தேவனுக்கே மகிமையுண்டாவதாக

தானியேல் 12:3 

ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா காக்கப்பட்டு, ஆவியில் பெலனடைந்து அநேகரை நீதிக்குட்படுத்த வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் வார்த்தைகளை சுற்றி திரிந்து போதிக்கிறவர்களாக இருக்க வேண்டும். என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

11நாளாகமம் 17:10-19 

யூதாவைச் சுற்றியிருக்கிற தேசங்களுடைய ராஜ்யங்களின்மேலெல்லாம் கர்த்தரால் உண்டான பயங்கரம் வந்ததினால், யோசபாத்தோடு யுத்தம்பண்ணாதிருந்தார்கள்.

பெலிஸ்தரிலும் சிலர் யோசபாத்துக்குப் பகுதிப்பணத்தோடேகூடக் காணிக்கைகளையும் கொண்டுவந்தார்கள்; அரபியரும் அவனுக்கு ஏழாயிரத்து எழுநூறு ஆட்டுக்கடாக்களையும், ஏழாயிரத்து எழுநூறு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்தார்கள்.

இப்படியே யோசபாத் வரவர மிகவும் பெரியவனாகி, யூதாவிலே கோட்டைகளையும், ரஸ்துக்களை வைக்கும் பட்டணங்களையும் கட்டினான்.

யூதாவின் பட்டணங்களில் அவன் பெரிய வேலைகளை நடத்தினான்; எருசலேமிலே பராக்கிரமசாலிகளான சேவகர் அவனுக்கு இருந்தார்கள்.

தங்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படி அவர்களுடைய இலக்கமாவது: யூதாவிலே ஆயிரத்துக்கு அதிபதிகளில் அத்னா தலைமையானவன்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் மூன்று லட்சம்பேர் இருந்தார்கள்.

அவனுக்கு உதவியாக யோகனான் என்னும் சேனாபதியிருந்தான்; அவனிடத்திலே இரண்டுலட்சத்து எண்பதினாயிரம்பேர் இருந்தார்கள்.

 அவனுக்கு உதவியாக கர்த்தருக்குக் தன்னை உற்சாகமாய் ஒப்புக்கொடுத்த சிக்ரியின் குமாரனாகிய அமசியா இருந்தான்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் இரண்டு லட்சம்பேர் இருந்தார்கள்.

 பென்யமீனிலே எலியாதா என்னும் பராக்கிரமசாலி இருந்தான்; அவனிடத்திலே வில்லும் கேடகமும் பிடிக்கிறவர்கள் இரண்டு லட்சம்பேர் இருந்தார்கள்.

அவனுக்கு உதவியாக யோசபாத் இருந்தான்; அவனிடத்திலே சேவகத்திற்கு ஆயுதபாணிகள் லட்சத்து எண்பதினாயிரம்பேர் இருந்தார்கள்.

ராஜா யூதா எங்குமுள்ள அரணான பட்டணங்களில் வைத்தவர்களைத்தவிர இவர்களே ராஜாவைச் சேவித்தவர்கள்.

மேற்கூறிய கர்த்தரின் வார்த்தைகள் பிரகாரம் யூதாவிலே வேதபுஸ்தகம் போதிக்கதொடங்கினதில் அதனை சுற்றியுள்ள தேசங்களினுடைய ராஜ்யங்களின் மேலெல்லாம் கர்த்தரால் பயங்கரம் உண்டானதினால் யோசபாத்தோடு யுத்தம் பண்ணாதிருந்தார்கள்.  இதனைப்போல் நாம் வேத வசனம் தியானித்து நம் உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு நடப்போமானால் நமக்கு விரோதமாக எழும்புகிற சத்துரு எழும்பாமல் கர்த்தர் பாதுகாப்பார்.  இப்படியாக நம் மூலம் அநேகர் கர்த்தரை தேடுகிறதற்கு அது ஒரு வழியாகயிருக்கும்.  இது நமக்கு ஒரு பெரிய கோட்டையாக நம் ஆத்துமாவை காத்துக்கொள்வோம்.  இப்படி நம் ஆத்துமா காக்கப்படுமாகில் ஆவியில் பெலனடைந்து கர்த்தரின் வேலைகளை பலத்தோடு செய்வோம்; அதன் மூலம் கர்த்தருக்காய் அநேக பராக்கிரமசாலிகள் எழும்புவார்கள்.  இப்படி அநேகர் ராஜாவாகிய கிறிஸ்துவை  சேவிப்பார்கள். நம்முடைய வாழ்விலும் நாம் கர்த்தருக்காய் அநேகரை நீதிக்குட்படுத்தும்படியாக ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.