தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 15:4 

ஆகாதவன் அவன் பார்வைக்குத் தீழ்ப்பானவன்; கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம்பண்ணுகிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரை உத்தம இருதயத்தோடு பின்பற்றுகிறவர்களாகயிருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரிடத்தில் ஆணையோடுகூட கர்த்தரை தேட வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்,

11நாளாகமம் 15:16-19 

தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை உண்டுபண்ணின ராஜாவாகிய ஆசாவின் தாயான மாகாளையும் ராஜாத்தியாய் இராதபடிக்கு ஆசா விலக்கிப்போட்டு, அவளுடைய விக்கிரகத்தையும் நிர்மூலமாக்கித் தகர்த்து, கீதரோன் ஆறண்டையிலே சுட்டெரித்துப்போட்டான்.

மேடைகளோ இஸ்ரவேலிலிருந்து தகர்க்கப்படவில்லை; ஆனாலும், ஆசாவின் இருதயம் அவன் நாட்களிலெல்லாம் உத்தமமாயிருந்தது.

தன் தகப்பனும் தானும் பரிசுத்தம்பண்ணும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் அவன் தேவனுடைய ஆலயத்திலே கொண்டுவந்தான்.

ஆசா அரசாண்ட முப்பத்தைந்தாம் வருஷமட்டும் யுத்தம் இல்லாதிருந்தது.

ஆசா கர்த்தரிடத்தில் ஆணையிட்டதினால் யூதா ஜனங்கள் சந்தோஷப்பட்டார்கள்;  ஆதலால் தங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரை தேடினார்கள். கர்த்தர் அவர்களுக்கு வெளிப்பட்டு சுற்றுப்புறத்தாரால் யுத்தமில்லாதபடிக்கு அவர்களை இளைப்பாறப்பண்ணினது போல நாமும் ஆணையில் நஷ்டம் வந்தாலும் தவறாமல் இருந்தால் நம் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் தருவார்.  மேலும் நம்முடைய முன்னோர்களின் பாரம்பரியத்தை நம் உள்ளத்தில் இருந்து அகற்ற வேண்டும், எந்தவிதமான விக்கிரக மேடைகள் நம் உள்ளத்தில் இராதபடி விலக்கிக்கொள்ள வேண்டும். நாம்  உத்தம இருதயத்தோடு கர்த்தரை பின்பற்ற வேண்டும்.  அப்படி உத்தமமாய் பின்பற்றுவோமானால் நம் உள்ளத்தில் அமைதியுண்டாகும்.  இப்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.