தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 38:21
கர்த்தாவே, என்னைக் கைவிடாதேயும்; என் தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா சத்துருவால் அழிக்கப்படாதபடி காத்துக்கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம் உள்ளத்தில் பாகாலின் கிரியைகளாகிய ஜாதிகளின் கிரியைகள் எழும்பாதபடி ஜாக்கிரதையோடு காத்துக்கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்,
11நாளாகமம் 22:10-12
அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் குமாரன் இறந்துபோனதைக் கண்டபோது, அவள் எழும்பி, யூதா குடும்பத்திலுள்ள ராஜவம்சமான யாவரையும் சங்காரம்பண்ணினாள்.
ராஜாவின் குமாரத்தியாகிய யோசேபியாத், கொன்றுபோடப்படுகிற ராஜகுமாரருக்குள் இருக்கிற அகசியாவின் ஆண்பிள்ளையாகிய யோவாசைக் களவாயெடுத்துக்கொண்டு, அவனையும் அவன் தாதியையும் சயனவீட்டிலே வைத்தாள்; அப்படியே அத்தாலியாள் அவனைக் கொன்றுபோடாதபடிக்கு, ராஜாவாகிய யோராமின் குமாரத்தியும் ஆசாரியனாகிய யோய்தாவின் பெண்ஜாதியுமாகிய யோசேபியாத் அவனை ஒளித்துவைத்தாள், அவள் அகசியாவின் சகோதரியாயிருந்தாள்.
இவர்களோடு அவன் ஆறுவருஷமாய்க் கர்த்தருடைய ஆலயத்திலே ஒளித்துவைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் ராஜ்யபாரம்பண்ணினாள்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் குமாரன் இறந்து போனதை கண்டபோது, அவள் எழும்பி, யூதா குடும்பத்திலுள்ள ராஜ வம்சமான யாவரையும் சங்காரம் பண்ணினாள். ராஜாவின் குமாரத்தியாகிய யோசேபியாத் ராஜகுமாரருக்குள் இருக்கிற அகசியாவின் ஆண் பிள்ளையாகிய யோவாசை களவாயெடுத்துக்கொண்டு, அவனையும் தாதியையும் சயன வீட்டிலே வைத்தாள். யோசேபியாத் அகசியாவின் சகோதரியாயிருந்தாள். இப்படியாக அவன் கர்த்தருடைய ஆலயத்திலே ஒளித்து வைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் அத்தேசத்தின்மேல் ராஜ்யபாரம்பண்ணினாள். பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது கர்த்தரின் ஆவியால் நாம் நிறையப்பட்டு, வேசியின் கிரியைகள் நம் உள்ளத்தில் வளரவிடாமல் தடைசெய்து அவைகளை அழிக்கும்போது, அத்தாலியாளாகிய பரஸ்திரீயானவள் நம்மில் கிறிஸ்து ராஜாவாக எழும்புவதை தடை செய்யும்படியாக ; நாம் செய்கிற நீதியின் கிரியைகளை வளர விடாமல் பொல்லாப்புகளை செய்ய வைத்து நம் ஆத்துமாவை கெடுக்க நினைக்கும் போது; அதனை நாம் கருத்தில் கொண்டு, ஆவிக்குரிய வாழ்வு நம்மில் சில காலம் ரகசியமாக இருக்க வேண்டும் என்பதையும், கிறிஸ்து நம்மில் எழுந்தருளி ராஜ்யபாரம் செய்யும் வரையில், நாம் நம்முடைய ஆத்துமாவை ஜாக்கிரதையோடு காத்துக் கொள்ள வேண்டும் என்பதனை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார். இப்படியாக நம் ஆத்துமா கர்த்தரின் ஆலயமாகிய நம்மில் கர்த்தரின் மகிமைக்குள்ளாக காக்கப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.