தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 69:18 

நீர் என் ஆத்துமாவினிடத்தில் வந்து அதை விடுதலைபண்ணும்; என் சத்துருக்களினிமித்தம் என்னை மீட்டுவிடும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்மில் வஞ்சிக்கிற பொல்லாத ஆவியை நிர்மூலம்பண்ணி,  கர்த்தருடைய ஜனங்களாயிருக்கும் படி கிறிஸ்துவினால் உடன்படிக்கை பண்ணிக்கொள்வோம்.  

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த  நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் ஒவ்வொருவரும் ராஜரீக அபிஷேகம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்,

11நாளாகமம் 23:11-16 

பின்பு ராஜகுமாரனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன்மேல் வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்து, அவனை ராஜாவாக்கினார்கள்; யோய்தாவும் அவன் குமாரரும் அவனை அபிஷேகம்பண்ணி, ராஜா வாழ்க என்றார்கள்.

ஜனங்கள் ஓடிவந்து, ராஜாவைப் புகழுகிற சத்தத்தை அத்தாலியாள் கேட்டபோது, அவள் கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்களிடத்தில் வந்து,

இதோ, நடையிலுள்ள தன்னுடைய தூணண்டையிலே ராஜா நிற்கிறதையும், ராஜாவண்டையில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து ஜனங்களெல்லாரும் சந்தோஷப்பட்டு எக்காளங்கள் ஊதுகிறதையும், கீதவாத்தியங்களைப் பிடித்துக்கொண்டு பாடகரும் சங்கீதத்தலைவரும் துதிக்கிறதையும் கண்டாள்; அப்பொழுது அத்தாலியாள் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: துரோகம் துரோகம் என்று கூவினாள்.

ஆசாரியனாகிய யோய்தா இராணுவத்தலைவராகிய நூறுபேருக்கு அதிபதிகளானவர்களை வெளியே அழைத்து, அவர்களை நோக்கி: இவளை வரிசைக்குப்புறம்பே கொண்டுபோங்கள்; இவளைப் பின்பற்றுகிறவனைப் பட்டயத்தால் வெட்டிப்போடுங்கள் என்றான். கர்த்தரின் ஆலயத்திலே அவளைக் கொன்றுபோடாதேயுங்கள் என்று ஆசாரியன் சொல்லியிருந்தான்.

அவர்கள் அவளுக்கு இடமுண்டாக்கினபோது, அவள் ராஜாவின் அரமனையிலிருக்கிற குதிரைகளின் வாசலுக்குள் பிரவேசிக்கும் இடமட்டும் போனாள்; அங்கே அவளைக் கொன்றுபோட்டார்கள்.

அப்பொழுது யோய்தா தாங்கள் கர்த்தருடைய ஜனமாயிருக்கும்படிக்கு, தானும் சகல ஜனங்களும் ராஜாவும் உடன்படிக்கை பண்ணிக்கொள்ளும்படி செய்தான்.

மேற்கூறிய வசனங்களில் எழுதியிருக்கிறபடி யோவாஸை ராஜாவாக்கும்படியாக ஆலயத்தின் வெளியே கொண்டு வந்து அவன் தலையின் மேல் கிரீடத்தை வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்து, அவனை ராஜாவாக்கும் போது; யோய்தாவும் அவன் குமாரனும் அவனை அபிஷேகம் பண்ணி, ராஜா வாழ்க என்றார்கள்.  அப்போது ஜனங்கள் எல்லாம் ஓடி வந்து வாழ்த்துகிற சத்தத்தை அத்தாலியாள் கேட்ட போது அவள் கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்களிடத்திற்கு வந்து நடையிலுள்ள தூணண்டையிலே ராஜா நிற்கிறதையும், ராஜாவண்டையில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையுதம், தேசத்து ஜனஙகளெல்லாரும் சந்தோஷப்பட்டு எக்காளங்கள் ஊதுகிறதையும், கீதவாத்தியங்களையும் பிடித்துக் கொண்டு பாடகரும் சங்கீத தலைவரும் துதிக்கிறதையும் கண்டாள்.  அப்போது  அத்தாலியாள் தன் வஸ்திரங்களை கிழித்துக்கொண்டு இது துரோகம் துரோகம் என்று கூவினாள்.  அப்போது ஆசாரியனாகிய யோய்தா சொல்லியிருந்தபடியே அவளை வரிசைக்கு புறம்பேக் கொண்டு போனார்கள்.  கர்த்தரின் ஆலயத்திற்க்குள் அவள் கொல்லப்படாமல், அவர்கள் அவளுக்கு இடமுண்டாக்கின போது அவள் ராஜாவின் அரமனையிலிருக்கிற குதிரைகளின் வாசலுக்குள் பிரவேசிக்கும் இடமட்டும் போனாள்.   அங்கே அவளைக் கொன்றுப் போட்ட பின்பு, யோய்தா தாங்கள் கர்த்தருடைய ஜனமாயிருக்கும்படிக்கு, தானும், சகல ஜனங்களும் ராஜாவோடே உடன்படிக்கைப் பண்ணிக் கொண்டார்கள்.  

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்கள் நமக்கு திருஷ்டாந்தத்திற்கென்று கொடுக்கப்பட்டுள்ளது.  எப்படியென்றால் நம் ஆத்துமா பெலனடைந்து ராஜரீக அபிஷேகம் பெற்றுக்கொள்ள விடாமல் வஞ்சிக்கிற சூதும் அநியாயமும் நடப்பிகிற பொல்லாத ஆவி நம்மை வஞ்சித்து நம் ஆத்துமாவை கொல்லும்படி பிரயதனம் பண்ணும்.  ஆனால் நாமோ கர்த்தரால் காக்கப்படும் போது, அந்த ஆவி மிகவும் வெறியோடு நம் உள்ளத்தில் ஒருபக்கம் நம்மை கெடுக்கும்படி எழும்பினாலும், நம்முடைய நித்திய பிரதான ஆசாரியனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கட்டளையால் அந்த பொல்லாத ஆவி நிர்மூலம்பண்ணப்படுகிறது.  அப்படி நிகழ்ந்தால் கிறிஸ்து ஆசாரியத்துவமும், ராஜரீகம் உள்ளவராக; நாம் கர்த்தருடைய ஜனங்களாகும்படி உடன்படிக்கை பண்ணுகிறார்.    இவ்விதம் நம் வாழ்வு கிறிஸ்துவினால்  ஆசீர்வதிக்கப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.