தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 20:28

தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்; தயையினாலே தன் சிங்காசனத்தை நிற்கப்பண்ணுவான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் ஒவ்வொருவரும் ராஜரீக அபிஷேகம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா சத்துருவால் அழிக்கப்படாதபடி காத்துக்கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம்  தியானிப்பது என்னவென்றால், 

11நாளாகமம் 23:1-3 

ஏழாம் வருஷத்திலே யோய்தா திடன்கொண்டு, நூறுபேருக்கு அதிபதிகளாகிய எரோகாமின் குமாரன் அசரியாவையும், யோகனானின் குமாரன் இஸ்மவேலையும், ஓபேதின் குமாரன் அசரியாவையும், ஆதாயாவின் குமாரன் மாசெயாவையும், சிக்ரியின் குமாரன் எலிஷாபாத்தையும் தன் உடன்படிக்கைக்கு உட்படுத்தினான்.

அவர்கள் யூதாவிலே சுற்றித்திரிந்து, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் இருக்கிற லேவியரையும், இஸ்ரவேலுடைய பிதாக்களின் வம்சத்தலைவரையும் கூட்டிக்கொண்டு எருசலேமுக்கு வந்தார்கள்.

அந்தச் சபையார் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தில் ராஜாவோடே உடன்படிக்கை செய்தார்கள்; யோய்தா அவர்களை நோக்கி: இதோ, கர்த்தர் தாவீதின் குமாரரைக்குறித்துச் சொன்னபடியே ராஜாவின் குமாரன் ராஜாவாக வேண்டும்.

மேற்கூறிய வசனங்களில் அகசியாவின் குமாரன் யோவாசை களவாயெடுத்து கர்த்தரின் ஆலயத்தில் ஆறு வருஷம் ஒளித்து வைத்திருக்கும் போது ஏழாம் வருஷத்தில் யோய்தா  திடன் கொண்டு, நூறு பேருக்கு அதிபதிகளாகிய எரோகாமின் குமாரன் அசரியாவையும், யோகனானின் குமாரன் அசரியாவையும், யோகனானின் குமாரன் இஸ்மவேலையும், ஓபேதின் குமாரன் அசரியாவையும், ஆதாயாவின் குமாரன் மாசெயாவையும், சிக்ரியின் குமாரன் எலிஷாபாத்தையும் தன் உடன்படிக்கைக்குட்படுத்தி, யூதாவிலே சுற்றி திரிந்து, அந்த பட்டணங்களிலெல்லாம் இருக்கிற லேவியரையும், இஸ்ரவேலுடைய பிதாக்களின் வம்சதலைவரையும் கூட்டிக்கொண்டு எருசலேமுக்கு வந்தார்கள்.  அந்த சபையார் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தில் ராஜாவோடே உடன்படிக்கை செய்தார்கள்; யோய்தா அவர்களிடம் சொன்னது கர்த்தர் தாவீதின் குமாரரைக் குறித்து சொன்னபடியே ராஜாவின் குமாரன் ராஜாவாக வேண்டும் என்று சொல்லி, 

11நாளாகமம் 23:4-7 

நீங்கள் செய்யவேண்டிய காரியம் என்னவென்றால், இவ்வாரத்தில், முறைப்படி வருகிற ஆசாரியரும் லேவியருமான உங்களில் மூன்றில் ஒருபங்கு ஒலிமுகவாசல்களையும்,

மூன்றில் ஒருபங்கு ராஜாவின் அரமனையையும், மூன்றில் ஒருபங்கு அஸ்திபார வாசலையும் காக்கவும், ஜனங்களெல்லாம் கர்த்தருடைய ஆலயப் பிராகாரங்களில் இருக்கவும் வேண்டும்.

ஆசாரியரும் லேவியரில் ஊழியம்செய்கிறவர்களும் தவிர, ஒருவரும் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கவேண்டாம்; அவர்களே உட்பிரவேசிப்பார்களாக; அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்; ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய காவலைக் காப்பார்களாக.

லேவியர் அவரவர் தங்கள் ஆயுதங்களைத் தங்கள் கையிலே பிடித்துக்கொண்டவர்களாய், ராஜாவைச் சுற்றிலும் வரிசையாய் நின்றுகொண்டிருக்கவேண்டும்; ஆலயத்துக்குட்படுகிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; ராஜா உட்பிரவேசிக்கிறபோதும் வெளியே புறப்படுகிறபோதும் நீங்கள் அவரோடே இருங்கள் என்றான்.

மேற்கூறியபடியெல்லாம் யோய்தா சொன்னது போல் லேவியரும் யூதா கோத்திரத்தார் யாவரும் செய்தார்கள்.  ஆனால் ஆசாரியனாகிய யோய்தா எந்த கோத்திரங்களும் பிரிந்து போக உத்தரவுக் கொடுக்க வில்லை.  மேலும் தாவீது ராஜா தேவனுடைய  ஆலயத்தில் வைத்திருந்த ஈட்டிகளையும், கேடகங்களையும் பரிசைகளையும் ஆசாரியனாகிய யோய்தா நூறுபேருக்கு அதிபதியினிடத்தில் கொடுத்து, எல்லாரும் அவரவர் ஆயுதங்களை கையிலே பிடித்துக்கொண்டவர்களாய் ஆலயத்தின் வலது புறம் துவக்கி. இடதுபுறம் மட்டும் பலிபீடத்திற்கும்,ஆலயத்திற்கும் எதிரே ஆலயத்தை சுற்றிலும் நிற்க ஜனங்களையெல்லாம் நிறுத்தினான். இவ்விதமாக அகசியாவின் குமாரன் யோவாஸ் ராஜாவாக அபிஷேகம் பண்ணபடுவதற்கு ஆயத்தமாக ஆசாரியனாகிய யோய்தா திடன் கொண்டு காரியங்களை எல்லாம் உறுதியாக செய்கிறான்.  இதனை கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் திருஷ்டாந்தப்படுத்தி காட்டுகிறது என்னவென்றால் நாம் கர்த்தரிடத்திலிருந்து ராஜரீக அபிஷேகம் பெற்றுக் கொள்ள வேண்டுமானால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்வில் எந்த வஞ்சிக்கிற ஆவிகளும் நம்மை வஞ்சித்து விடாதபடி நாம் கர்த்தருடைய ஆலயத்தில் கிறிஸ்துவின் நிழலின் கீழ் மறைக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.  மற்றும் கர்த்தரின் ஆவிக்குரிய பட்டயமாகிய வேத வசனம் நம்மை சூழ காத்துக்கொள்கிறதாக இருக்க வேண்டும்.  இவையென்னவென்றால் நாம் நம்முடைய சொல்லிலும்,  செயலிலும், நடத்தையிலும், கர்த்தரின் வசனத்தால் சாட்சியுள்ளவர்களாகயிருக்க வேண்டும். அப்படியாக நம்மை காத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.