தேவனுக்கே மகிமையுண்டாவதாக

 சங்கீதம் 45:17 

உமது நாமத்தை எல்லாத் தலைமுறைகளிலும் பிரஸ்தாபப்படுத்துவேன், இதினிமித்தம் ஜனங்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் துதிப்பார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் வார்த்தைகளை சுற்றி திரிந்து போதிக்கிறவர்களாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் எந்த கஷ்டமான சூழ்நிலமைகள் வந்தாலும் கர்த்தரை மட்டுமே சார்ந்து வாழ வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்

 11நாளாகமம் 17:1-9 

அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய யோசபாத் ராஜாவாகி, இஸ்ரவேலுக்கு விரோதமாய்ப் பலப்பட்டான்.

அவன் யூதாவின் அரணான பட்டணங்களிலெல்லாம் இராணுவத்தையும், யூதாதேசத்திலும், தன் தகப்பனாகிய ஆசா பிடித்த எப்பிராயீமின் பட்டணங்களிலும் தாணையங்களையும் வைத்தான்.

கர்த்தர் யோசபாத்தோடிருந்தார்; அவன் பாகால்களைத் தேடாமல், தன் தகப்பனாகிய தாவீது முன்நாட்களில் நடந்த வழிகளில் நடந்து,

தன் தகப்பனுடைய தேவனைத் தேடி, இஸ்ரவேலுடைய செய்கையின்படி நடவாமல், அவருடைய கற்பனைகளின்படி நடந்துகொண்டான்.

ஆகையால் கர்த்தர் அவன் கையில் ராஜ்யபாரத்தைத் திடப்படுத்தினார்; யூதா கோத்திரத்தார் எல்லாரும் யோசபாத்துக்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்; அவனுக்கு ஐசுவரியமும் கனமும் மிகுதியாயிருந்தது.

கர்த்தருடைய வழிகளில் அவன் இருதயம் உற்சாகங்கொண்டது; அவன் மேடைகளையும் விக்கிரகத் தோப்புகளையும் யூதாவை விட்டகற்றினான்.

அவன் அரசாண்ட மூன்றாம் வருஷத்தில் யூதாவின் பட்டணங்களிலே உபதேசம்பண்ணும்படிக்கு, அவன் தன் பிரபுக்களாகிய பென்னாயிலையும், ஒபதியாவையும், சகரியாவையும், நெதனெயேலையும், மிகாயாவையும்,

மேற்கூறிய  வசனங்களின் கருத்துக்கள் என்னவெனில் நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுக்கொள்வோமானால், நம் உள்ளமாகிய இஸ்ரவேலில் இருக்கிற எல்லா துர் செய்கைகளை  கிறிஸ்துவினால் அழித்து தேவாவியில் பலப்படமுடியும்.  அப்படி செய்வோமானால் நம் உள்ளத்தை எந்த அந்நிய கிரியைகளும் தொடாதபடி வேத வசனங்களால் உறுதிப்படுத்த முடியும்.  அப்படி நாம் உண்மையும் உத்தமுமாக இருப்போமானால் கர்த்தர் எப்போதும் எல்லாவற்றிலும் நம்மோடிருப்பார்.  அப்போது நாம் இஸ்ரவேலிலுள்ள பொல்லாத செய்கைகளின் படி நடவாமல் கர்த்தரின் கற்பனைகளின்படி நடப்போம்.  அப்படிபட்டவர்களுடைய கையில் கர்த்தர் தேவனுடைய ராஜ்யத்தை திடப்படுத்துவார்.  அவ்விதம்  திடப்படுத்தப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் கர்த்தருக்காக காணிக்கையாக நம்மை கொடுக்க வேண்டும்.  அப்போது நமக்கு ஐசுவரியமும், கனமும் உண்டாகும்.  அப்போது கர்த்தருடைய வழிகளில் நம் ஆத்துமா உற்சாகமடையும்.  அப்போது நம்முடைய உள்ளத்தில் உள்ள பெருமையும், விக்கிரகத்தையும் நம்மை விட்டு அகற்ற முடியும். இப்படியாகும் போது நம்முடைய உள்ளத்தில் கர்த்தரின் உபதேசம் எழும்பும். அவ்விதமாக  இரட்சிக்கப்பட்ட ஜனங்கள் நடுவில் உபதேசித்து, கர்த்தரின் வேதபுஸ்தகத்தை வைத்துக்கொண்டு, நாம் பட்டணங்களிலெல்லாம் திரிந்து ஜனங்களுக்கு போதிக்கிறவர்களாக இருக்கவேண்டும். 

பிரியமானவர்களே, போதிக்கிறவர்கள் நாம் அல்ல, நம்மிலிருக்கிற கிறிஸ்து.  ஆதலால் இவ்விதமாக நாம் கர்த்தருக்குரிய காரியங்களை நடப்பித்து அவருக்காய் நம்மை முழுமையும் ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.