தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 26:13

எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்மையல்லாமல் வேறே ஆண்டவன்மார் எங்களை ஆண்டார்கள்; இனி உம்மை மாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம் உள்ளத்தை நல்ல எண்ணங்களால் கர்த்தர் நிரப்புவார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் உள்ளத்தில் எழும்புகிற பொல்லாத எண்ணங்களுக்கு தப்பும்படியாக உபவாசத்தோடு கர்த்தரை தேட வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக  நாம் தியானிப்பது என்னவென்றால் 

11நாளாகமம் 20:13-19 

யூதா கோத்திரத்தார் அனைவரும், அவர்கள் குழந்தைகளும், அவர்கள் பெண்ஜாதிகளும், அவர்கள் குமாரருங்கூட கர்த்தருக்கு முன்பாக நின்றார்கள்.

அப்பொழுது சபையின் நடுவிலிருக்கிற மத்தனியாவின் குமாரனாகிய ஏயெலின் மகனான பெனாயாவுக்குப் பிறந்த சகரியாவின் புத்திரன் யகாசியேல் என்னும் ஆசாப்பின் புத்திரரில் ஒருவனான லேவியன்மேல் கர்த்தருடைய ஆவி இறங்கினதினால் அவன் சொன்னது:

சகல யூதா கோத்திரத்தாரே, எருசலேமின் குடிகளே, ராஜாவாகிய யோசபாத்தே, கேளுங்கள்; நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார்; இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது.

நாளைக்கு நீங்கள் அவர்களுக்கு விரோதமாய்ப் போங்கள்; இதோ, அவர்கள் சிஸ் என்னும் மேட்டுவழியாய் வருகிறார்கள்; நீங்கள் அவர்களை யெருவேல் வனாந்தரத்திற்கு எதிரான பள்ளத்தாக்கின் கடையாந்தரத்திலே கண்டு சந்திப்பீர்கள்.

இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல; யூதா மனுஷரே, எருசலேம் ஜனங்களே, நீங்கள் தரித்துநின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள்; கர்த்தர் உங்களோடே இருக்கிறார் என்றான்.

அப்பொழுது யோசபாத் தரைமட்டும் முகங்குனிந்தான்; சகல யூதா கோத்திரத்தாரும் எருசலேமின் குடிகளும் கர்த்தரைப் பணிந்துகொள்ளக் கர்த்தருக்குமுன்பாகத் தாழவிழுந்தார்கள்.

கோகாத்தியரின் புத்திரரிலும் கோராகியரின் புத்திரரிலும் இருந்த லேவியர் எழுந்திருந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகா சத்தத்தோடே கெம்பீரமாய்த் துதித்தார்கள்.

மேற்கூறப்பட்டிருக்கிற வசனங்களில் கூறியபடி, நாம் கர்த்தரிடத்தில்  விண்ணப்பம் பண்ணுவோமானால் கர்த்தர் நமக்காக நம் உள்ளத்தில் போராடுகிற போராட்டங்களோடு யுத்தம் செய்து ஜெயிப்பார்.  அதனால் அந்த காரியங்களைக் குறித்து நாம் பயப்படவேண்டாம்.  ஆதலால் எந்த நாளிலும் கர்த்தர் நமக்காக யுத்தம் பண்ணுவார், என்பதனை திருஷ்டாந்தத்தால் தெளிவுபடுத்துகிறார்..  இப்படியாக நம் உள்ளம் கிறிஸ்துவில் மட்டும் தரித்து நிற்கும் போது நம்முடைய ஆத்துமா அந்நிய கிரியைகளினின்று விடுதலையாகி இரட்சிக்கப்படுகிறது.  அப்போது நம் உள்ளம் தாழ்மையடைந்து, எல்லா எண்ணங்களும் நீதியின் கிரியைகள் செய்யும்படியாக தன்னை தாழ்த்தும்.  இப்படியாக நம் இருதயத்திலுள்ள மாறுபாடான செயல்களை கர்த்தர் நம்மை விட்டு நீக்கும் போது கர்த்தரை நாம் கெம்பீர சத்தத்தோடு துதிப்போம்.  இப்படிபட்ட நற்கிரியைகள் நம்மில் பெலன் தந்து கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.