தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 71:1
கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் தீர்க்கதரிசன வார்த்தைகளுக்கு கீழ்படிவோம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், கர்த்தருக்கு எப்போதும் நாம் முழு மனதோடு செம்மையானவைகளை செய்யவேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்,
IIநாளாகமம் 25:10-16
அப்பொழுது அமத்சியா எப்பிராயீமரில் தன்னிடத்துக்கு வந்த சேனையைத் தங்கள் வீட்டிற்குப் போய்விடப் பிரித்துவிட்டான்; அதினால் அவர்களுக்கு யூதாவின்மேல் மிகுந்த கோபமூண்டு, உக்கிரமான எரிச்சலோடே தங்களிடத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
அமத்சியாவோ திடன்கொண்டு, தன் ஜனத்தைக் கூட்டி, உப்புப் பள்ளத்தாக்குக்குப் போய், சேயீர் புத்திரரில் பதினாயிரம்பேரை வெட்டினான்.
யூதா புத்திரர், பதினாயிரம்பேரை உயிரோடு பிடித்து, ஒரு கன்மலையுச்சியிலே கொண்டுபோய், அவர்களெல்லாரும் நொறுங்கிப்போகத்தக்கதாய் அந்தக் கன்மலையுச்சியிலிருந்து கீழே தள்ளிவிட்டார்கள்.
தன்னோடுகூட யுத்தத்திற்கு வராதபடிக்கு, அமத்சியா திருப்பிவிட்ட யுத்தபுருஷர், சமாரியா துவக்கிப் பெத்தொரோன்மட்டுமுள்ள யூதா பட்டணங்களின்மேல் விழுந்து, அவைகளில் மூவாயிரம்பேரை வெட்டி, திரளாய்க் கொள்ளையிட்டார்கள்.
அமத்சியா ஏதோமியரை முறிய அடித்து, சேயீர் புத்திரரின் தெய்வங்களைக் கொண்டுவந்தபின்பு, அவன் அவைகளைத் தனக்கு தெய்வங்களாக வைத்து, அவைகளுக்கு முன்பாகப் பணிந்து அவைகளுக்குத் தூபங்காட்டினான்.
அப்பொழுது, கர்த்தர் அமத்சியாவின்மேல் கோபமூண்டவராகி, அவனிடத்துக்கு ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார்; இவன் அவனை நோக்கி: தங்கள் ஜனத்தை உமது கைக்குத் தப்புவிக்காதேபோன ஜனத்தின் தெய்வங்களை நீர் நாடுவானேன் என்றான்.
தன்னோடே அவன் இப்படிப் பேசினபோது, ராஜா அவனை நோக்கி: உன்னை ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாக வைத்தார்களோ? அதை விட்டுவிடு; நீ ஏன் வெட்டப்படவேண்டும் என்றான்; அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி அதை விட்டுவிட்டு: நீர் இப்படிச் செய்து, என் ஆலோசனையைக் கேளாமற்போனபடியினால், தேவன் உம்மை அழிக்க யோசனையாயிருக்கிறார் என்பதை அறிவேன் என்றான்.
