தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எசேக்கியல் 33:32

இதோ, நீ இனிய குரலும் கீதவாத்தியம் வாசிப்பதில் சாமர்த்தியமுமுடையவன் பாடும் இன்பமான பாட்டுக்குச் சமானமாயிருக்கிறாய்; அவர்கள் உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவைகளின்படி செய்யாமற்போகிறார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய அவயவங்கள் தான் கிறிஸ்துவின் இசை கருவியாக செயல்பட வேண்டும்.

கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா சத்துருவின் கையிலிருந்து விடுதலையாகி இரட்சிக்கப்படுவது எப்படி என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால், 

11நாளாகமம் 20:26-28  

நாலாம் நாளில் பெராக்காவிலே கூடினார்கள்; அங்கே கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார்கள்; ஆதலால் அவ்விடத்திற்கு இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி பெராக்கா என்னும் பேர் தரித்தார்கள்.

பின்பு கர்த்தர் அவர்களை அவர்கள் சத்துருக்கள்பேரில் களிகூரச் செய்தபடியால் யூதா மனுஷர் யாவரும் எருசலேம் ஜனங்களும், அவர்களுக்கு முன்னாலே யோசபாத்தும் மகிழ்ச்சியோடே எருசலேமுக்குத் திரும்பினார்கள்.

அவர்கள் தம்புருகளோடும் சுரமண்டலங்களோடும் பூரிகைகளோடும் எருசலேமிலிருக்கிற கர்த்தருடைய ஆலயத்திற்கு வந்தார்கள்.

மேற்கூறபட்ட வசனங்களில் யூதா புத்திரர் புறஜாதிகளாகிய அந்நிய புத்திரரோடு யுத்தம் செய்து அநேகப் பொருட்களை கொள்ளையாடினார்கள். பின்பு நாலாம் நாளிலே பெராக்காவிலே கூட்டம் கூடினார்கள். அங்கே கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, அந்த இடத்திற்கு இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி பெராக்கா என்னும் பெயர் தரித்தார்கள்.  பின்பு கர்த்தர் சத்துருக்கள் பேரில் களிகூர செய்தபடியால் யூதமனுஷர் யாவரும், எருசலேம் ஜனங்களும், அவர்களுக்கு முன்னாலே யோசபாத்தும் மகிழ்ச்சியோடே எருசலேமுக்கு திரும்பினார்கள்.  மேலும் அவர்கள் தம்புருக்களோடும், சுரமண்டலங்களோடும் பூரிகைகளோடும் எருசலேமிலிருக்கிற கர்த்தருடைய ஆலயத்திற்கு வந்தார்கள்.  

பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்கள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தான் நமக்காக, நம் உள்ளத்தில் இருக்கிற புறஜாதிகளாகிய சத்துருக்களோடு யுத்தம் செய்கிறார் என்பதும்,அதன் காரணமாக சத்துருக்களை ஜெயித்து கர்த்தர் ஜெயதொனியோடு நம்மை களிகூர செய்கிறார், அவ்விதம் இருப்பதால் சபையாகிய ஜனங்கள் மகிழ்ச்சியோடு கிறிஸ்துவை ஆராதிப்பார்கள் என்பதனை திருஷ்டாந்தப்படுத்துகிறார். அல்லாமலும் கிறிஸ்துவே நம் உள்ளத்தில் பாடல் தொனி எழுப்பும் இசை கருவியாக செயல்படுகிறார்.  ஆதலால் நாம் எல்லாருடைய சரீரத்தின் அவயவங்கள் கிறிஸ்துவின் இசை கருவியாக இருந்து;  தொனியாக எழும்பும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.