தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபிரெயர் 13:16

அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் யாவருக்கும் நன்மை செய்கிறவர்களாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, மணவாட்டி சபையாகிய நாம் ஒருபோதும் கர்த்தரை விட்டு விலகாமல் ஜாக்கிரதையோடு இருக்க வேண்டும்  என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால், 

II நாளாகமம் 24:20-23 

அப்பொழுது தேவனுடைய ஆவி ஆசாரியனாகிய யோய்தாவின் குமாரனான சகரியாவின்மேல் இறங்கினதினால், அவன் ஜனத்திற்கு எதிரே நின்று: நீங்கள் கர்த்தருடைய கற்பனைகளை மீறுகிறது என்ன? இதினால் நீங்கள் சித்திபெறமாட்டீர்கள் என்று தேவன் சொல்லுகிறார்; நீங்கள் கர்த்தரை விட்டுவிட்டதினால் அவர் உங்களைக் கைவிடுவார் என்றான்.

அதினால் அவர்கள் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, கர்த்தருடைய ஆலயப்பிராகாரத்தில் ராஜாவினுடைய கற்பனையின்படி அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.

அப்படியே அவனுடைய தகப்பனாகிய யோய்தா தனக்குச் செய்த தயையை ராஜாவாகிய யோவாஸ் நினையாமல் அவனுடைய குமாரனைக் கொன்றுபோட்டான்; இவன் சாகும்போது: கர்த்தர் அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார் என்றான்.

மறுவருஷத்திலே சீரியாவின் சேனைகள் அவனுக்கு விரோதமாக யூதாவிலும் எருசலேமிலும் வந்து, ஜனத்திலிருக்கிற பிரபுக்களையெல்லாம் அழித்து, கொள்ளையிட்ட அவர்கள் உடைமைகளையெல்லாம் தமஸ்குவின் ராஜாவுக்கு அனுப்பினார்கள்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் ஆசாரியனாகிய யோய்தா மரித்த பின்பு அவன் குமாரனாகிய சகரியாவின் மேல் தேவனுடைய ஆவி இறங்கினதினால், அவன் ஜனத்திற்கு எதிரே நின்று சொன்னது; நீங்கள் கர்த்தரின் கட்டளைகளை மீறினதினால் சித்திபெற மாட்டீர்கள் என்றும்; நீங்கள் அவரை விட்டு விட்டதினால் அவர் உங்களை கைவிடுவார் என்றதால் அவர்கள் ராஜாவின் கட்டளைபிரகாரம் அவனுக்கு விரோதமாக கட்டுப்பாடு பண்ணி, கர்த்தருடைய ஆலய பிரகாரத்தில் அவனை கல்லெறிந்துக் கொன்றார்கள்.  அவனுடைய தகப்பனாகிய யோய்தா; ராஜாவாகிய யோவாசுக்கு  செய்த தயையை நினையாமல்  அவனுடைய குமாரனை கொன்றுப் போட்டான்; இவன் சாகும் போது கர்த்தர் அதை பார்ப்பார், அதை கேட்பார் என்றான்.  மறுவருஷத்திலே சீரியாவின் சேனைகள் அவனுக்கு விரோதமாக யூதாவிலும், எருசலேமிலும் வந்து ஜனத்திலிருக்கிற பிரபுக்களையெல்லாம் அழித்து, கொள்ளையிட்ட அவர்கள் உடமைகள் எல்லாம் தமஸ்குவுக்கு அனுப்பினார்கள்.  அல்லாமலும் 

II நாளாகமம் 24:24-27 

சீரியாவின் சேனை சிறுகூட்டமாய் வந்திருந்தாலும், அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுவிட்டபடியினால், கர்த்தர் மகா பெரிய சேனையை அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் யோவாசுக்கு தண்டனை செய்தார்கள்.

அவர்கள் அவனை மகா வேதனைக்குள்ளானவனாக விட்டுப்போனார்கள்; அவர்கள் புறப்பட்டுப்போனபின்பு, அவனுடைய ஊழியக்காரர் ஆசாரியனாகிய யோய்தாவுடைய குமாரரின் இரத்தப்பழியினிமித்தம், அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவன் படுக்கையிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்; செத்துப்போன அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.

அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணினவர்கள், அம்மோனிய ஸ்திரீயான சீமாத்தின் குமாரனாகிய சாபாத்தும், மோவாப் ஸ்திரீயான சிம்ரீத்தின் குமாரனாகிய யோசபாத்துமே.

அவன் குமாரரைப்பற்றியும். அவன்மேல் வந்த பெரிய பாரத்தைப்பற்றியும், தேவனுடைய ஆலயத்தை அவன் பலப்படுத்தினதைப்பற்றியும் ராஜாக்களின் புஸ்தகமான சரித்திரத்தில் எழுதியிருக்கிறது; அவன் குமாரனாகிய அமத்சியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

மேற்கூறபட்ட வசனங்களில் தேவனுடைய பிள்ளைகளுக்கு விரோதமாக எழும்புகிறவர்களை கர்த்தர் அழிக்கிறார் என்பது திருஷ்டாந்தப்படுத்தபடுகிறது.  மேலும் முந்தின பகுதிகளை நாம் வாசிக்கும் போது, ஒருமுறை கர்த்தருக்காய் நன்மைகளை செய்து பின்னொரு நாளில் கர்த்தரை விட்டு விலகி பின்வாங்கி போனால் கர்த்தர் அவர்களை கடுமையாய் தண்டிக்கிறார் என்பதும், மற்றும் நம் முன்னோர்களுக்கு கர்த்தருக்குரிய நன்மையான காரியங்களை செய்தவர்களுக்கு நாம் யாதொரு தீமை செய்தாலும் கர்த்தர் அவர்களை தண்டிக்கிறார் என்றும், மற்றும் அவர்கள் பொருளையெல்லாம் கர்த்தர் கொள்ளைக்கு ஒப்புக்கொடுப்பார் என்பதனையும் திருஷ்டாந்தத்தோடு விளக்குகிறார்.  ஆதலால் பிரியமானவர்களே, நாம் ஒருபோதும் யாருக்கும் தீமை செய்யாமல் நன்மையே செய்யும்படியாக ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.