தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 9:19

எழுந்தருளும் கர்த்தாவே, மனுஷன் பெலன்கொள்ளாதபடி செய்யும்; ஜாதிகள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்படக்கடவர்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம் உள்ளத்தில் பாகாலின் கிரியைகளாகிய ஜாதிகளின் கிரியைகள் எழும்பாதபடி ஜாக்கிரதையோடு காத்துக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், 

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா அந்நிய  ஜாதிகளால் காயப்படாதபடி காத்துக்கொள்ள வேண்டும் என்பதனைக்குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால், 

11நாளாகமம் 22:6-7 

அப்பொழுது தான் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு யுத்தம்பண்ணுகையில், தன்னை அவர்கள் ராமாவிலே வெட்டின காயங்களை யெஸ்ரெயேலிலே ஆற்றிக்கொள்ள அவன் திரும்பினான், அப்பொழுது ஆகாபின் குமாரனாகிய யோராம் வியாதியாயிருந்தபடியினால் தாவீதின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அகசியா, யெஸ்ரெயேலிலிருக்கிற அவனைப் பார்க்கிறதற்குப் போனான்.

அகசியா யோராமிடத்துக்கு வந்தது அவனுக்கு தேவனால் உண்டான கேடாக லபித்தது; எப்படியென்றால், அவன் வந்தபோது யோராமுடனே கூட, கர்த்தர் ஆகாபின் குடும்பத்தாரைச் சங்கரிக்க அபிஷேகம்பண்ணுவித்த நிம்சியின் குமாரனாகிய யெகூவுக்கு நேராக வெளியே போனான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் யூதாவின் ராஜாவாகிய யோராம், கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதை செய்து, சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு யுத்தம் பண்ண போகையில், தன்னை அவர்கள் ராமாவிலே வெட்டின காயங்களை யெஸ்ரெயேலிலே ஆற்றிக்கொள்ள திரும்பினான்;  அப்பொழுது ஆகாபின் குமாரனாகிய யோராம் வியாதியாயிருந்தபடியினால் , யூதாவின் ராஜாவாகிய அகசியா  யெஸ்ரயேலிலிருக்கிற ஆகாபின்  குமாரன்  யோராமை பார்க்கிறதற்கு போனான்.  அவன் ஆகாபின் குமாரனாகிய யோராமிடத்தில் வந்தது தேவனால் உண்டான கேடாக லபித்தது; எப்படியென்றால் அவன் வந்த போது யோராமுடனேகூட, கர்த்தர் ஆகாபின் குடும்பத்தாரை சங்கரிக்க அபிஷேகம் பண்ணுவித்த நிம்சியின் குமாரனாகிய யெகூவுக்கு நேராக வெளியே போனான். இதனை பார்த்த யெகூ, 

11நாளாகமம் 22:8,9  

யெகூ, ஆகாபின் குடும்பத்தாருக்கு ஆக்கினை நடப்பிக்கும்போது, அவன் அகசியாவைச் சேவிக்கிற யூதாவின் பிரபுக்களையும், அகசியாவுடைய சகோதரரின் குமாரரையும் கண்டுபிடித்துக் கொன்றுபோட்டான்.

பின்பு அவன் அகசியாவைத் தேடினான்; சமாரியாவில் ஒளித்துக்கொண்டிருந்த அவனை அவர்கள் பிடித்து, யெகூவினிடத்தில் கொண்டுவந்து, அவனைக் கொன்றுபோட்டு: இவன் தன் முழுஇருதயத்தோடும் கர்த்தரைத் தேடின யோசபாத்தின் குமாரன் என்று சொல்லி, அவனை அடக்கம்பண்ணினார்கள்; அப்படியே அரசாளுகிறதற்குப் பெலன்கொள்ளத்தக்க ஒருவரும் அகசியாவின் குடும்பத்தில் இல்லாமற்போயிற்று.

மேற்கூறிய வசனங்களில் எழுதப்பட்டவைகள் நடந்தேறிய பின்பு, அகசியாவின் தாயாகிய அத்தாலியாள், தன் குமாரன் இறந்து போனதை கண்டபோது, அவள் எழும்பி யூதா குடும்பத்தில் ராஜ வம்சமான யாவரையும் சங்காரம்பண்ணினாள். 

பிரியமானவர்களே, இஸ்ரவேல் ராஜா, யூதாவின் ராஜா என்று எழுதப்பட்டிருக்கிறது, நம்மில்  உள்ள உள்ளான மனுஷனும், ஆத்துமாவுக்கும் தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  உள்ளான மனுஷனில் பரிசுத்தம் இல்லாமல் இருந்தால்,ஆத்துமாவும் கெட்டுப்போகும் என்பதை கர்த்தர் தெளிவுபடுத்துகிறார்.  மேலும் நம்முடைய தாய் எருசலேமாக (கிறிஸ்து) காணப்பட வேண்டும்.  அத்தாலியாளின் கிரியைகள் நம்மில் எழும்பினால் அதனை கர்த்தர் அழிக்கிறார். ஏனென்றால் அந்த பரஸ்திரீயானவள் நம்மில் ஆத்துமா நன்மை பெற்றுக்கொள்ள விடாமல் நாம் செய்கிற நீதியின் கிரியைகள் அனைத்தும் அற்றுப்போக பண்ணுகிறாள். ஆதலால் நம்முடைய ஆத்துமாவில் ஒருபோதும் பாகாலின் கிரியைகள் செயல்படாதபடி காத்துக் கொள்ள வேண்டும்.  இப்படியாக நம் உள்ளான மனுஷனுக்கேற்ற பரிசுத்தம் தரித்துக்கொண்டு, ஆத்துமாவை பரிசுத்தமாக காத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.