தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 42:13

கர்த்தர் பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, யுத்தவீரனைப்போல் வைராக்கியமூண்டு, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய சத்துருக்களை மேற்கொள்ளுவார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் உள்ளத்தில் எழும்புகிற பொல்லாத எண்ணங்களுக்கு தப்பும்படியாக உபவாசத்தோடு கர்த்தரை தேடுவோம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்மில் கிறிஸ்து என்றன்றைக்கும் ஆசாரியராக வெளிப்பட்டு நம்மை நியாயந்தீர்க்கிறார் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால், 

11நாளாகமம் 20:1-5

இதற்குப்பின்பு மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும், அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட யோசபாத்திற்கு விரோதமாய் யுத்தம்பண்ண வந்தார்கள்.

சிலர் வந்து, யோசபாத்தை நோக்கி: உமக்கு விரோதமாய் ஏராளமான ஜனங்கள் கடலுக்கு அக்கரையிலிருக்கிற சீரியாவிலிருந்து வருகிறார்கள்; இதோ, அவர்கள் எங்கேதியாகிய ஆசாசோன்தாமாரில் இருக்கிறார்கள் என்று அறிவித்தார்கள்.

அப்பொழுது யோசபாத் பயந்து, கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான்.

அப்படியே யூதா ஜனங்கள் கர்த்தரிடத்திலே சகாயந்தேடக் கூடினார்கள்; யூதாவிலுள்ள எல்லாப் பட்டணங்களிலும் இருந்து அவர்கள் கர்த்தரைத் தேட வந்தார்கள்.

அப்பொழுது யோசபாத் கர்த்தருடைய ஆலயத்திலே புதுப்பிராகாரத்து முகப்பிலே, யூதா ஜனங்களும் எருசலேமியரும் கூடின சபையிலே நின்று:

மேற்கூறப்பட்ட வசனங்களில் நம்முடைய உள்ளத்தில் கர்த்தருக்கு விரோதான தீய கிரியைகள் செய்யும்படி சில எண்ணங்கள் நம் உள்ளத்தில் எழும்பும்.  இதனை நாம் கர்த்தரின் வசனத்தால் ஜெயிக்க வேண்டும்.  இதனை ஜெயிக்க நாம் உபவாசத்தால் கர்த்தரை தேடும்படி நம் மனதை ஒருமுகப்படுத்த வேண்டும்.  மேலும் சபையாக உபவாசித்தால் அது நமக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருக்கும்.  பின்பு நாம் கர்த்தரிடத்தில் எப்படி வேண்டுதல் செய்ய வேண்டும் என்பதனை  கர்த்தர் யோசபாத்தை வைத்து திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  எப்படியென்றால், 

11நாளாகமம் 20:6-12 

எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே, பரலோகத்திலிருக்கிற நீர் அல்லவோ தேவன்; தேவரீர் ஜாதிகளுடைய ராஜ்யங்களையெல்லாம் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே வல்லமையும் பராக்கிரமமும் இருக்கிறது, ஒருவரும் உம்மோடு எதிர்த்து நிற்கக் கூடாது.

எங்கள் தேவனாகிய நீர் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முன்பாக இந்த தேசத்துக் குடிகளைத் துரத்திவிட்டு இதை உம்முடைய சிநேகிதனாகிய ஆபிரகாமுடைய சந்ததிக்கு என்றைக்குமென்று கொடுக்கவில்லையா?

ஆதலால் அவர்கள் இங்கே குடியிருந்து, இதிலே உம்முடைய நாமத்திற்கென்று ஒரு பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டினார்கள்.

எங்கள்மேல் பட்டயம், நியாயதண்டனை, கொள்ளைநோய், பஞ்சம் முதலான தீமைகள் வந்தால், அப்பொழுது உம்முடைய நாமம் இந்த ஆலயத்தில் விளங்குகிறபடியால், நாங்கள் இந்த ஆலயத்திலும் உமது சந்நிதியிலும் வந்து நின்று, எங்கள் இடுக்கணில் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், தேவரீர் கேட்டு இரட்சிப்பீர் என்று சொல்லியிருக்கிறார்கள்.

 இப்போதும், இதோ, இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்து வருகிறபோது, அம்மோன் புத்திரர், மோவாபியர், சேயீர் மலைத்தேசத்தாருடைய சீமைகள் வழியாய்ப் போக நீர் உத்தரவு கொடுக்கவில்லை; ஆகையால் அவர்களை விட்டு விலகி, அவர்களை நாசப்படுத்தாதிருந்தார்கள்.

இப்போதும், இதோ, அவர்கள் எங்களுக்கு நன்மைக்குத் தீமையைச் சரிக்கட்டி, தேவரீர் எங்களைச் சுதந்தரிக்கப்பண்ணின உம்முடைய சுதந்தரத்திலிருந்து எங்களைத் துரத்திவிட வருகிறார்கள்.

எங்கள் தேவனே, அவர்களை நீர் நியாயந்தீர்க்கமாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை; நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது என்றான்.

மேற்க்கூறிய வசனங்களின் கருத்துக்கள் என்னவென்றால் நம்முடைய கர்த்தர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்.  வல்லமையும் பராக்கிரமும் அவர் கரத்தில் இருக்கிறது.  ஆதலால் அவருடைய வசனம் ஏற்றுக்கொண்டால் அதற்கு மாறான எண்ணங்கள்  நம் உள்ளத்தில் செயல்பட முடியாது.  ஏனென்றால்,  கர்த்தரின் வசனம் சொல்கிறது; 

கலாத்தியர் 3:24-29  

இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.

விசுவாசம் வந்தபின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்களல்லவே.

நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே.

ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.

யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.

நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள்.

இந்த வசனங்களில் கிறிஸ்துவினுடையவர்களாகிய நாம் ஆபிரகாமின் சந்ததியாயும், வாக்குதத்தத்தின்படி சுதந்தரராயும் இருக்கிறோம்.  அப்படியாக நம் உள்ளத்தில் பரிசுத்த ஸ்தலத்தை கட்டி, எந்த தீமையான காரியங்களுக்கோ, கொள்ளை, பஞ்சம் இவைகளுக்கோ ஒப்புக்கொடாதபடி கர்த்தர் நம்மை இரட்சித்து காக்கிறவராகயிருப்பார். ஆதலால் நாம் எப்போதும் நம்முடைய உள்ளத்தில் பொல்லாத செயல்கள் எழும்பாத படி கர்த்தரிடத்தில்  உபவாசத்தோடு கர்த்தரை தேடி அவர் வசனங்கள் கைக்கொண்டு நடந்து ஜெபிக்கிறவர்களாயிருக்கும் படி ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.