மேற்கூறப்பட்ட வசனங்களில், அமத்சியா தேவனுடைய மனுஷன் சொன்ன வார்த்தைகளை கேட்டு, எப்பிராயீமரில் தன்னிடத்திற்கு வந்த சேனையை திருப்பி அனுப்பினான். அதனால் அவர்கள் யூதாவின் மேல் மிகுந்த கோபமூண்டு எரிச்சலோடே திரும்பி போனார்கள். அமத்சியாவோ, திடன் கொண்டு தன் ஜனங்களை உப்புப் பள்ளதாக்கிலே போய் சேயீர் புத்திரரில் பதினாயிரம் பேரை வெட்டினான். இவை என்னவென்றால் நம்முடைய உள்ளத்தில் பதுங்கி இருந்து பாவங்களை செய்ய வைக்கிற மாம்ச சிந்தைகள். அல்லாமலும் யூதா புத்திரர், பதினாயிரம் பேரை உயிரோடே பிடித்து, கன்மலையுச்சில் கொண்டுபோய் அவர்கள் நொறுங்கி போகதக்கதாக கன்மலையுச்சியிலிருந்து கீழே தள்ளி விட்டார்கள். என்னவென்றால் நம் உள்ளத்தில் ஆயிரம் பதினாயிரம் பொல்லாத எண்ணங்கள் ஒன்றின் பின் ஒன்றாக எழும்பும். அதனை நாம் கர்த்தரின் வசனத்தால் முறியடிக்க வேண்டும். அமத்சியாவோ கர்த்தருக்குரிய காரியங்கள் எல்லாவற்றிலும் செம்மையாக செய்யாமல் இருக்கிறதை வாசிக்க முடிகிறது. மேலும் தன்னோடே கூட வராதபடிக்கு தள்ளி விட்ட யுத்த புருஷர், சமாரியா துவக்கி பெத்தெரோன் மட்டுமுள்ள யூதா பட்டணங்களின் மேல் விழுந்து, அவைகளில் மூவாயிரம் பேரை வெட்டி திரளாய் கொள்ளையிட்டார்கள். அமத்சியா ஏதோமியரை முறியடித்து, சேயீர் புத்திரரின் தெய்வங்களை கொள்ளையிட்டு அவைகளை கொண்டு வந்து, ஜனங்களுக்கு முன்பாக பணிந்து தூபங்காட்டினான். அப்போது கர்த்தர் அமத்சியாவின் மேல் கோபம் மூண்டவராகி, ஒரு தீர்க்கதரிசியை அனுப்பி சொன்னது, தங்கள் ஜனத்தை உமது கைக்கு தப்புவிக்காதே போன ஜனங்களின் தெய்வங்களை நீர் நாடுவானேன். அமத்சியா தன்னோடு இப்படி பேசினதை கேட்ட ராஜா அவனிடத்தில் சொன்னது; உன்னை ராஜாவுக்கு ஆலோசனைகாரனாக வைத்தார்களோ? அதை விட்டு விடு; நீ ஏன் வெட்டபட வேண்டும் என்றான். அப்போது அந்த தீர்க்கதரிசி அதை விட்டுவிட்டு; நீர் இப்படி செய்து என் ஆலோசனையை கேளாதே போனபடியால் தேவன் உம்மை அழிக்க யோசனையாய் இருக்கிறார் என்பதை அறிவேன் என்றான்.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்கள் பிரகாரம் அமத்சியா முழுமையாக தன்னை தேவனுக்கு ஒப்புக்கொடுத்து செம்மையானவைகளை செய்யாமல் இருந்ததால் அவனுடைய உள்ளம் சத்துருவினால் வஞ்சிக்கப்படுகிறதை பார்க்கிறோம்.மேலும் தேவனுடைய மனுஷன் கர்த்தரின் வார்த்தைகளை கூறியும் அமத்சியா கேட்காமல் இருக்கிறதை கண்டு கர்த்தர் அழிக்க யோசனையாய் இருக்கிறார் என்றான். இவ்விதமாக சில இடங்களில் கர்த்தருக்குரிய காரியங்களை வைராக்கியத்தோடு செய்தாலும், அவன் இருதயம் மேட்டிமைக் கொண்டிருக்கிறதை வாசிக்க முடிகிறது. அவ்விதம் மேட்டிமையானதினால் கர்த்தரின் ஆலோசனையை தள்ளி விட்டான். மேலும் நம்மிலும் அநேகர் கர்த்தருக்குரிய காரியங்களில் வைராக்கியத்தோடு செய்தாலும், உள்ளமானது மேட்டிமையின் காரணமாக கர்த்தரின் ஆலோசனையை தள்ளி, சுய ஆலோசனை பிரகாரமாக தங்கள் வாழ்க்கையை கெடுத்துக்கொள்கிறார். ஆதலால் கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே ஒருபோதும் கர்த்தரின் ஆலோசனையை தள்ளிவிடாமல், அவர் ஆலோசனக்கு செவிக்கொடுத்து, நம் உள்ளம் வஞ்சிக்கப்படாதபடி எச்சரிப்போடு நாம் காணப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.