தேவனுக்கே மகிமையுண்டாவதாக
Iகொரிந்தியர் 3:16
நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் நம்மை அனுதினம் புதிய கிருபைகளால் புதுப்பிக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில்
மணவாட்டி சபையாகிய நம்மை கர்த்தர் ஆசாரியராகவும், ராஜாக்களுமாக்குகிறார் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்,
IIநாளாகமம் 24:1-5
யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்து, நாற்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; பெயெர்செபா பட்டணத்தாளான அவன் தாயின் பேர் சிபியாள்.
ஆசாரியனாகிய யோய்தாவின் நாளெல்லாம் யோவாஸ் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
அவனுக்கு யோய்தா இரண்டு ஸ்திரீகளை விவாகஞ்செய்து கொடுத்தான்; அவர்களால் குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
அதற்குப்பின்பு கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்க யோவாஸ் விருப்பங்கொண்டான்.
அவன் ஆசாரியரையும் லேவியரையும் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி: நீங்கள் யூதா பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், உங்கள் தேவனுடைய ஆலயத்தை வருஷாவருஷம் பழுதுபார்க்கிறதற்கு, இஸ்ரவேலெங்கும் பணம் சேகரியுங்கள்; இந்தக் காரியத்தைத் தாமதமில்லாமல் செய்யுங்கள் என்றான். ஆனாலும் லேவியர் தாமதம்பண்ணினார்கள்.
மேற்கூறிய வசனங்களில் யோவாஸ் ராஜாவாகிற போது ஏழு வயதாயிருந்து நாற்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; பெயர்செபா பட்டணத்தாளான அவன் தாயின் பெயர் சிபியாள். அவன் ஆசாரியனாகிய யோய்தாவின் நாளெல்லாம் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்தான். யோய்தா அவனுக்கு இரண்டு ஸ்திரீகளை விவாகம் செய்து கொடுத்தான்; அவர் குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றான். பின்பு கர்த்தருடைய ஆலயத்தை புதுப்பிக்க விருப்பங்கொண்டு ஆசாரியரையும், லேவியரையும் கூடிவர செய்து அவன் சொன்னது; நீங்கள் எல்லாரும் யூத பட்டணங்களுக்கு போய் தேவனுடைய ஆலயத்தை வருஷா வருஷம் பழுது பார்க்கிதற்கும், இஸ்ரவேலெங்கும் பணம் சேகரியுங்கள், தாமதமில்லாமல் செய்யுங்கள் என்றான்; ஆனாலும் லேவியர்கள் தாமதம் பண்ணினார்கள். பின்பு ராஜா யோய்தா என்னும் ஆசாரியனை அழைத்து சொன்னது,
IIநாளாகமம் 24: 6-11
அப்பொழுது ராஜா யோய்தா என்னும் தலைவனை அழைப்பித்து: சாட்சியின் வாசஸ்தலத்துக்குக் கொடுக்க, கர்த்தரின் தாசனாகிய மோசே கட்டளையிட்ட வரியை யூதாவினிடத்திலும், எருசலேமியரிடத்திலும், இஸ்ரவேல் சபையாரிடத்திலும் வாங்கி வருகிறதற்கு, லேவியரை நீர் விசாரியாமற்போனதென்ன?
அந்தப் பொல்லாத ஸ்திரீயாகிய அத்தாலியாளுடைய மக்கள் தேவனுடைய ஆலயத்தைப் பலவந்தமாய்த் திறந்து, கர்த்தருடைய ஆலயத்திலுள்ள பிரதிஷ்டை பண்ணப்பட்டவைகளையெல்லாம் பாகால்களுக்காகச் செலவுபண்ணிப்போட்டார்களே என்றான்.
அப்பொழுது ராஜாவின் சொற்படி ஒரு பெட்டியை உண்டாக்கி, அதைக் கர்த்தருடைய ஆலயத்து வாசலுக்குப் புறம்பே வைத்து,
கர்த்தரின் தாசனாகிய மோசே வனாந்தரத்தில் இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்ட வரியைக் கர்த்தருக்குக் கொண்டுவாருங்கள் என்று யூதாவிலும் எருசலேமிலும் பறைசாற்றுவித்தார்கள்.
அப்பொழுது எல்லாப் பிரபுக்களும் எல்லா ஜனங்களும் சந்தோஷமாய்க் கொண்டுவந்து பெட்டிநிறைய அதிலே போட்டார்கள்.
வெகுபணம் உண்டென்று கண்டு, லேவியர் கையால் அந்தப் பெட்டி ராஜாவின் விசாரிப்புக்காரர் அண்டையிலே கொண்டுவரப்படும்போது, ராஜாவின் சம்பிரதியும் பிரதான ஆசாரியனுடைய விசாரிப்புக்காரனும் வந்து, பெட்டியிலிருக்கிறதைக் கொட்டியெடுத்து, அதைத் திரும்ப அதின் ஸ்தானத்திலே வைப்பார்கள்; இப்படி நாளுக்கு நாள் செய்து மிகுந்த பணத்தைச் சேர்த்தார்கள்.
மேற்கூறப்பட்ட வசனங்கள் பிரகாரம் ஆலயத்தை பழுதுபார்க்கும்படி பணத்தை சேகரித்தார்கள். பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்களின்படி கர்த்தருடைய ஆலயத்தை புதுப்பிப்பது நமக்கு திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது எப்படியென்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்தெழும்புதல் தேவனுடைய ஆலயமாகிறது. அவ்விதம் நாமெல்லாரும் கர்த்தரின் ஆலயமாக விளங்கும்போது, அவ்விதம் கிறிஸ்துவின் ஆவியால் உயிர்ப்பிக்கப்பட்ட நம்முடைய ஆத்துமா அனுதினம் புதுப்பித்துகொள்ள வேண்டும். அப்படியாக கிறிஸ்துவின் வசனங்களினால் நம்மை புதுப்பித்துக்கொள்ளும் போது; இஸ்ரவேல் சபையார் யாவரும் தங்களை புதிய கிருபையினால் அனுதினம் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இப்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.