தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யாக்கோபு 5:8 

நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் வேதமும் உபதேசமும் கேட்டு; அதனை கைக்கொண்டால் அதற்கேற்ற பலனை கர்த்தர் தருவார். 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் ஜாதிகளின் கிரியைகளை அழித்து இரட்சிப்பைக்கூற வேண்டும் என்பதனைக்குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்,

11நாளாகமம்  15:1-7

அப்பொழுது தேவனுடைய ஆவி ஓதேதின் குமாரனாகிய அசரியாவின்மேல் இறங்கினதினால்,

அவன் வெளியே ஆசாவுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி: ஆசாவே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனுஷரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்.

இஸ்ரவேலிலே அநேக நாளாய் மெய்யான தேவனும் இல்லை, உபதேசிக்கிற ஆசாரியனும் இல்லை, வேதமும் இல்லை.

தங்கள் நெருக்கத்திலே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்பி, அவரைத் தேடினபோது, அவர் அவர்களுக்கு வெளிப்பட்டார்.

அக்காலங்களிலே வெளியே போகிறவர்களுக்கும் உள்ளே வருகிறவர்களுக்கும் சமாதானம் இல்லை; தேசங்களின் குடிகள் எல்லாருக்குள்ளும் மகா அமளி உண்டாயிருந்து,

ஜாதியை ஜாதியும், பட்டணத்தைப் பட்டணமும் நொறுக்கினது; தேவன் அவர்களைச் சகலவித இடுக்கத்தினாலும் கலங்கப்பண்ணினார்.

நீங்களோ உங்கள் கைகளை நெகிழவிடாமல் திடன்கொள்ளுங்கள்; உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு என்றான்.

மேற்கூறப்பட்ட வசனங்களின் கருத்துக்கள் நாம் ஆவியோடும், உண்மையோடும் கர்த்தரை ஆராதிப்போமாகில் கர்த்தருடைய ஆவியானவர் நம்மேல் இறங்குவார்.  கர்த்தரை ஆராதிக்கிறவர்களாகிய நம்மோடு சொல்வது நாம் கர்த்தரோடிருந்தால் கர்த்தர் நம்மோடிருப்பார்.  நாம் அவரை தேடினால் அவர் நமக்கு வெளிப்படுவார்.  நாம் அவரை விட்டுவிட்டால் அவர் நம்மை விட்டுவிடுவார்.  இஸ்ரவேலராகிய நம்முடைய உள்ளத்தை ஆராய்ந்து அறிகிற நம்முடைய தேவன் சொல்கிறார் அநேக நாளாய் இஸ்ரவேலிலே மெய்யான தேவனும் இல்லை, உபதேசிக்கிறவனும் இல்லை, ஆசாரியனும் இல்லை, வேதமும் இல்லை. ஆனால் கர்த்தரின் உபதேசம் நாம் கேட்டு, நம்முடைய நெருக்கத்திலே, கர்த்தரிடத்தில் நாம் திரும்பி அவரை தேடினால் நிச்சயமாய் நமக்கு வெளிப்படுவார் என்பதனை முந்தின தீர்க்கதரிசன  வசனங்கள் மூலம் திருஷ்டாந்தப்படுத்துகிறார். ஆனால் கர்த்தரை தேடாமல் இருந்தால் யாருக்கும் சமாதானம் இல்லை என்பதும் எல்லாருக்குள்ளும் மகா அமளி உண்டாயிருந்து எல்லாரையும் கர்த்தர் சகலவித இடுக்கத்தினாலும் கலங்க பண்ணுவார் என்பதும் தெரியவருகிறது. ஆதலால் நாம் நம்முடைய கைகளை திடப்படுத்தி,  சத்திய வார்த்தைகளை விட்டு இருதயத்தை நெகிழ விடாமல் நாம் திடனோடு இருந்தால் நம்முடைய கிரியைகளுக்குப் பலன் உண்டு என்கிறார்.  ஆதலால் பிரியமானவர்களே,  மேற்கூறப்பட்ட வார்த்தைகளை நாம் தியானித்து எப்போதும் தேவனை தேடுகிறவர்களாகவும், கர்த்தரின் வேதமும், உபதேசமும் கைக்கொண்டு நம்மை திடப்படுத்தி கொண்டால் கர்த்தர் நமக்கு நிச்சயமாக அதன் பலனை தருவார்.  இவ்விதமாக ஒவ்வொருவரும் நம்மை ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.