திரங்களிலெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்கு எருசலேமுக்கு வந்தார்கள்.

இப்படி மூன்று வருஷமட்டும் யூதாவின் ராஜ்யத்தைப் பலப்படுத்தி, சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாமைத் திடப்படுத்தினார்கள்; தாவீதும் சாலொமோனும் நடந்த வழியிலே மூன்று வருஷமட்டும் நடந்தார்கள்.

ரெகொபெயாம் தாவீதின் குமாரனாகிய எரிமோத்தின் குமாரத்தி மகலாத்தையும், ஈசாயின் குமாரனாகிய எலியாபின் குமாரத்தி அபியாயேலையும் விவாகம்பண்ணினான்.

இவள் அவனுக்கு ஏயூஸ் சமரியா சாகாம் என்னும் குமாரரைப் பெற்றாள்.

அவளுக்குப்பிறகு அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு அபியாவையும், அத்தாயியையும், சீசாவையும், செலோமித்தையும் பெற்றாள்.

ரெகொபெயாம் தன்னுடைய மனைவிகள் மறுமனையாட்டிகள் எல்லாரிலும், அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளைச் சிநேகித்தான்; பதினெட்டு மனைவிகளையும் அறுபது மறுமனையாட்டிகளையும் விவாகம்பண்ணி, இருபத்தெட்டுக் குமாரரையும் அறுபது குமாரத்திகளையும் பெற்றான்.

ரெகொபெயாம் மாகாளின் குமாரனாகிய அபியாவை அவன் சகோதரருக்குள்ளே தலைவனும் பெரியவனுமாக ஏற்படுத்தினான்; அவனை ராஜாவாக்க நினைத்தான்.

அவன் புத்தியாய் நடந்து, யூதா பென்யமீனுடைய எல்லா தேசங்களிலுமுள்ள அரணான சகல பட்டணங்களிலும் தன் குமாரர் யாவரையும் பிரித்துவைத்து, அவர்களுக்கு வேண்டிய ஆகாரத்தைக்கொடுத்து, அவர்களுக்கு அநேகம் பெண்களைத் தேடினான்

மேற்கூறப்பட்ட வசனங்களில் நாம் தியானிக்கையில் லேவியர் கர்த்தருக்கு ஆசாரிய ஊழியம் செய்யாதபடிக்கு, யெரொபெயாமும், அவன் குமாரரும் அவர்களை தள்ளிப்போட்டப் படியினால், தங்கள் வெளி நிலங்களையும், தங்கள் காணியாட்சிகளையும் விட்டு யூதா தேசத்திற்கும், எருசலேமுக்கும் வந்தார்கள்.  அவன் மேடைகளுக்கென்றும், பேய்களுக்கென்றும், தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்கென்றும் ஆசாரியர்களை ஏற்படுத்தினான்.  அந்த லேவியரின் பிறகாலே இஸ்ரவேலின் கோத்திரங்களிலெல்லாம், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை தேடுகிறதற்கு தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு பலியிடும்படிக்கு எருசலேமுக்கு வந்தார்கள்.  இப்படி மூன்று வருஷ மட்டும் யூதாவின் ராஜ்யத்தை பலப்படுத்தி, சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாமைத் திடப்படுத்தினார்கள்; தாவீதும் சாலொமோனும் நடந்த வழியிலே மூன்று வருஷ மட்டும் நடந்தார்கள்.  பின்பு ரெகொபெயாம் தாவீதின் குமாரனாகிய எரிமோத்தின் குமாரத்தி மகலாத்தையும், ஈசாயின் குமாரனாகிய எலியாபின் குமாரத்தி அபியாயேலையும் விவாகம் பண்ணினான்.இவள் அவனுக்கு  ஏயூஸ், சமாரியா, சாகாம் என்னும் குமாரரை பெற்றாள்.  பின்பு அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளை விவாகம் பண்ணினான்.  அபியா, அத்தாயி, சீசா, செலோமத் என்பவர்கள் அவர்கள் பிள்ளைகளாயிருந்தார்கள். ரெகொபெயாம் எல்லாரை காட்டிலும் அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளை சிநேகித்தான்; பதினெட்டு மனைவிகளையும், அறுபது மறுமனையாட்டிகளையும், விவாகம் பண்ணி, இருபத்தெட்டு குமாரரையும், அறுபது குமாரத்திகளையும் பெற்றான். ரெகொபெயாம் தன் மனைவியாகிய மாகாளின் குமாரனாகிய அபியாவை அவன் சகோதரருக்குள்ளே தலைவனும், பெரியவனுமாக ஏற்படுத்தினான்; அவனை ராஜாவாக்க நினைத்தான்.  அவன் புத்தியாய் நடந்து , யூதா பென்யமீனுடைய எல்லா தேசங்களிலுமுள்ள அரணான சகல பட்டணங்களிலும் தன் குமாரர் யாவரையும் பிரித்து வைத்து, அவர்களுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுத்து, அவர்களுக்கு அநேகம் பெண்களை தேடினான்.  

பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட வசனங்களை தியானிக்கும் போது, கர்த்தரின் வேலைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட லேவியர்களும், இஸ்ரவேலரும் தங்கள் இருதயத்தை கர்த்தரை தேடுகிறதற்கு  நேராக்கினவர்கள் எல்லாரும் எருசலேமுக்கு வந்தார்கள்.  இவ்விதமாக நாம் யாவரும் எருசலேமாகவும், ஆத்துமா யூதாவின் ராஜ்யமாக பலப்படுத்தி திடப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் தேவ சபைகள் தேசங்களில் எவ்விதம் பெருகும் என்றும், ஆவிக்குரிய சபை, உலக சபை இரண்டு வித சபைகள் தேசங்களில் பரவுகிறது என்பதனை ரெகொபெயாம், யெரொபெயாம் என்பவர் மூலம் கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  ஆதலால் நாம் எப்போதும் என்றென்றைக்கும் கர்த்தரின் சபையாக சத்திய சபையை பெருக செய்யும்படியாக நம்மை திடப்படுத்தி ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.