தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 64:10

நீதிமான் கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான்; செம்மையான இருதயமுள்ளவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் எப்போதும் முழுமனதோடு கர்த்தருக்கு செம்மையானவைகளை செய்ய வேண்டும்.

கழிந்த நாளில் நாம் தியானிப்பது என்னவென்றால், மணவாட்டி சபையாகிய நாம் யாவருக்கும் நன்மை செய்கிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால், 

11நாளாகமம் 25:1-9 

அமத்சியா இருபத்தைந்தாம் வயதிலே ராஜாவாகி, இருபத்தொன்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளாகிய அவனுடைய தாயின்பேர் யோவதானாள்.

அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் முழுமனதோடே அப்படிச் செய்யவில்லை.

ராஜ்யபாரம் அவனுக்கு ஸ்திரப்பட்டபோது, அவன் தன் தகப்பனாகிய ராஜாவைக் கொலைசெய்த தன்னுடைய ஊழியக்காரரைக் கொன்றுபோட்டான்.

ஆனாலும் பிள்ளைகளினிமித்தம் பிதாக்களும், பிதாக்களினிமித்தம் பிள்ளைகளும் கொலைசெய்யப்படாமல், அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டுமென்று மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி, கர்த்தர் கட்டளையிட்டபிரகாரம், அவர்களுடைய பிள்ளைகளை அவன் கொல்லாதிருந்தான்.

அமத்சியா யூதா மனுஷரைக் கூடிவரச் செய்து, அவர்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படியே, யூதா பென்யமீன் தேசங்கள் எங்கும் ஆயிரம்பேருக்கு அதிபதிகளையும் நூறுபேருக்கு அதிபதிகளையும் வைத்து, இருபது வயதுமுதற்கொண்டு அதற்கு மேற்பட்டவர்களை இலக்கம்பார்த்து, யுத்தத்திற்குப் புறப்படவும், ஈட்டியையும் கேடகத்தையும் பிடிக்கவுந்தக்க யுத்தவீரர் மூன்றுலட்சம்பேரென்று கண்டான்.

இஸ்ரவேலிலும் லட்சம் பராக்கிரமசாலிகளை நூறுதாலந்து வெள்ளி கொடுத்துக் கூலிக்கு அமர்த்தினான்.

தேவனுடைய மனுஷன் ஒருவன் அவனிடத்தில் வந்து: ராஜாவே, இஸ்ரவேலின் சேனை உம்முடனே வரலாகாது; கர்த்தர் எப்பிராயீமின் சகல புத்திரராகிய இஸ்ரவேலோடும் இருக்கவில்லை.

போக மனதானால் நீர் போம், காரியத்தை நடத்தும்; யுத்தத்திற்குத் திடன்கொண்டு நில்லும்; தேவன் உம்மைச் சத்துருவுக்கு முன்பாக விழப்பண்ணுவார்; ஒத்தாசை செய்யவும் விழப்பண்ணவும் தேவனாலே கூடும் என்றான்.

அப்பொழுது அமத்சியா: அப்படியானால் நான் இஸ்ரவேலின் சேனைக்குக் கொடுத்த நூறு தாலந்திற்காகச் செய்யவேண்டியது என்ன என்று தேவனுடைய மனுஷனைக் கேட்டான். அதற்கு தேவனுடைய மனுஷன்: அதைப்பார்க்கிலும் அதிகமாய்க் கர்த்தர் உமக்குக் கொடுக்கக்கூடும் என்றான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் யோவாசின் குமாரனாகிய அமத்சியா இருபத்தைந்தாம் வயதில் ராஜாவாகி இருபத்தொன்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்.  அவனுடைய தாய் எருசலேம் நகரத்தாளாகிய யோவதானாள்.  இவன் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்தாலும் முழுமனதோடு செய்யவில்லை.  ராஜ்யபாரம் ஸ்திரபட்ட போது, அவன் தகப்பனை கொலை செய்த தன்னுடைய ஊழியக்காரரைக் கொன்று போட்டான்.  ஆனாலும் பிள்ளைகளினிமித்தம் பிதாக்களும், பிதாக்களினிமித்தம் பிள்ளைகளும் கொலைசெய்யப்படாமல், அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்பட வேண்டும் என்று எழுதியிருக்கிற மோசேயின் நியாயப்பிரமான கட்டளையின் படி அவர்களுடைய பிள்ளைகளை அவன் கொலை செய்யாதிருந்தான்.  மேலும் அமத்சியா யூதா மனுஷரை கூடிவர செய்து, அவர்கள் பிதாக்களுடைய  வம்சங்களின் படியே யூதா பென்யமீன் தேசங்கள் எங்கும் ஆயிரம் பேருக்கு அதிபதிகளையும், நூறு பேருக்கு அதிபதிகளையும் வைத்து, இருபது வயது முதற்க்கொண்டு அதற்கு மேற்பட்டவர்களை இலக்கம் பார்த்து, யுத்தத்திற்கு புறப்படவும், ஈட்டியையும், கேடகத்தையும் பிடிக்கவும் தக்கதாக யுத்தவீரர் மூன்று லட்சம் பேரென்று கண்டு, இஸ்ரவேலிலும் லட்சம் பராக்கிரம சாலிகளை நுறுதாலந்து வெள்ளிக்கொடுத்து கூலிக்கு அமர்த்தினான்.  அப்பொழுது தேவனுடைய மனுஷன் ஒருவன் அவனிடத்தில் வந்து இஸ்ரவேலின் சேனை உம்மோடே வரலாகாது; கர்த்தர் எப்பிராயீமின் சகல புத்திரராகிய இஸ்ரவேலோடும் இருக்கவில்லை; போக மனதிருந்தால் நீர் போம், காரியத்தை நடத்தும்; யுத்தத்திற்கு திடன் கொண்டு நில்லும்; தேவன் உம்மைச் சத்துருவுக்கு முன்பாக விழப்பண்ணுவார்.  ஒத்தாசை செய்யவும், விழப்பண்ணவும் தேவனாலே கூடும் என்றான்.  அப்போது அமத்சியா கேட்டது தேவனுடைய மனுஷனிடத்தில்; அப்படியானால் இஸ்ரவேலின் சேனைக்கு கொடுத்த நூறு தாலந்திற்காக செய்ய வேண்டியது என்ன என்று தேவனுடைய மனுஷனை கேட்டான்; அதற்கு தேவனுடைய மனுஷன் அதனை பார்க்கிலும் அதிகமாய் கர்த்தர் உமக்கு கொடுக்கக் கூடும் என்றான். 

பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களில் தியானிப்பது என்னவென்றால் முழு மனதோடு கர்த்தருக்கு செம்மையானதை செய்யாமல் இருப்போமானால், கர்த்தருடைய சகாயம் நமக்கு கிடைக்காது என்பதனை நாம் ஒவ்வொருவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.  மேலும் அவரவர் செய்கிற பாவம் அவரவருக்கே வந்து நேரிடும் என்பதும்; அநியாயம் செய்கிறவர்களோடு கர்த்தர் ஒருபோதும் இருக்க மாட்டார் என்பதும்; நம்முடைய பிதாக்கள் செய்த அக்கிரமங்களுக்கு நாம் ஒரு போதும் பழி வாங்கக்கடாது என்பதும் புரிந்துக்கொள்ள வேண்டும்.  மேலும் மேற்கூறியபடி அமத்சியாவை போல யாரும் ஆகக்கூடாது என்பதனையும் நம் மனதிலே சிந்தித்து, தேவனுக்கு பிரியமானதை செய்ய நம்மை ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.